முகப் பராமரிப்பு

அற்புதமான எளிய தீர்வு! இரவு தூங்கும் முன் இப்படி செய்தால் சீக்கரம் வெள்ளையாவீங்களாம்! மறக்காம ட்ரை பண்ணுங்க

இன்று கருப்பாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் வெள்ளையாகுவதற்காக கண்ட கண்ட கிறீம்கள், ப்ளிச் பொருட்கள், கெமிக்கல் கலந்த கலவை என்பவற்றில் அனாவசியமாக பணத்தை செலவழித்து கொண்டு வருகின்றார்கள்.

கெமிக்கல் நிறைந்த பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்கும் போது, அந்த கெமிக்கல்கள் சருமத்தில் உள்ள ஆரோக்கியமான செல்களை அழித்து, சரும அழகை மோசமாக வெளிக்காட்டும்.

எனவே இதற்கு சிறந்த வழி என்றால் அது வீட்டிலேயே இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்தை அழகுப்படுத்துவதே ஆகும்.

அந்தவகையில் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி எப்படி இயற்கைமுறையில் சருமத்தை வெள்ளையாக்க முடியும் என்று இங்கு பார்ப்போம்.

  • ஒரு பௌலில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து முகத்தில் தடவும் முன், முகத்தை நீரால் கழுவி அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.
  • முதலில் துவரம் பருப்பை நீரில் சிறிது நேரம் ஊற வைத்த பின் அதை நன்கு அரைத்து, அத்துடன் சிறிது காய்ச்சாத பாலை சேர்த்து கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய வைக்கவும். இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி முகத்திற்கு செய்து வந்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
  • ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவ வேண்டும். முகத்தில் தடவிய கலவையானது நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • பிரச்சனையில்லாத சருமத்தைப் பெற தினமும் துளசி சாற்றினை முகத்தில் தடவி வாருங்கள்.
  • தேங்காய் எண்ணெயில் குளிர்ச்சி பண்புகள் நிறைந்துள்ளதால், தினமும் சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது. தேங்காய் எண்ணெயை விட நெய்யை கூட முகம் மற்றும் உடல் முழுவதும் தடவலாம்.
  • முகப்பரு பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் முகத்தில் வேப்ப எண்ணெயை தடவி வந்தால், ஒரு பெரிய மாற்றத்தைக் காலையில் காணலாம்.
  • எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாற்றினை கூட முகத்தில் தடவலாம். ஆரோக்கியமான சருமத்திற்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை இவற்றை சருமத்தில் தடவுவது நல்லது.
  • தினமும் பாலில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தை துடைப்பது, சருமத்திற்கு மிகவும் நல்லது. இது நல்ல கிளின்சர் போன்று செயல்படும். மேலும் பாலில் கொழுப்புக்கள் மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளதால், சருமத்திற்கு புதிய பொலிவு கிடைக்கும்.
  • கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவுவதோடு, அதை ஜூஸாக தயாரித்தும் குடிக்கலாம். வேண்டுமானால், டோனராக கூட இதைப் பயன்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button