சரும பராமரிப்பு

அழகு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரும் பாட்டி வைத்தியங்கள்!!!

07 1430982703 5 home remedies

சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் பல்வேறு அழகு சாதன பொருட்கள் தற்போது கடைகளில் அதிகம் கிடைக்கின்றன. அதற்கேற்றாற் போல் ஒவ்வொரு நாளும் அழகிற்கு கேடு விளைவிக்கும் பல்வேறு பிரச்சனைகளும் தீர்ந்த பாடில்லாமல் வந்து கொண்டே இருக்கின்றன.

எவ்வளவு தான் கடைகளில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அக்காலத்தில் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய சில வைத்தியங்களுடன் ஒப்பிடுகையில் இது வேஸ்ட் எனலாம்.

ஏனெனில் கடைகளில் விற்கும் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் இருப்பதோடு, தற்காலிக நன்மையைத் தான் வழங்கும். ஆனால் நம் பாட்டிமார்களின் வைத்தியங்களைப் பார்த்தால், அவற்றை பின்பற்றினால் நாம் நிரந்தர அழகைப் பெறுவதோடு, நமது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இங்கு அழகிற்கு கேடு விளைவிக்கும் பிரச்சனைகளும், அதற்கான பாட்டி வைத்தியங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

மஞ்சள் மஞ்சள்

பொடியுடன் சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகப்பரு உள்ள இடத்தில் மேல் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால், மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால், பருக்கள் நீங்கும்.

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவினாலும், பருக்கள் போய்விடும்.

வெந்தயம்

இரவில் படுக்கும் போது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை நன்கு மென்மையாக அரைத்து ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி சில மணிநேரங்கள் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் பொடுகு நீங்குவதோடு, முடியும் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

தயிர்

தயிரில் மிளகுத்தூள் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும் படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

வேப்பிலை

வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரைக் கொண்டு தலையை அலசினால், பொடுகு நீங்கும்.

கடலை மாவு

கடவை மாவுடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, முகம் பொலிவாகும்.

ஆரஞ்சு பழத் தோல்

ஆரஞ்சு பழத் தோலின் பொடியுடன் தேன் அல்லது தயிர் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய்ந்ததும், குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து வந்தால், முடியின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது நல்லெண்ணெயையும் சேர்த்து தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து கழுவினால், முடி மென்மையாக இருக்கும்.

பெட்ரோலியம் ஜெல்லி

கை மற்றும் கால்கள் வறட்சி அடைந்து, அசிங்கமாக காணப்படுகிறதா? அப்படியெனில் தினமும் கை மற்றும் கால்களுக்கு இரவில் படுக்கும் போது பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி, சாக்ஸ் அணியுங்கள்.

சர்க்கரை

கருமையான முழங்கை மற்றும் முழங்கால்களைப் போக்கி மென்மையாக்க, சர்க்கரையில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முழங்கை மற்றும் முழங்கால்களை ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கருமை நீங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button