மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…நிமோனியாவால் கஷ்டப்படுறீங்களா? சீக்கிரம் குணமாக இந்த உணவுகளை சாப்பிடுங்க…

நிமோனியா என்பது பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸால் நுரையீரல்களில் ஏற்படும் தொற்று ஆகும். இந்த தொற்றினால் நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள் வீக்கமடைகிறது. இது பொதுவாக அல்வியோலி என்று அழைக்கப்படுகிறது. ஆல்வியோலியில் திரவம் அல்லது சீழ் ஆகியவை நிரம்பி இருந்தால், அது சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவற்றை ஏற்படுத்தும்.

நிமோனியா பெரும்பாலும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் கொண்ட குழந்தைகளுக்கு மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களைத் தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நிமோனியாவை குணப்படுத்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதோடு ஒருசில உணவுகளும் நிமோனியா பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். இக்கட்டுரையில் நிமோனியா உள்ளவர்கள் அப்பிரச்சனையில் இருந்து சீக்கிரம் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது.

 

நிமோனியாவின் அறிகுறிகள்

ஒருவருக்கு நிமோனியா இருந்தால், அவர்கள் மார்பு வலி, மூச்சுத் திணறல், இருமல், சோர்வு, காய்ச்சல், குளிர், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளை சந்திப்பார்கள். இந்த அறிகுறிகளை கண்டால், உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

கோவிட்-19 மற்றும் நிமோனியா

SARS-CoV-2 என்று அழைக்கப்படும் புதிய கொரோனா வைரஸால் ஏற்படும் கடுமையான சிக்கல்களுள் நிமோனியாவும் ஒன்று. கோவிட்-19 நிமோனியா உள்ள சிலருக்கு கடுமையான சுவாசக் குழாய் நோய்க்குறி ஏற்படலாம். இதனால் சுவாசிப்பதற்கே கடினமாக இருக்கும். அந்த சமயங்களில், அந்த நோயாளிகளுக்கு சுவாசிக்க வெண்டிலேட்டர்கள் தேவைப்படலாம்.

எந்த வீட்டு வைத்தியம் மற்றும் உணவுகளும் நிமோனியாவைக் குணப்படுத்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு சரியான மருந்துகளுடன் மருத்துவமனையில் சிகிச்சையும் தேவை. இருந்தாலும், சில உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நிமோனியாவில் இருந்து மீள்வதை வேகப்படுத்த உதவும். இப்போது அந்த உணவுகள் எவையென்று காண்போம்.

முழு தானியங்கள்

முழு தானியங்களான திணை, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், பார்லி போன்றவற்றில் கார்போஹைட்ரேட் மற்றும் பி வைட்டமின்கள் ஆகியவை அதிகம் உள்ளன. இவை நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் காலத்தில் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்பாட்டில் பராமரிக்கவும், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கவும் செய்கிறது. கூடுதலாக, தானியங்களில் உள்ள செலினியம் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.

புரோட்டீன் உணவுகள்

நிமோனியா உள்ளவர்கள் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளான நட்ஸ், விதைகள், பீன்ஸ், இறைச்சி மற்றும் மீன்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. ஆகவே இவற்றை உட்கொள்ளும் போது, அது பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யவும், புதிய திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை நுரையீரலில் உள்ள தொற்றுக்களை சீக்கிரம் சரிசெய்ய உதவும். கேல், லெட்யூஸ், பசலைக்கீரை போன்றவை அதில் சிறந்த தேர்வுகளாகும். அதோடு, இந்த வகை உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக உள்ளதால், தொற்றுக்களை எதிர்த்துப் போராட உடலுக்கு பாதுகாப்பை வழங்கும்.6 fruits 1

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, பெர்ரிப் பழங்கள், கிவி போன்றவற்றில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதோடு, நிமோனியாவில் இருந்து விரைவில் குணமடையச் செய்யும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தொற்றுக்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடி பாதுகாப்பு அளிக்கும்.

தயிர்

தயிரில் உள்ள புரோபயோடிக்குகள் நிமோனியாவை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும். அதோடு குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும் செய்யும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button