மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு வயசு கூட ஆகாத குழந்தைக்கு மறந்தும் இந்த உணவுகளை கொடுத்துடாதீங்க…

புதிதாக பெற்றோரான பலருக்கு குழந்தையைப் பராமரிப்பது என்பது சவால் நிறைந்த ஒன்று என்றே கூற வேண்டும். அதிலும் தனிக் குடும்பத்தில் இருந்தால், அது இன்னும் கடினமான ஒன்றாக இருக்கும். குழந்தைப் பராமரிப்பு அவ்வளவு எளிதானது அல்ல. அதுவும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்று வரும் போது, பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழும்.

 

பொதுவாக குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர எந்த ஒரு உணவையும் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். 6 மாதம் கழித்தவுடன், குழந்தைக்கு புதிய உணவுகளை அறிமுகப்படுத்த பல பெற்றோர்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பர். ஆனால் அனைத்து உணவுகளையுமே குழந்தைக்கு கொடுத்துவிட முடியாது. குழந்தைக்கு புதிய உணவுகளை அறிமுகப்படுத்த ஆரம்பிக்கும் போது, எந்த மாதிரியான உணவுகளைக் கொடுக்க வேண்டும், எதை கொடுக்கக்கூடாது என்பதை தெரிந்து, பின்னரே கொடுக்க வேண்டும்.

இக்கட்டுரையில் ஒரு வயது ஆகாமல் எந்த உணவுகளை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது என சில உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

தேன்

தேன் மருத்துவ குணம் நிறைந்த ஆரோக்கியமான உணவுப் பொருள் தான். இருப்பினும் அதில் பாக்டீரியாவான குளோஸ்ட்ரிடியம் போட்லினம் இருக்க வாய்ப்புக்கள் உள்ளன. இது போட்லினம் என்ற நச்சுத்தன்மையை உருவாக்குகிறது. இந்த நச்சுத்தன்மை குழந்தைக்கு சோம்பலை உண்டாக்கும், சத்துக்கள் உறிஞ்சுவதை பலவீனப்படுத்தும், தசைகளை பலவீனப்படுத்தும் மற்றும் குழந்தைக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும் எந்நேரமும் குழந்தை எரிச்சலுணர்வையும், தலைச்சுற்றல் அறிகுறிகளுடனும் இருக்கும். இது ஒரு அரிய நோய்த்தொற்று தான். ஆனால் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முதல் பிறந்தநாள் வரை உங்கள் குழந்தைக்கு தேன் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

மாட்டுப் பால்

குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வரை தாய்ப்பலைத் தவறாமல் கொடுங்கள். ஏனெனில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையால் மாட்டுப் பாலில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் நொதிப் பொருட்களை செரிமானம் செய்ய முடியாது மற்றும் அதில் உள்ள கனிமச்சத்துக்கள் குழந்தையின் சிறுநீரகங்களில் பாதிப்பை உண்டாக்கும்.

வேர்க்கடலை

வேர்க்கடலை ஆரோக்கியமான மற்றும் புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். ஆனால் வேர்க்கடலை சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கக்கூடியது. எனவே வேர்க்கடலையை குழந்தைக்கு கொடுக்க நினைத்தால், ஒரு வயது ஆகாமல் கொடுக்காதீர்கள்.

கடல் உணவுகள்

கடல் உணவுகளில் குறிப்பாக இறால், நண்டு போன்றவை குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்கும். உங்கள் குழந்தைக்கு கடல் உணவுகளைக் கொடுக்க நினைத்தால், ஒரு வயதிற்கு மேல் கொடுங்கள். சில மீன்களான டூனா, சுறா மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றில் மெர்குரி அதிகம் உள்ளது. மெர்குரி அதிகம் உள்ள எந்த உணவுகளையும் குழந்தைக்கு கொடுக்கக்கூடாது. அப்படி கடல் உணவுகளை குழந்தைக்கு கொடுப்பதாக இருந்தால், மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு பிறகு கொடுங்கள்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் முழுமையாக நிறைந்துள்ளது. இதை குழந்தைக்கு மிதமான அளவில் கொடுக்கலாம். ஆனால் அலர்ஜி ஏதேனும் ஏற்படுவதை கவனித்தால், உடனே முட்டை கொடுப்பதை நிறுத்துங்கள்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது தான். ஆனால் அதில் சிட்ரஸ் அமிலம் மிகவும் அதிகமாகவும் மற்றும் வைட்டமின் சி சத்தும் உள்ளது. ஒரு வயதிற்கு முன் குழந்தைகள் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், அது வயிற்று உப்புசத்தை உண்டாக்குவதோடு, சில சமயங்களில் டயப்பர் பகுதியில் அரிப்பையும் உண்டாக்கும். எனவே சிட்ரஸ் பழங்களை மறந்தும் 1 வயதிற்கு முன் கொடுக்காதீர்கள்.

கோதுமை

கோதுமை உணவுகளை 7-8 மாதம் முழுமையாக நிறைவடைந்த பின்பு தான் கொடுக்க வேண்டும். அப்படியே கொடுத்தாலும், நன்கு கூழாக்கி கொடுக்க வேண்டும். அதற்கு முன், குழந்தைக்கு கோதுமை உணவால் அழற்சி ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டும்.

கோதுமை உணவுகளை 7-8 மாதம் முழுமையாக நிறைவடைந்த பின்பு தான் கொடுக்க வேண்டும். அப்படியே கொடுத்தாலும், நன்கு கூழாக்கி கொடுக்க வேண்டும். அதற்கு முன், குழந்தைக்கு கோதுமை உணவால் அழற்சி ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டும்.

கோதுமை உணவுகளை 7-8 மாதம் முழுமையாக நிறைவடைந்த பின்பு தான் கொடுக்க வேண்டும். அப்படியே கொடுத்தாலும், நன்கு கூழாக்கி கொடுக்க வேண்டும். அதற்கு முன், குழந்தைக்கு கோதுமை உணவால் அழற்சி ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை நன்கு மென்று உணவை விழுங்க ஆரம்பிக்கும் போதே திராட்சையை சாப்பிட கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்றில் எப்படி சென்றதோ, அப்படியே வெளியே வந்துவிடும். சில சமயங்களில் திராட்சை உணவுக் குழாயில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் சிறு துண்டுகளாக வெட்டி கொடுக்க வேண்டும்.

சர்க்கரை

ஒரு வயது ஆகும் வரை உங்கள் குழந்தையின் டயட்டில் சர்க்கரை ஒரு பகுதியாக இருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது பசியின்மையை உண்டாக்குவதோடு, டயட்டில் இடையூறை எற்படுத்தும். சர்க்கரை நல்ல சுவையைக் கொடுக்கக்கூடியது. அதோடு இது புற்றுநோயை உண்டாக்கக்கூயை உணவுப்பொருள்.எனவே இதை குழந்தைக்கு அறிமுகப்படுத்துவது தாமதப்படுத்துங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button