மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் முடிந்ததும் பெண்களுக்கு என்னென்ன உடல்ரீதீயான நன்மைகள் ஏற்படும் தெரியுமா?

மாதவிடாயில் பெண்கள் 45 வயது முதல் 50 வயதை காலம் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அப்போது மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மாதவிடாய் நிறுத்தம், உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நேர்மறையான, எதிர்மறையான எண்ணங்களும் தலைதூக்கும். அதேவேளையில் மாதவிடாய் நிற்கும்போது ஒருசில நன்மைகளும் ஏற்படத்தான் செய்கின்றன. என்னென்ன நன்மைகள் என்பதை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்…

* மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான பெண்கள் ஹார்மோன் சார்ந்த தலைவலியை சுமந்து கொண்டிருப்பார்கள். ஏனெனில் மாதவிடாய் சுழற்சியின்போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் சமநிலையற்று இருக்கும்.

அது தலைவலியை தூண்டிவிட்டுவிடும். 70 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் மாதவிடாயுடன் தொடர்புடைய ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் சுரப்பது குறைந்துவிடும். அதனால் தலைவலி பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

* மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பு கால்வலி, தலைவலி, பசி, எரிச்சல் போன்ற உடல் ரீதியான மாற்றங்களை அனுபவிப்பார்கள்.

சிலர் எளிதில் உணர்ச்சி வசப்படவும் செய்வார்கள். ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு இதுபோன்ற அறிகுறிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்காது. அன்றாட வேலைகளை நிம்மதியுடன் செய்யத்தொடங்குவார்கள்.

* மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கால் அவதிப்பட நேரிடும். அந்த சமயத்தில் வழக்கமான வேலைகளை செய்ய முடியாமல் சிரமப்படுவார்கள்.

வெளி இடங்களுக்கு செல்ல முடியாமலும் அவதிப்படுவார்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியாலும் நிறைய பேர் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். இத்தகைய துயரங்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் நிவாரணம் அளிக்கும்.

* மாதவிடாய் காலத்தில் உடலில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் இருக்கும் என்பதால் சிலருக்கு கர்ப்பப்பை கட்டிகள் உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் கர்ப்பப்பை பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் முடியும்.

* மாதவிடாய் நிற்கும்போது உடலில் பெரிய அளவில் மாற்றங்கள் நேரும். சிரமங்களையும் எதிர்கொள்ள நேரும்.

* மாதவிடாய் நின்றபிறகு உடல் ஆரோக்கியம் சீராக இருக்க சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். காபின் அதிகம் கலந்த பானங்களை பருகக்கூடாது.

* கொழுப்பு குறைவான உணவுகளை சாப்பிட வேண்டும். எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்கு கால்சியம், வைட்டமின் டி சத்து கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button