ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…40 வகையான கீரைகளும் நன்மையும்..!

கீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அந்த வகையில் 40 வகையான கீரைகளையும், அதில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களையும் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

* அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

* காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

* சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

* பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும்.

* கொடிபசலைக்கீரை – வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

* மஞ்சள் கரிசலை – கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

* குப்பைகீரை – பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

* அரைக்கீரை – ஆண்மையை பெருக்கும்.

* புளியங்கீரை – சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

* பிண்ணாருக்குகீரை – வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

* பரட்டைக்கீரை – பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

* பொன்னாங்கன்னி கீரை – உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

* சுக்கா கீரை – ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

* வெள்ளை கரிசலைக்கீரை – ரத்தசோகையை நீக்கும்.

* முருங்கைக்கீரை – நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

* வல்லாரை கீரை – மூளைக்கு பலம் தரும்.

* முடக்கத்தான்கீரை – கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

* புண்ணக்கீரை – சிரங்கும், சீதளமும் விலக்கும்.

* புதினாக்கீரை – ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

* நஞ்சுமுண்டான் கீரை – விஷம் முறிக்கும்.

* தும்பைகீரை – அசதி, சோம்பல் நீக்கும்.

* முரங்கைகீரை – சளி, இருமலை துளைத்தெரியும்.

* முள்ளங்கிகீரை – நீரடைப்பு நீக்கும்.

* பருப்புகீரை – பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

* புளிச்சகீரை – கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

* மணலிக்கீரை – வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

* மணத்தக்காளி கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

* முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

* சக்கரவர்த்தி கீரை – தாது விருத்தியாகும்.

* வெந்தயக்கீரை – மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

* தூதுவலை – ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

* தவசிக்கீரை – இருமலை போக்கும்.

* சாணக்கீரை – காயம் ஆற்றும்.

* வெள்ளைக்கீரை – தாய்பாலை பெருக்கும்.

* விழுதிக்கீரை – பசியைத்தூண்டும்.

* கொடிகாசினிகீரை – பித்தம் தணிக்கும்.

* துயிளிக்கீரை – வெள்ளை வெட்டை விலக்கும்.

* துத்திக்கீரை – வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

* காரகொட்டிக்கீரை – மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

* மூக்கு தட்டைகீரை – சளியை அகற்றும்.

* நருதாளிகீரை – ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button