மருத்துவ குறிப்பு

ஹெல்த் ஸ்பெஷல்! நீரிழிவை விரட்ட தமிழர்கள் ஓலைச்சுவடியில் எழுதிவைத்த இயற்கை பொருள்கள்?

நீரிழிவு நோய் என்பு ஒரு நாள்பட்ட மெட்டா பாலிக் டிஸ்ஆர்டர் ஆகும். இதனால் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து ஹைபர்கிளைசீமியா ஏற்படுகிறது.

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரின் வழியாக வெளியேறுதல் குளுக்கோஸயூரியா என்றழைக்கப்படுகிறது.

இப்படி அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படுவதால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து தாகம் எடுக்க ஆரம்பிக்கும். சர்க்கரை நோய் ஏதோ பிற்காலத்தில் வந்தது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வந்த நோய் என்றாலும் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. ஏனென்றால் நம் முன்னோர்கள் சரிவிகித உணவை, அதிலும் இயற்கையாகக் கிடைப்பதை அப்படியே சாப்பிட்டனர்.

ஆனாலும் கூட இதுபோன்ற பிரச்சினைகள் பின்னாட்களில் வரும் என்று உணர்ந்த சித்தர்கள் தங்களுடைய ஓலைச்சுவடிக் குறிப்புகளில் இந்த சர்க்கரை நோய் பற்றியும் அதற்குரிய ஆயுர்வேத இயற்கை முறை மருந்துகள் என்னென்ன என்று எழுதி வைத்துச் சென்றுள்ளனர்.

அதுபற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

ஆயுர்வேதம்

ஆயுர்வேதத்தில் சர்க்கரை நோயை மதுமேகா என்கின்றனர். மது – தேன், மேகா-சிறுநீர் என்று அர்த்தமாகும். எனவே சர்க்கரை நோய் ஆயுர்வேத முறைப்படி வாதத்தின் கீழ் வருகிறது. வாதம்

என்பதற்கு காற்று, வறட்சி என்று பெயர். எனவே தான் இது சீரண பிரச்சினையாக இதை சொல்லுகிறது. சீரணிக்காத கெட்ட பொருட்கள் கணையத்தில் தங்கி விடுவதால் இன்சுலின் சுரப்பு பழுதுபடுகிறது என்கிறது ஆயுர்வேதம்.

ஆயுர்வேத சிகிச்சை

இந்த முறைப்படி முதலில் நோயாளியின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். மருந்தும், நல்ல உணவுப் பழக்கமும் நன்மை தரும் என்கின்றனர். இதன் மூலம் பழுதடைந்த இன்சுலின்

செல்களை புதுப்பித்து இன்சுலின் சுரப்பை மேம்படுத்தலாம் என்கிறது ஆயுர்வேதம்.

டயாபெட்டீஸ் அறிகுறிகள்
  • சர்க்கரை சுவையுடன் சிறுநீர் கழித்தல்
  • அதிகப்படியான பசி அதிகப்படியான தாகம்
  • உடல் பருமன்
  • கால்களை இழத்தல்
  • சரும எரிச்சல்
  • கால் கை வலிப்பு
  • இன்ஸோமினியா பிடிப்பு
  • மலச்சிக்கல்
  • ஆயுர்வேத மூலிகைகள்

வேப்பிலை சர்க்கரை நோயாளிகளுக்கு வேப்பிலை மிகவும் நல்லது. இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை குறைக்கிறது. குளுக்கோஸை ஆற்றலாக பயன்படுத்தி கொள்கிறது. இதை நீங்கள் மாத்திரை வடிவில் கூட எடுத்து கொள்ளலாம். வேப்பிலை டீ போட்டு கூட குடித்து வரலாம்.

பட்டை

உங்களுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமாகி விட்டால் உடனே குறைக்க பட்டையை பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 1-6 கிராம் அளவில் பயன்படுத்தலாம். ட்ரைகிளிசரைடு, கெட்ட

கொலஸ்ட்ரால் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து விடுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நமக்கு உதவுகின்றன.

வெந்தயம்

வெந்தய விதைகளில் அல்கலாய்டுகள், கோனலைன், நிக்கோட்டினிக் அமிலம் மற்றும் குமாரினின் போன்றவைகள் உள்ளன. இதனுடைய நார்ச்சத்து தன்மையும் சர்க்கரை அளவை குறைக்கிறது.

நீரிழிவை கட்டுப்படுத்தும் ஆயுர்வேத பரிந்துரைகள்

உங்கள் உடல் எடையை சரியாக பேணுங்கள் சர்க்கரை சத்து உணவுகளான (கார்போஹைட்ரேட், முதிர்ந்த பழங்கள், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை) போன்றவற்றை பயன்படுத்துவதை குறையுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம் தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் மஞ்சள், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள் கொழுப்பு உணவை குறைக்கவும் ஆல்கஹால் அருந்துவதை தவிருங்கள் நன்றாக தூங்குங்கள் சூடான நீரில் சில சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்யலாம்.

காய்ந்த இஞ்சி மற்றும் ஏலக்காய் கூட சேர்த்து கொள்ளலாம். தினசரி வேலைகளை மாற்றுங்கள்.

யோகா

தினமு‌ம் சூரிய நமஸ்காரம் போன்ற யோகாசனங்களை 20 நிமிடங்கள் 10-12 தடவை செய்யவும். வலது மூக்கின் வழியாக 15-20 தடவை மூச்சை உள்ளே இழுத்து விடவும்.

மேற்கண்ட ஆயுர்வேத சிகிச்சை டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு நன்மை அளிக்கும். இன்னும் மேற்கொண்டு தகவல்கள் வேண்டுமென்றால் ஒரு ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button