தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முடி உதிர்வைத் தடுக்க மீன் எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?

மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிக அதிகமாக உள்ளது. ஆகவே மீன்களை உட்கொள்வதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் பல்வேறு உடல் செயல்பாடுகளை சீராக்கி, உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இதன் காரணமாக கூந்தல் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்று பெருமளவில் நம்பப்படுகிறது.

பல ஆராய்ச்சியாளர்கள் மீன் எண்ணெய்யை ஒரு சிறந்த கூந்தல் பராமரிப்பு உணவாக கூறுகின்றனர். இவை கூந்தலின் வேர்க்கால்களை புத்துணர்ச்சி பெறச் செய்து, கூந்தலை ஆரோக்கியமாக மாற்றி, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த மீன் எண்ணெய்யின் மகத்துவத்தை நாம் இந்த பதிவில் காணலாம்.

கூந்தலில் மீன் எண்ணெயின் நன்மைகள் :
கூந்தல் பராமரிப்பில் மீன் எண்ணெயின் சில குறிப்பிட்ட நன்மைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.4 fish 1595

* மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. மேலும் கூந்தலின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுகிறது.

* மீன் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உச்சந்தலையை கிருமி மற்றும் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

* வயது முதிர்வின் காரணமாக உண்டாகும் நரை போன்ற பாதிப்புகளைத் தடுக்க மீன் எண்ணெய் உதவுகிறது.

* ஆக்சிஜனேற்ற அழுத்தம் காரணமாக உண்டாகும் கூந்தல் சேதங்களைக் குறைக்க மீன் எண்ணெய் உதவுகிறது.

* முடி உதிர்வுக்கான டெலோஜன் காலகட்டத்தைக் குறைத்து முடி இழப்பைக் குறைக்க உதவுகிறது மீன் எண்ணெய் .

* முடி இழப்பை தூண்டும் ஹார்மோன்களை தடுக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உதவுகின்றன.

* கூந்தல் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை மீன் எண்ணெய்யில் உள்ளது.

* செபம் வெளிப்பாட்டை கட்டுப்படுத்தி, உச்சந்தலையில் எண்ணெய் சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

* முடி மெலிதாவதைத் தடுக்க மீன் எண்ணெய் உதவுகிறது.

கூந்தல் பராமரிப்பில் மீன் எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்துவது?
மீன் எண்ணெய் மாத்திரையை வாங்கி உட்கொள்வது மிகவும் சுலபம். ஆனால் அதே நேரம் இதனை தலையில் தடவுவது சற்று சிரமமான காரியம். இதற்கு காரணம் சகித்துக் கொள்ள முடியாத அதன் மணம். இருந்தாலும் கூந்தல் வளர்ச்சிக்கு மீன் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
உணவில் மீன் எண்ணெயை சேர்த்துக் கொள்ள சிறந்த வழி மீன்களான சல்மான், டூனா, சார்டின் மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றை உட்கொள்வது. இவற்றில் ஒமேகா 3 மற்றும் புரதச்சத்து உள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வேளையில், புரதம் முடியின் வேர்களை வலிமையாக்க உதவுகிறது. ஆகவே உங்கள் உணவில் மீன்களை இணைத்துக் கொள்ளுங்கள். மீன் எண்ணெயை ஸ்மூத்தி, ஷேக் அல்லது உங்களுக்கு பிடித்த உணவு வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம். மீன் எண்ணெயை புதிதாக பயன்படுத்தும் நோக்கம் இருந்தால், அதற்கான ஒவ்வாமை உங்களுக்கு உள்ளதா என்பதை அறிந்து பின்பு பயன்படுத்துங்கள். இதனால் பக்கவிளைவுகள் தடுக்கப்படும்.

மீன் எண்ணெய் மாத்திரைகள்
மீன் எண்ணெய்க்கான ஊட்டச்சத்தை உடலில் சேர்த்துக் கொள்ள மற்றொரு வழி மீன் எண்ணெய் மாத்திரை உட்கொள்வது. மீன் எண்ணெய் மாத்திரை மற்றும் மீன் எண்ணெய் அடர் திரவம் ஆகியவை இரண்டு வகையான வடிவங்களாகும். இவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

மீன் எண்ணெய் கூந்தல் மாஸ்க்
சைவ உணவு பிரியர்கள் மீன் எண்ணெய்யை உட்கொள்ள தயங்கலாம். இவர்களுக்கான ஒரு தேர்வு, மீன் எண்ணெய் ஹேர் மாஸ்க். ஆனால் இதன் மணத்தை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதன் தீர்வு மிகவும் அற்புதமாக இருக்கும். மீன் எண்ணெய் ஹேர் மாஸ்க் தயாரிக்க பின்வரும் வழியை பின்பற்றவும்.5 hairmask 159

* ஒரு கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் 2:1 என்ற விகிதத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

* இந்த கலவையை உங்கள் தலையில் தடவி, 30-45 நிமிடம் ஊறவிடவும்.

* பிறகு ஷாம்பு சேர்த்து தலையை அலசவும்.

* ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை பின்பற்றுவதால், சிறந்த முடிவு அடுத்த 3-4 வாரத்தில் உங்களுக்கு தெரியும்.

மீன் எண்ணெய் மாத்திரைகள் பாதுகாப்பானதா? அல்லது பக்க விளைவுகள் நிறைந்ததா?
பெரும்பாலானவர்களுக்கு மீன் எண்ணெய் மாத்திரை முற்றிலும் பாதுகாப்பானது. சிலருக்கு இது ஒவ்வாமையை உண்டாக்கலாம். மாத்திரை உட்கொண்டபின் தலைவலி, குமட்டல், வாய் துர்நாற்றம், அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button