மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா? அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு…

புற தமனி நோய் என்பது உடலின் இரத்த ஓட்டத்தில் உண்டாகும் ஒருவித பாதிப்பாகும். இந்நிலையில் சில தமனிகள் உடலுக்குள் குறைவான இரத்தத்தை செலுத்துகின்றன. புற தமனி நோய் பாதிப்பு ஏற்படும்போது பொதுவாக பாதங்கள் பாதிக்கப்படுகிறது. நடப்பதில் சிரமம், பாதங்களில் வலி போன்ற அறிகுறிகள் உண்டாகலாம்.

கால்கள் அல்லது கைகளின் தசைகளில் வலி அல்லது பிடிப்பு உண்டாவது இந்நோயின் அறிகுறியாகும். குறிப்பாக இந்த அறிகுறிகள் நடக்கும்போது, ஓடும்போதும் உண்டாகிறது. பாதங்களுக்கு ஓய்வு கொடுக்கும் போது இந்த வலி உடனடியாக மறைகிறது. தமனிகளின் இடத்தைப் பொறுத்து வலியின் இடம் அமைகிறது.

இந்த வலி உண்டாகும் பொதுவான இடம் குதிகால். தமனிகளின் சேதம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடுகிறது. மிதமான வலி முதல் தாங்கமுடியாத வலி வரை இந்த வேறுபாடு உள்ளது. இந்த வலியின் தீவிர நிலையில் அந்த நபரால் நடக்க முடியாமல், எந்த ஒரு உடல் செயல்பாட்டையும் மேற்கொள்ள முடியாமல் போகும்.

புற தமனி நோயின் அறிகுறிகள்:

ஏதாவது உடல் செயல்பாடு குறிப்பாக ஏணி மீது ஏறும் போது, நடக்கும் போது இடுப்பு, தொடை மற்றும் கணுக்கால் தசைகளில் வலி அல்லது பிடிப்பு ஏற்படலாம். இதர அறிகுறிகள் பின்வருமாறு:

* பாதங்களில் பலவீனம் அல்லது மரத்துப்போவது

* காலின் கீழ் பகுதி சில்லென்று குளிர்ச்சியை உணர்வது

* கால் விரல்கள் அல்லது பாதங்களில் உண்டான காயம் நீண்ட நாட்கள் குணமாகாமல் இருப்பது

* பாதங்களின் நிறத்தில் மாறுபாடு தோன்றுவது

* கால்களில் முடி வளர்ச்சி அல்லது முடி இழப்பு ஏற்படுவது

* கால் நகங்கள் நீளமாக வளர்வது

* பாதத்தின் நிறம் வெளிர் நிறமாவது

* பாதங்களில் துடிப்பு பலவீனமானது

* ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு தோன்றுவது

புற தமனி நோய் பாதிப்பு அதிகரிக்கும் போது, ஓய்வெடுக்கும் நிலையில் அல்லது படுத்துக் கொண்டிருக்கும் போதும் வலி உண்டாகலாம். இந்த வலி உங்கள் தூக்கத்தில் தொந்தரவை உண்டாக்கலாம். கட்டிலின் ஓரத்தில் காலைத் தொங்கவிடுவது, அறையில் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வது போன்றவற்றால் வலியில் இருந்து சிறிது நிவாரணம் பெற முடியும்.

புற தமனி நோய் உண்டாவதற்கான காரணங்கள்:

அதீரோசெலெரோசிஸ் என்னும் பெருந்தமனி தடிப்பு, இந்த புற தமனி நோய்க்கு காரணமாகும். இந்த நிலையில் தமனிகளின் சுவற்றில் கொழுப்பு படிந்து இரத்த ஓட்டத்தைக் குறைக்கும். பொதுவாக பெருந்தமனி தடிப்பு இதயத்துடன் தொடர்பு கொண்டது. இருந்தாலும் இந்த பாதிப்பு ஒட்டுமொத்த உடலில் தாக்கத்தை உண்டாக்கும். குறிப்பாக உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அனுப்பும் போது இந்த பாதிப்பு உண்டாகிறது. பொதுவாக இரத்த குழாய்களில் வீக்கம், கை கால்களில் காயம், அசாதாரண தசைநார் தொந்தரவுகள் அல்லது தசைகளின் அசாதாரண உடற்கூறியல் காரணமாக புற தமனி நோய் ஏற்படலாம். .

புற தமனி நோய்க்கான ஆபத்துக் காரணிகள்:

புற தமனி நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் சில காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

* புகை பிடிப்பது

* நீரிழிவு

* உடல் பருமன்

* உயர் இரத்த அழுத்தம்

* உயர் கொலஸ்ட்ரால்

* வயது அதிகரிப்பு, குறிப்பாக 50 வயதைக் கடந்தவுடன் இந்த பாதிப்பு உண்டாகிறது.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அல்லது நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோருக்கு இரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால் இந்த புற தமனி நோய்க்கான அபாயம் அதிகம் உள்ளது.

புற தமனி நோயை தடுக்கும் முறை அல்லது சிகிச்சை:

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான வழியைப் பின்பற்றி இந்த நோயைத் தடுக்க முடியும்.

* புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே கைவிடவும்.

* நீரிழிவு பாதிப்பு இருந்தால் உடனடியாக அதனை கட்டுப்பாட்டில் வைக்கவும்.

* உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மருத்துவ ஆலோசனைக்கு பிறகு ஒரு வாரத்தில் பல முறை 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.

* தேவைப்பட்டால் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

* கொழுப்பு குறைவாக இருக்கும் உணவுகளை உண்ணுங்கள்.

* சரியான உடல் எடையை பராமரியுங்கள்.

குறிப்பு

புற தமனி நோயை சரியாக நிர்வகிக்காமல் விட்டுவிடுவதால் உடலின் இரத்த ஓட்டம் குறையலாம். அதனால் இதயம், மூளை மற்றும் கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடலாம். புகையிலை பழக்கத்தை கைவிடுவது, உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்வது போன்றவை புற தமனி நோய்க்கு சரியான தீர்வைத் தரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button