மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தூக்கத்தில் கை மரத்துப் போகிறதா? அதுக்கு என்ன காரணம் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

நம்மில் பலர் தூக்கத்திலிருந்து விழித்தவுடன் அல்லது தூக்கத்தின் நடுவிலோ நம் கைகள் மரத்து போன்றதொரு உணர்வை அனுபவித்திருப்போம். சிலருக்கு கைகளில் உணர்வே இல்லாத நிலை போல இருக்கும், அதுவே சிலருக்கு ஊசி வைத்து குத்தியது போன்று இருக்கும். இந்நிகழ்வை மருத்துவர்கள் ப்ரேஸ்தேசியா என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

 

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் சில காரணங்களுக்காக நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதே சமயத்தில் சில காரணங்கள் நம் உடலில் ஏதோ ஒரு பிரச்சனைக்கான ஒரு எச்சரிக்கை மணி ஆகும். இந்த கட்டுரையில் தூக்கத்தில் கை மரத்து போவதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் மற்றும் குணப்படுத்தும் முறைகளைப் பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கைகளின் மேல் அழுத்தம் கொடுத்து தூங்குவது
கைகளின் மேல் அழுத்தம் கொடுத்து தூங்குவது
ஒருவருக்கு தூக்கத்தில் கைகள் மரத்து போவது பொதுவான மற்றும் நம் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையாவது அனுபவத்திருக்க கூடிய ஒரு நிகழ்வு. பொதுவாக ஒருவர் தூங்கும் போது தன்னை அறியாமலேயே தன் கைகளின் மேல் தலையை நன்கு அழுத்தம் கொடுத்து தூங்கி விடுவார். இதனால் கைகளில் உள்ள நரம்புகளுக்கு செல்லும் ரத்தம் ஓட்டம் தடைப்படுகிறது. நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால் அவை தற்காலிகமாக செயலிழக்கின்றன.

நரம்புகள் தான் நம் மூளையில் இருந்தும் ஏனைய உறுப்புகளுக்கும், ஏனைய உறுப்புகளிலிருந்து மூளைக்கும் கட்டளைகள் எடுத்து செல்லும் ஒரு கடத்தி. இவை செயலிழப்பதால் இந்த தகவல் பரிமாற்றத்தில் தடை ஏற்படுகிறது. எனவே நம்மால் கைகளை உணர முடிவதில்லை. இந்த உணர்வு வந்ததும், நாம் நம் கைகளை தனியாக எடுத்து வைக்கும் போது சுர்ரென்று நம் கைகளில் ரத்தம் பீய்ச்சி அடிக்கும் உணர்வை நாம் அனுபவித்த அடுத்த கொஞ்ச நேரத்தில் நம் கைகளை நாம் உணர ஆரம்பித்து விடுவோம். இதற்கு காரணம் நம் நரம்புகளுக்கு ரத்தம் சென்று அவை தன் கடத்தும் பணியை மறுபடியும் தொடர்வதால் தான்.

மணிக்கட்டு பகுதியில் ஏற்படும் உணர்ச்சியின்மை

மணிக்கட்டு பகுதிகள் கூட சில சமயங்களில் மரத்து போகின்றன. இதற்கு மணிக்கட்டின் முன்பகுதியில் உள்ள குறுகலான சுரங்கம் போன்ற அமைப்பின் வழியே செல்லும் ஒரு இடை நரம்பு அழுத்தப்படுவதே காரணம் ஆகும். இந்த நிகழ்விற்கு முழு முக்கிய காரணம் கைகளுக்கு தொடர்ச்சியான அதிக அசைவுள்ள வேலையை கொடுப்பது, அதாவது பியானோ போன்ற இசைக்கருவிகள் இசைப்பது தொடர்ச்சியாக வேகமாக தட்டச்சு செய்வது போன்ற சில வேலைகளால் இந்த உணர்வற்ற தன்மை ஏற்படலாம். அதே சமயத்தில் கருவுற்ற தாய்மார்கள் கூட இந்த தன்மையை சில நேரங்களில் உணரலாம்.

சர்க்கரை வியாதி/ சர்க்கரை நோய்

சர்க்கரை வியாதி உள்ளவருக்கு நரம்புகள் சேதாரம் ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதனை சர்க்கரை வியாதியால் வரும் நரம்பியல் பிரச்னை அல்லது ஆங்கிலத்தில் டயாபெட்டிஸ் நியூரோபதி என்று அழைக்கிறார்கள். சர்க்கரை வியாதி உள்ளவரின் உடம்பில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, நரம்பு நுனிகளை சிறிது சிறிதாக சேதப்படுத்துகிறது. பொதுவாக சர்க்கரை வியாதி உள்ள பெரும்பாலானோருக்கு கால்கள் மற்றும் பாதங்கள் மரத்து போகலாம், சில சமயங்களில் கைகள் கூட பாதிக்கப்படலாம்.

வைட்டமின் பி குறைபாடு

வைட்டமின் பி ஆனது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாத ஒரு சத்தாகும். வைட்டமின் பி குறைபாட்டினால் ஒருவருக்கு உடலில் நிறைய பிரச்சினைகள் உண்டாகின்றன. வைட்டமின் பி வகையில் ஒன்றான வைட்டமின் பி12 நம் மூளை மற்றும் நரம்புகள் இயங்குவதற்கு இன்றியமையாத ஒரு சத்து. இந்த சத்து குறைபாட்டால் ரத்தசோகை மற்றும் கை கால் முனைகளில் ஒருவித கூச்ச உணர்வு போன்ற மரப்பு தன்மை ஏற்படும். தூக்கத்தில் பொதுவாக அழுத்தம் கொடுப்பதால் வரும் மரப்புதன்மைக்கும், வைட்டமின் பி குறைபாட்டினால் வரும் மரப்புதன்மைக்கும் நம்மால் பெரிய வித்தியாசத்தை உணர முடியாது. வைட்டமின் பி குறைபாடு பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடமும், இதய நோய் மற்றும் ஆசன வாய் பிரச்சனை உள்ளவர்களுக்கும் பொதுவாக ஏற்படுகிறது.

தண்டுவட மரப்பு நோய்

தண்டுவட மரப்பு நோய் அல்லது மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டை மூடியுள்ள கொழுப்பான மையிலீன் உறையில் ஏற்படும் நோயாகும். அமெரிக்காவில் உள்ள தேசிய தண்டுவட மரப்பு நோய் கூட்டமைப்பின் ஆய்வின் படி கைகள் மரத்துப்போதல் தண்டுவட மரப்பு நோயின் முதல் மற்றும் முக்கிய அறிகுறி. இந்த மரப்புதன்மை பொதுவாக முகத்தில் ஏற்படும், இருப்பினும் எந்த இடத்தில தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து கைகள் மற்றும் கால்களிலும் கூட உணர்ச்சியற்ற தன்மை ஏற்படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சில வகையான கை மரத்து போகும் நிகழ்வை நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஏற்படுத்தலாம். உதாரணமாக தூக்கத்தில் தேவை இல்லாமல் கைகளுக்கு அழுத்தம் கொடுத்து தூங்குவதை தவிர்ப்பது, முறையான உடற்பயிற்சி செய்து கை மற்றும் மணிக்கட்டு பகுதிகளை உறுதியாக வைத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனை வராமல் பாதுகாக்கலாம். உணவை பொறுத்தவரை வைட்டமின் பி சத்து அதிகமுள்ள உணவுகளை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

சரி, எப்போது மருத்துவரிடம் போவது?

பொதுவாக நம்மில் பலருக்கு தூக்கத்தின் போது கைகளை அழுத்துவதாலே இந்த கை மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது. இருப்பினும் உங்களுக்கு இந்த உணர்வற்ற தன்மை அடிக்கடி வந்தாலோ அல்லது பார்வை மற்றும் பேசுவதில் குறைபாடு, முகத்தில் உணர்வற்ற தன்மை, நடக்கும் போது ஒரு ஒழுங்கற்ற தன்மை மற்றும் புரிந்து கொள்ள முடியதா ஒரு வலி உணர்வு இருப்பின், உடனடியாக அருகிலுள்ள ஒரு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

நினைவில் கொள்ளுங்கள்- வருமுன் காப்பதே சிறந்த மருந்து!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button