ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…ஆசைத் தீர தீர அன்னாசிப்பழம் சாப்பிடுபவர்களா? இனி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்….

அன்னாசிப்பழம் இனிப்பாகவும் சுவை மிக்கதாகவும் இருந்தாலும் கூட பல மருத்துவ காரணங்களுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்த பழத்தினால் பல பக்க விளைவுகளும் ஏற்படுவதுண்டு. இந்த பக்க விளைவுகள் சில சமயம் பேராபத்தினை கூட ஏற்படுத்தலாம்.

இதனை அளவாக சாப்பிட்டு வந்து, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் கடைப்பிடித்தால் மோசமான விளைவுகள் ஏதும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.

 

  • அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் லேசான அலர்ஜிகள் ஏற்படலாம்.
  • வீக்கம் மற்றும் தொண்டையில் ஏற்படும் கூச்ச உணர்வே அதற்கான அறிகுறிகளாகும். இதனை போக்க அன்னாசிப்பழ துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • கருச்சிதைவு ஏற்படும் இடர்பாட்டுடன் அன்னாசிப்பழம் அடிக்கடி சம்பந்தப்படுத்தப்படுகிறது.
  • கருவை சுமக்கும் பெண்கள் இந்த பழத்தை உண்ணாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இருப்பினும் பிரசவத்தின் ஆரம்ப கட்டங்களில் இல்லாமல் பிற கட்டங்களில் பெண்கள் இந்த பழத்தை உண்ணலாம்.
  • அன்னாசிப்பழம் சாப்பிடும் போது அது இரைப்பை குடலுக்குள் செல்லும் போது அல்கஹாலாக மாறி விடுகிறது.
  • இதனால் அதை உட்கொள்பவர்களுக்கு அது கீல்வாதத்தை தூண்டி விடும். அதனால் முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் உள்ளவர்கள் அன்னாசிப்பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • அன்னாசிப்பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • நீங்கள் ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் வலிப்புத் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தால், இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம்.
  • இது அல்கஹாலுடனும் செயலாற்றும். இவ்வகையான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், இந்த பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவ வல்லுனர்களை அணுகுவது நல்லது.
  • பழுக்காத அன்னாசிப்பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம். இது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும். கடுமையான வாந்தியையும் உண்டாக்கும்.
  • அன்னாசிப்பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது. இதனால் வாய் மற்றும் தொண்டையில் ஏற்படும் சளி உற்பத்தி பாதிக்கப்படும்.
  • அதனை உட்கொண்ட பிறகு வாயிலும் தொண்டையிலும் ஊறும் உணர்வு ஏற்படும். இதனால் சில பேருக்கு வயிற்று வலியும் கூட ஏற்படும்.
625.0.560.370.180.700.770. e1596886209523

இந்த பழத்தை உட்கொள்வதால் பல உடல்நல பயன்களும் இருக்கிறது. இருப்பினும் அளவாக சாப்பிட்டால் அது விஷமாக மாறாமல் இருக்கும். நல்லது நடக்க வேண்டுமென்றால் இந்த பழத்தை குறைவாகவே சாப்பிடுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button