அலங்காரம்மேக்கப்

கண்களின் அழகுக்கு…..

10-smokey-eye-tipsஇன்றைய தலைமுறையினர் மேக் அப்-பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் விதவிதமான மேக் அப் முறைகளை பயன்படுத்தி அவர்களின் அழகை பன்மடங்கு பொலிவுபடுத்தி கொள்கின்றனர்.

அவ்வகையில், தற்போது மிக பிரபலமாக இருப்பது கண்களுக்கான மேக் அப். இந்த வகை ” ஐ” மேக் அப்-பில் இருக்கும் சிறப்பு என்னவென்றால், கண்களின் அளவு, வசீகரம் போன்றவற்றை இது தேவைக்கேற்றாற்போல் மாற்றி காண்பிக்கும் தன்மைபடைத்தது.

“ஐ” மேக் அப்- பிற்கு உபயோகப்படுத்தப்படும் எளிய பொருட்கள் ஐ லைனர், ஐ ஷோடோ மற்றும் மஸ்காரா.

ஐ ஷேடோவில் லைட், மீடியம், டார்க் என்ற மூன்று வகை உண்டு. காலை நேரங்களில் லைட்டான கலரிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மீடியம் மற்றும் டார்க் கலரிலும் ஷேடோவை தடவலாம். கறுப்பாக இருப்பவர்கள் கண்களுக்கான மேக்அப்பில் அதிக கவனம் செலுத்தலாம்.

ஐ ஷேடோவில் ப்ளூ, பச்சை கலர்களை தவிர்த்து, பிரவுன், மெரூன், சாக்லெட் ஷேடுகளை உபயோகிக்கலாம்.

அடுத்து ஐ லைனர். ஐ லைனர் திக்காக போடுவதுதான் இப்போது பேஷன். உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருந்தால் கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷடோக்களை இடவும். பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள்.

கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள். சிறிய கண்களைக் கொண்டவர்கள்..நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள்.

பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள். இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.

மஸ்காரா உங்களின் ஐ லாஷை அழகாகவும், அடர்த்தியாகவும் காட்டும். நீளமான ஐ லாஷ்கள் இருந்தாலே அது முகத்திற்கு தனி அழகை தரும்.

இந்த எளிய அழகு பொருட்களையும், குறிப்புகளையும் பயன்படுத்தி உங்கள் கண்களுக்கு மேலும் அழகு சேருங்கள்.

Related posts

மேக்கப் போடுவதில் செய்யும் தவறால் ஏற்படும் சரும பாதிப்புகள்

nathan

வீட்டை அழகாக்க எத்தனையோ வழியிருக்கு

nathan

உங்களுக்கு தெரியுமா மாம்பழம் ஒரு அழகுசாதன பொருளா?

nathan

எவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் சரி இவற்றை எப்போதும் தெரிவிக்காதீர்கள்!…

sangika

வேனிட்டி பாக்ஸ்: பெர்ஃப்யூம்

nathan

மருதாணி … மருதாணி…

nathan

புதிய புடவை கட்டும் பெசன்கள்!….

sangika

திருமணத்தின் போது மணமகள் அழகாக தோற்றமளிக்க…:

nathan

அழகு படுத்துவதற்கான எளிய குறிப்புகள் (Skin Care Tips In Tamil)

nathan