அசைவ வகைகள்

இரும்புச்சத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை முட்டை பொரியல்

முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதுவரை அதனைக் கொண்டு பொரியல் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் அத்துடன் முட்டை சேர்த்து பொரியல் செய்து சுவைத்ததுண்டா? ஆம், முருங்கைக்கீரையுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்து சுவைத்தால் அட்டகாசமாக இருக்கும்.

மேலும் குழந்தைகளுக்கு இதனைக் கொடுப்பது மிகவும் நல்லது. சரி, இப்போது அந்த முருங்கைக்கீரை முட்டை பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

[center]22 1434959468 murungai keerai poriyalவெங்காயம் – 2 (நறுக்கியது)
பூண்டு – 3-4 பற்கள்
முட்டை – 1
வரமிளகாய் – 3-4
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் முருங்கைக்கீரையை நன்கு சுத்தம் செய்து, நீரில் அலசி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் முருங்கைக்கீரையைப் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு தூவி, மூடி வைத்து குறைவான தீயில் 15 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி, பொரியல் போன்று நன்கு வறுத்து, பின் அதில் வேக வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து, மிதமான தீயில் நன்கு கிளறி இறக்கி, தேங்காயைத் தூவினால், முருங்கைக்கீரை முட்டை பொரியல் ரெடி!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button