மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகளின் உடலைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!

பெண்களுக்கு கர்ப்ப காலம் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும். அத்தகைய கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலானது பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகும். அப்படி ஏற்படும் மாற்றங்கள் பற்றி சிலருக்கு நன்கு தெரிந்தாலும், பலருக்கு தெரியாமல் இருக்கும். ஆனால் அதில் பல்வேறு சுவாரஸ்யமான உண்மைகள் அடங்கியுள்ளன. மேலும் அந்த உண்மைகள் அனைத்தும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டும் உள்ளன.

உதாரணமாக, கருப்பை எவ்வளவு சிறியதாக இருக்கும். அக்கருப்பையினுள் குழந்தையானது வளர்ந்து, அக்கருப்பையை பலூன் போன்று எப்படி பெரியதாக்குகிறது என்று சற்று யோசித்துப் பாருங்கள். இதுபோன்று கர்ப்பிணிகளின் உடலைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், அனைத்தும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும். இங்கு அப்படி கர்ப்பிணிகளின் உடலைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலும்புகள் நகரும்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளின் இடுப்பு எலும்பானது ஒவ்வொரு வாரமும் விரிவடைய ஆரம்பிக்கும். இதனால் தான் கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் உடலானது அலுப்புடன் இருக்கிறது. அதுமட்டுமின்றி, விலா எலும்புகளும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு விரிவடையும்.

1/2 லிட்டருக்கும் அதிகமான தண்ணீர்

உங்களுக்கு தெரியுமா? கர்ப்ப காலத்தில் கருப்பையில் 1/2 லிட்டருக்கும் அதிகமான அளவில் தண்ணீரானது இருக்கும் என்பது.

இதயம் வளரும்

கர்ப்ப காலத்தில் பெண்களின் இதயமானது வளர ஆரம்பிக்கும். ஏனெனில் உடலின் கீழ் பகுதியில் உள்ள குழந்தைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் செல்லவும், உணவுகள் எந்நேரமும் கிடைக்கவும், அதிகமான அளவில் இரத்தத்தை கீழ் நோக்கி அழுத்த வேண்டியிருப்பதால் இதயமானது இயற்கையாக வளர ஆரம்பிக்கிறது.

அடர்த்தியான முடி

கர்ப்ப கால ஹார்மோன்களால் அதிகப்படியான கூந்தல் உதிர்தல் ஏற்படாமல், கூந்தலானது அடர்த்தியாக இருக்கும். அதற்காக ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம். பிரசவம் முடிந்ததும், அந்த கூந்தலானது அதிகம் உதிர ஆரம்பிக்கும்.

எலும்புகள் மென்மையாகும்

கர்ப்ப கால ஹார்மோன்கள் உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வதுடன், எலும்புகளை தளர்வடையச் செய்து, மிகவும் மென்மையாக மாற்றும்.

அதிக அளவில் இரத்தம் உற்பத்தியாகும்

இரண்டாவது மூன்று மாத காலத்தின் போது, கர்ப்பிணிகளின் உடலில் இரண்டு மடங்கு அதிகமாக இரத்தமானது இருக்கும். ஏனெனில் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு இரத்தத்தின் வழியாக தான் உணவுகள் செல்ல வேண்டிருக்கும். எனவே இக்காலத்தில் இரத்தத்தின் அளவு அதிகம் இருக்கும்.

சிறுநீர்ப்பை அழுத்தப்படும்

குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க வயிறு பெரியதாகும். இதனால் சிறுநீர்ப்பைக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்படுவதால், ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க செல்ல வேண்டிவரும்.

கருப்பை அதிகம் விரிவடையும்

உடலில் உள்ள ஒரு அருமையான உறுப்பு தான் கருப்பை. இந்த கருப்பையானது ரப்பர் போன்று குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப எவ்வித பாதிப்பும் இல்லாமல் விரிவடையும். அதில் ஒருசில இன்ச் பனிக்குடநீரும் இருக்கும்.

நரம்புகள் வெளிப்படும்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளின் உடலில் திடீரென்று நரம்புகளானது நன்கு வெளிப்படும். ஒருசில நேரத்தில் இவை பார்ப்பதற்கு பயங்கரமாக வெடிப்பது போல் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button