மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சின்னம்மைக்கான 6 அறிகுறிகள்!!!

சின்னம்மை என்பது வரிசெல்லா ஸோஸ்டர் என்ற வைரஸால் ஏற்படுவது. தொற்று நோயான இது பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடி தொடர்பு வைக்கும் போது மற்றவர்களையும் சுலபமாக தாக்கும். சின்னம்மை உள்ளவர்களுக்கு தும்மல் மற்றும் இருமல் எடுக்கும் போது, வெளியேறும் சிறுநீர்த்துளிகளில் இருந்து இது பரவும்.

சின்னம்மையின் முதல் அறிகுறி, அந்த கிருமியால் தாக்கப்பட்டு 15-16 நாட்களுக்கு பிறகு தெரிய வரும். சின்னம்மைக்கு முதன் முதலில் தென்படும் அறிகுறிகள் ஃப்ளூ போன்று தெரியும். அதனால் நாம் தவறான சிகிச்சையை எடுத்து கொண்டிருப்போம் அல்லது தாமதமான சிகிச்சையை எடுப்போம். உங்கள் குழந்தைக்கு கீழ்கூறிய ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், அவர்கள் சின்னம்மையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

அதிகமான காய்ச்சல்

நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அந்த கிருமியை கண்டறிந்த உடனேயே, அந்த கிருமியை விரட்டுவதற்கு, நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும். நம் உடலின் வெப்ப நிலை 100.4 டிகிரி F அல்லது அதற்கு மேலும் கூட உயரும். காய்ச்சலும் சளி போன்ற தொந்தரவும் சேர்ந்தால், சிறியவர்களை விட பெரியவர்கள் தான் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

தலைவலி

சின்னம்மை கொப்பளிப்பான் தெரிய வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாளைக்கு முன்னதாக மிதமான தலைவலி ஏற்படும். இதனோடு சேர்ந்து சளி, தொண்டை எரிச்சல், இருமல் மற்றும் தும்மல் போன்றவைகளும் ஏற்படும். கொப்பளிப்பான் உடல் முழுவதும் பரவ ஆரம்பிக்கும் நேரத்தில் இவையனைத்தும் மெதுவாக அதிகரிக்கும்.

அரிப்பை ஏற்படுத்தும் சொறிகள்

சின்னம்மைக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளான தலைவலி, இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் ஆகியவை அதனை ஃப்ளூ என தவறாக எண்ண வைக்கும். ஆனால் அரிப்பு ஏற்படுத்தக்கூடிய செந்நிற சொறிகள் உடல் முழுவதும் ஏற்பட தொடங்கும் வேளையில், அது கண்டிப்பாக சின்னம்மையின் அறிகுறியே. இந்த அரிப்பு மிதமானது முதல் அளவுக்கு அதிகமாகவும் இருக்கும். வேறு சரும பிரச்சனைகள் இருந்தால், இந்த அரிப்பு குழந்தைகளுக்கு மேலும் தொந்தரவை தரும்.

சின்னம்மை கொப்பளிப்பான்

அரிப்பு ஏற்பட்ட 12-14 மணிநேரத்திற்குள், இந்த செந்நிற சொறிகள், சிவந்த வட்ட வடிவிலான குறிகளாக மாறிவிடும். இந்த குறிகள் கொப்பளாமாக காட்சியளிக்கும். பொதுவாக இந்த கொப்பளங்கள் வயிறு, முகம், முதுகு மற்றும் நெஞ்சில் தான் முதலில் தென்படும். பிறகு கைகள், கால்கள் தலை மற்றும் வாய் என பரவத் தொடங்கும். இந்த கொப்பளங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். ஆனால் சராசரியாக உடல் முழுவதும் 200-250 கொப்பளங்களை காணலாம்.

பசியின்மை

பல குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, அதனுடன் சேர்ந்து அரிப்பும், காய்ச்சலும் கூட உண்டாகும். போதிய சத்து இல்லாதது மற்றும் குமட்டலால், பசியின்மை ஏற்படும். இதனால் உடல் எடையும் குறையத் தொடங்கும்.

ஒட்டுமொத்த சோர்வு

நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழந்துள்ளதால், குமட்டல் மற்றும் பசியின்மை ஏற்படும். இதனால் ஒட்டுமொத்தமாக சோர்வை ஏற்படுத்தும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button