சரும பராமரிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… சில பாத பராமரிப்பு டிப்ஸ்…

நமது உடம்பில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் பாகங்களாக இருப்பவை நமது பாதங்களாகும். முகத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அவ்வளவு முக்கியத்துவம் பாதங்களுக்கும் தர வேண்டியதும் அவசியமானதாகும். தினந்தோறும் ஓடுவது நடப்பது போன்ற வேலைகளை செய்யும் போது ஏற்படும் பாதிப்புகளை கவனித்து சரி செய்ய வேண்டும்.

நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ப, நமது கால்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இப்படிப்பட்ட முக்கியமான உறுப்பை கவனித்து உறுதியை கொடுத்து, போதுமான அளவு ஓய்வையும் தர வேண்டியது அவசியமானதாகும்.

கால் நகங்களை பொறுத்த வரையில் ஆண்கள் அதை ஒட்ட வெட்டி வைப்பதே சிறந்தது. ஆண்கள் பொதுவாக பல வேலைகளிலும், மற்ற விளையாட்டுகளிலும் பங்கு பெறுவதால், எப்போதும் அதை வெட்டி சுத்தமாக வைப்பது அவர்களின் கடமையாகும். இங்கு ஆண்களுக்கான சில முறையான பாத பராமரிப்பு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சுத்தப்படுத்துதல்

மிகவும் முக்கியமான மற்றம் தலையாய குறிப்பு என்ன தெரியுமா? தினசரி குளியலை தவிர அடிக்கடி கால்களை கழுவ வேண்டும். இப்படி கழுவும் போது உங்கள் பாதங்கள், விரல்களின் இடைவெளிகள், நகத்தை சுற்றியுள்ள இடங்கள் ஆகியவற்றை கவனித்து கழுவ வேண்டும். நகங்களுக்கு உள்ளே உள்ள அழுக்குகளை தேய்த்து கழுவி அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெடிக்கியூர்

பெடிக்கியூர் செய்வது என்பது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் செய்து கொள்ள முடியும். நீங்களும் அடிக்கடி பெடிக்கியூர் செய்து கொள்வது அவசியமானதாகும். இறந்த வறண்ட திசுக்களை ஸ்க்ரப் மூலம் நீக்க வேண்டியதும் அவசியமானதாகும். ஊட்டமிக்க எண்ணெய் அல்லது சருமப் பாதுகாப்பு எண்ணெய்களை வாங்கி நகங்களிலும் கால் பாதங்களிலும் எப்போதும் ஈரப்பதமூட்டி வைத்திருப்பதும் நல்லதாகும். நகங்களை ஒட்ட வெட்டி சுத்தமாக வைக்க வேண்டும்.

ஈரப்பதமூட்டுவது

தினசரி குளித்த பின் கால்களையும் பாதங்களையும் ஈரப்பதமூட்டி வைத்திருக்க வேண்டும். இதனால் ஈரமான தோல் ஊட்டத்தை ஈர்த்துக் கொண்டு கால் பாதங்களை எப்போதும் போதுமான ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். அது தவிர பெட்ரோலியம் ஜெல்லி அல்லது லோஷன் போட்ட பின் சாக்ஸ் அணிந்து படுக்கைக்கு செல்வது நீண்ட நேரத்திற்கு ஈரப்பதத்தை நிலைநிறுத்தும்.

கால்களை முழுதாக மூடும் செருப்பு

எப்போம் கால்களை முழமையாக மூடும் செருப்புகளை பயன்படுத்துவது சிறந்தது. இது ஈரப்பதத்தை எப்போதும் தக்க வைத்து இதமாகவும் மிருதுவாகவும் கால்களை வைத்திருக்கும். ஆனால் நாம் பயன்படுத்தும் சாக்ஸ் மற்றும் செருப்புகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதும் நமது கடமையாகும். வியர்வை மற்றும் அழுக்கு படிந்த செருப்புகளின் உட்புறம் நோய்த்தொற்றையும் கெட்ட வாடையையும் விளைவிக்க கூடியதாக இருக்கும்.

பாதங்களை மசாஜ் செய்வது

நமது கால்கள் பெரும் சுமையை தினமும் சுமக்க உதவுகின்றன. நம்மை முழுமையாக சுமப்பதே பெரும் சுமைதான். இதனால் கால்களுக்கு இதமூட்டும் மசாஜ் அவ்வப்போது தேவைப்படும். அது மட்டுமில்லாமல் கால்களில் பல நரம்பு மண்டலங்கள் முடிவடைகின்றன. ஆகையால் கால்களை மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள பல பாகங்கள் ஓய்வு நிலைக்கு சென்று இளைப்பாருகின்றன.

சரியான காலணியை தேர்வு செய்வது

அனைத்து வகை காலணிகளும் உங்களுக்கு ஏற்றவை கிடையாது. நல்ல தரத்துடன் தயார் செய்யும் காலணிகளை உருவாக்கும் நிறுவனத்திடமிருந்து இதை வாங்குவது நல்லது. இது கால்களுக்கு ஆறுதல் தருவது மட்டுமில்லாமல், அழகையும் சேர்த்து தருவதாக இருக்கும். உள்ளிருக்கும் பாகம் மிருதுவாக இருக்கின்றதா என்பதை எப்போதும் கவனித்து இத்தகைய பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். ஹீல்ஸ் செருப்புகளை தேர்வு செய்யும் போது அவை சரியாக சமநிலைபடுத்தும் காலணியாகவும், எந்த வித கேடும் விளைவிக்காத வகையிலும் அமைந்திருப்பதை பார்த்து வாங்குவது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button