32.1 C
Chennai
Sunday, May 11, 2025
625.500.560.350.160.300.05 5
Other News

தெரிஞ்சிக்கங்க…எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் இதனை மட்டும் செய்துவிடாதீர்கள்!

இன்றைய காலத்தில் அதிகமானோர் எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை தான் தேடி தேடி உண்ணுகின்றார்கள்.

பெரித்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது அது தீங்கு விளைவிக்கும்.

குறிப்பாக எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது, உடலின் முக்கிய உறுப்புக்களின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால் இதய நோய், அல்சைமர், புற்றுநோய், கல்லீரல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

அந்தவகையில்பொரித்த உணவுகளை உட்கொண்டால், அதனால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க ஒருசில செயல்களை மேற்கொண்டால் போதும்.

செய்யக்கூடாதவை
எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்ட பின் குளிர்பானங்கள், ஐஸ் க்ரீம் என்று எதுவாயினும் சாப்பிடக்கூடாது.
ஏனெனில் எண்ணெயில் பொரித்த உணவுகள் செரிமானமாவது கடினமாக இருப்பதால் குளிர்ச்சியான உணவுகளை உட்கொண்டல், இன்னும் சிரமமாகிவிடும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டதும், உடனேயே தூங்க செல்லக்கூடாது.
அவ்வாறு படுத்தால், அது வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகளால் அவஸ்தைப்படச் செய்துவிடும்.

செய்ய வேண்டியவை
உடலில் இருந்து அனைத்து எண்ணெயையும் வெளியேற்ற, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள். இதனால் உடல் வறட்சி தடுக்கப்படுவதோடு, மலச்சிக்கலும் ஏற்படாமல் இருக்கும்.

வெற்று நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம். இது உடலில் சேர்ந்துள்ள அனைத்து எண்ணெயையும், கொழுப்பையும் வெளியேற்றும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்டதும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைப் பருகிய பின், சுறுசுறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்ட பின் புரோபயோடிக்குகள் நிறைந்த உணவுகளான தயிர் அல்லது யோகர்ட்டை உட்கொள்ளுங்கள்.

ஒரு நாளில் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், அந்நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவறாமல் உட்கொள்ளுங்கள்.

Related posts

காரில் அழுவேன்..” சோகத்தை பகிர்ந்த எதிர்நீச்சல் நாயகி கனிகா!

nathan

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியில் இந்திய மூவர்ண கொடி

nathan

300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் விக்ரமின் கர்ணா டீசர்

nathan

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்..விசித்ரா உடைத்த உண்மைகள்.!!

nathan

நாய்களுக்கு உணவளித்து திருமணத்தைக் கொண்டாடிய ஒடிசா தம்பதி!

nathan

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அதிரடியாக களமிறங்கவுள்ள Lady சூப்பர் ஸ்டார்

nathan

தங்கள் பிரிவு பற்றி உருக்கமாக பேசிய தினேஷ் –சேர வாய்ப்பே இல்ல போலயே.

nathan

அரை குறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்!மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்!

nathan

“அந்த காட்சியில் நடித்ததற்கு நடிகர் விஜய் என்னை திட்டினார்..

nathan