30.6 C
Chennai
Saturday, Jul 27, 2024
625.500.560.350.160.300.053.800.90 26
ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்கள் இருட்டான அறையில் தூங்குபவரா ? அப்ப இத படியுங்க!

தூக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் அத்தியாவசயமான ஒன்றாகும்.

எது போன்ற அறையில் தூங்க வேண்டும், தூக்கத்தை கெடுக்கும் உணவுகள் என்ன போன்ற விடயங்கள் குறித்து காண்போம்.

8 மணி நேர தூக்கம்
ஒரு நல்ல தூக்க ஒழுக்கம் என்பது இரவு 10 மணிக்குப் படுத்து காலை 6 மணிக்கு கண் விழிப்பது. இதுதான் 8 மணி நேரத் தூக்கம்.

பிறந்த குழந்தைகள் 18 முதல் 20 மணி நேரம்வரை தூங்குவார்கள். 10 வயதில் 12 மணி நேரம், வளர்ந்தபிறகு 6 முதல் 8 மணி நேரம். இப்படி வயதுக்கு ஏற்ப தூக்க நேரம் குறையும். வயதாக ஆக இது 4 மணி நேரமாகக்கூடக் குறையும்.

அதனால், 8 மணி நேரத் தூக்கம் என்பது ஆரோக்கியத்துக்கான ஓர் ஒழுக்கம் என கூறலாம்.

இருட்டான அறையில் தூங்குவது
இருட்டான அறையில் உறங்கினால்தான் நம் மூளையில் இருக்கும் தூக்க ஹார்மோன் விடுபடும். சின்ன குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், மிகவும் மங்கலான இரவு விளக்குகளை எரிய விடலாம். மற்றபடி, இருட்டான, காற்றோட்டமான அறையில் தூங்குவது நலம் தரும்.

தூக்கம் குறைந்தால் ஏற்படும் பிரச்சினைகள்
உடல் பருமன், மனச்சோர்வு, ஹார்மோன் தொடர்பான பிரச்னைகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்க வாதம், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு அடிப்படை தூக்கமின்மை தான் என்பதை மறக்காதீர்கள்.

தூக்கம் வராமல் தடுக்கும் உணவுகள்
மசாலா அதிகம் சேர்த்த உணவுகள் தூக்கத்தைக் கெடுக்கும். தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னால், ஜீரணிக்க சுலபமான உணவுகள், தூக்கத்தை வரவழைக்கிற அமினோ அமிலம் இருக்கிற பால் அல்லது வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.

Related posts

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்கலையா? இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள்

nathan

இந்த பொருட்களை வீட்ல வெச்சுருக்காதீங்க… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தினமும் எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?

nathan

அபார்சன் ஏற்படமால் தவிர்ப்பது எப்படி?.!!

nathan

பிரசவத்திற்கு பின் இரத்தசோகை ஏற்படுவது ஏன்?…

nathan

குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…மகள்களுக்கு அம்மாக்கள் கற்றுக் கொண்டுக்க வேண்டிய முக்கியமான 8 விஷயங்கள்!

nathan

நம் முன்னோர்கள் மட்டும் எப்படி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று தெரியுமா?

nathan