ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு பால் பிடிக்காதா? இதோ பாலுக்கு இணையான சில உணவுப் பொருட்கள்!!!

நம் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு முக்கியத் தேவை கால்சியம். பால் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களில் தான் கால்சியம் அதிகமாக உள்ளது. ஆனால் சிலருக்குப் பாலே பிடிக்காது. அவர்களுக்குக் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது. என்ன செய்வது? கால்சியம் சத்து அதிகம் உள்ள மாற்று உணவுகளை நாட வேண்டியது தான், வேறு என்ன செய்ய?

மீன், நட்ஸ் வகை உணவுகள், உலர்ந்த பீன்ஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களில் கால்சியம் சத்து நிறைய உள்ளது. ஆகவே பால் பிடிக்காதவர்கள் இதுபோன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம். குறிப்பாக, மீன் சாப்பிடும் போது, அதன் எலும்புகளை நன்றாக மென்று தின்றால் தான் அதிக கால்சியம் கிடைக்கும்.

மேலும் இதுபோன்ற பொருட்களை உணவில் சேர்த்துச் சமைக்கும் போது, குறைந்த அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, குறைவான நேரத்திலேயே சமைக்க வேண்டும். அப்போது தான் கால்சியம் உடம்பில் ஒட்டும். இங்கு கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் சில கொடுக்கப்பட்டுள்ளன.

எள்

100 கிராம் எள்ளில் 975 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. நாம் சாதாரணமாக உணவில் சேர்த்துக் கொள்ளும் பொருள்தான் எள். ஒரு டேபிள் ஸ்பூன் எள்ளில் சுமார் 50 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. கால்சியம் தவிர மினரல்கள், வைட்டமின்கள் மற்றும் புரதச் சத்துக்களும் எள்ளில் உள்ளன.

பாதாம் பருப்பு

100 கிராம் பாதாம் பருப்பில் 264 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. பால் குடித்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. உடல் வலுப்பெற நாம் நிறைய பாதாம் பருப்பை சாப்பிட வேண்டியது அவசியம். அரை கப் பாதாம் பருப்பு 500 கலோரி தேறும்.

சைனீஸ் முட்டைக்கோஸ்

100 கிராம் சைனீஸ் முட்டைக்கோஸில் 105 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. கால்சியம் சத்து அதிகமுள்ள சைனீஸ் முட்டைக்கோஸை பச்சடியில் கலந்தும் சாப்பிடலாம்.

மத்தி மீன்

100 கிராம் மத்தி மீனில் 382 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. வைட்டமின் டி அதிகமுள்ள இந்த மீனை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

ஆரஞ்சு ஜூஸ்

அரை கப் ஆரஞ்சு ஜூஸில் 175 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. ஒரு ஆய்வின் படி கால்சியம் சிட்ரேட் அதிகமுள்ள ஆரஞ்சு ஜூஸ் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது என்று சொல்கிறது.

வெண்டைக்காய்

100 கிராம் வெண்டைக்காயில் 81 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. கால்சியம் தவிர வேறு சில சத்துக்களும் நிறைந்துள்ள வெண்டைக்காயை சமைத்துத் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியே சாப்பிட்டால் இன்னும் நல்லது.

டோஃபு

100 கிராம் டோஃபுவில் 350 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. பாலாடைக்கட்டி போல் திரண்டிருக்கும் டோஃபுவில் கால்சியம் சத்துதான் டாப். சமையலுக்குப் பயன்படுத்தும் போது, இதை நன்றாகப் பிழிந்து அதில் இருக்கும் நீரை நீக்கிவிட வேண்டும். இதில் எண்ணெயும் அதிகம் சேர்க்கக் கூடாது.

சால்மன்

அரை டின் சால்மன் மீனில் 440 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. எல்லா மீன்களிலும் உள்ளது போலவே சால்மன் மீனிலும் கால்சியம் அதிகம் உள்ளது. வழக்கம் போல் இதன் எலும்புகளையும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

சியா விதைகள்

100 கிராம் சியா விதைகளில் 631 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. நாள்தோறும் நமக்குத் தேவைப்படும் கால்சியச் சத்தில் 18 சதவீதம் சியா விதைகளிலிருந்தே கிடைக்கிறது. எலும்பு & பற்களின் வளர்ச்சிக்கும், உடல் எடையை வேகமாகக் குறைக்கவும் இந்த விதை பயன்படுகிறது.

boldsky

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button