ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…அளவுக்கு அதிகமாக முந்திரி சாப்பிடுவதால் இவ்வளவு பக்க விளைவுகளா?

அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆரோக்கியமான உணவுப் பொருளை கூட அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையைத் தான் சந்திக்க நேரிடும்.

முந்திரியை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதைப் படித்து இனிமேல் முந்திரியை அளவாக சாப்பிடுங்கள்.

 

  • ஒரு அவுன்ஸ் உப்பில்லாத முந்திரியில் 5 மில்லிகிராம் சோடியம் உள்ளது. ஆனால் ஒரு அவுன்ஸ் உப்புள்ள முந்திரியில் 87 மில்லிகிராம் சோடியம் உள்ளது. எனவே அளவுக்கு அதிகமாக உப்புள்ள முந்திரியை உட்கொண்டால், அது பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் அல்லது இதய நோய்க்கு வழிவகுக்கும்.
  • முந்திரியில் மக்னீசியம் அதிகம் உள்ளது. ஒரு அவுன்ஸ் முந்திரியல் 82.5 மில்லிகிராம் மக்னீசியம் உள்ளது.
  • ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளான இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு அன்றாடம் மருந்து மாத்திரைகளை எடுப்பவர்கள் முந்திரியை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள மக்னீசியம், இந்த மருந்துகளின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, நீர்க் கோர்வை மற்றும் குமட்டல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
  • முந்திரியில் உள்ள மக்னீசியம் நீர்பெருக்கி மருந்துகள், தைராய்டு மருந்துகள் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளில் இடையூறை ஏற்படுத்தக்கூடியவை.
  • முந்திரி ஆரோக்கியமான ஒன்றாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது உடல் பருமனை அதிகரித்துவிடும். ஒரு அவுன்ஸ் முந்திரியில் 163 கலோரிகள் மற்றும் போதுமான நல்ல அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது.
  • நல்ல கொழுப்புக்களைக் கூட ஒருவர் அளவுக்கு அதிகமாக எடுத்தால், அது உடல் பருமனை அதிகரித்துவிடும். ஒருவரது உடல் எடை அளவுக்கு அதிகமானால், அதனால் சர்க்கரை நோய், புற்றுநோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை, மெட்டபாலிச கோளாறு, இதய நோய், பக்கவாதம் மற்றும் இதர பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
  • முந்திரியை ஒருவர் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், ஒரு நாளைக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கக்கூடிய இதர உணவுகளை உண்ண முடியாமல் போகும். முந்திரி என்ன தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், போதுமான காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் போன்றவற்றையும் உட்கொள்ள வேண்டும்.
  • உப்புள்ள முந்திரியில் சோடியம் அதிகம் இருப்பதால், ஒரே நேரத்தில் அதிகமான அளவில் முந்திரியை உட்கொண்டால், அது உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழிவகுக்கும். பொதுவாக இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், உப்புள்ள சோடியத்தை மிதமான அளவில் சாப்பிடுவதே நல்லதல்ல.
  • ஆகவே எப்போதும் முந்திரியை சாப்பிடுவதாக இருந்தால், உப்பில்லாத சோடியத்தை உண்ணுங்கள்.
  • ஏற்கனவே ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலி உள்ளவர்கள், முந்திரியை அதிகமாக சாப்பிட்டால், நிலைமை மேலும் மோசமாகும். நட்ஸில் அமினோ அமிலங்களான பீனில்எத்திலமைன் மற்றும் டைராமைன் போன்றவை உள்ளது.
  • இவை பொதுவாக இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவும். ஆனால் யார் இதற்கு சென்சிடிவ்வானவர்களோ, அதில் உள்ள அமினோ அமிலங்கள் காரணமாக கடுமையான தலைவலியை அனுபவிக்கக்கூடும்.
  • முந்திரியில் ஆக்ஸலேட் உப்புக்கள் உள்ளன. இவை கால்சியம் உறிஞ்சுவதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். உடலால் கால்சியத்தை உறிஞ்ச முடியாவிட்டால், அது சிறுநீரகங்களில் கற்களாக உருவாகிவிடும்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button