மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…உங்கள் குழந்தை எப்போது தண்ணீர் குடிக்க ஆரம்பிக்கலாம்?

வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை இன்றியமையாமையில் ஒன்று தான் தண்ணீர். நாம் உயிர் வாழ தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் இந்த உலகத்திற்கு குழந்தை வந்த பிறகு, உங்களுக்கு தோன்றாத பல கேள்விகள் அப்போது எழும். ஏன், உங்கள் குழந்தை எப்போது தண்ணீர் குடிக்க ஆரம்பிக்கலாம் என்ற எளிய கேள்வி கூட உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக புதிதாக பெற்றோரானவர்கள் ஒவ்வொரு வாரமும் மருத்தவரை அணுகி பல சந்தேகங்களை கேட்டு வருவார்கள். குழந்தைகளின் உணவு பழக்கத்தை பற்றி அவர்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.

தண்ணீரை பொறுத்த வரை, குழந்தைகளுக்கு சில விசேஷ தேவைகள் இருக்கிறது. புதிய உயிருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பது தொடர்பாக சில தகவல்களை பற்றி இங்கே நாங்கள் விவரித்துள்ளோம்.

* 6 மாத காலம் வரை பிறந்த குழந்தைக்கு தண்ணீர் தர தேவையில்லை. தாய்ப்பாலில் 80 சதவீத தண்ணீர் உள்ளதால், குழந்தையின் தண்ணீர் தேவை தானாகவே நிவர்த்தியாகும்.

* திட்டப்படி குழந்தைக்கு சாப்பாடு கொடுத்தாலும் கூட குழந்தைக்கு தனியாக தண்ணீர் கொடுக்க தேவையில்லை. பாலை தண்ணியாக்க நினைத்து அதிக தண்ணீரை சேர்த்து விடாதீர்கள்.

* உங்கள் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகி விட்டால், தண்ணீரை சின்ன கரண்டியில் உங்கள் குழந்தைக்கு சொட்டு சொட்டாக ஊட்டலாம். குழந்தைக்கு பால் கொடுக்கும் ஒவ்வொரு முறையும் அதற்கு சிறிதளவு தண்ணீரை ஸ்பூனில் வழங்கலாம். உங்கள் குழந்தை திண்மமான உணவை உண்ண ஆரம்பித்து விட்டால், தண்ணீர் கொடுக்கும் அளவை அதிகரியுங்கள்.

* சரி, உங்கள் குழந்தை எவ்வளவு தண்ணீர் குடிக்கும் என்பது உங்களுக்கு எழும் மற்றொரு கேள்வி. உங்கள் குழந்தைக்கு அளவுக்கு அதிகமான தண்ணீரை கொடுக்க கூடாது. இது உடலில் உள்ள சோடியம் மற்றும் இதர எலெக்ட்ரோலைட்ஸ் அளவை சமமின்மையாக்கி விடும். இதனை தண்ணீர் நஞ்சாதல் என கூறுவார்கள்.

* திண்மமான உணவினை உண்ண ஆரம்பித்தவுடன் உங்கள் குழந்தை மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டால், அதற்கு காரணம் அது போதிய தண்ணீர் பருகவில்லை. அதனால் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.

* குழந்தைக்கு எப்போது தண்ணீர் தவிக்கிறதோ அப்போது தண்ணீர் கொடுங்கள். இதனை விட எளிய வழி இருக்க முடியாது. தாய்ப்பால் குடிப்பதை குழந்தை நிறுத்தி விட்டாலம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அதற்கு கொஞ்சம் தண்ணீர் சொட்டுக்களை கொடுக்க வேண்டும்.

* உங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகி விட்டால், சாதாரண மக்களை போல் அவர்களும் தண்ணீர் குடிக்க தொடங்கி விடலாம். அதற்கு பிறகு அவர்கள் விருப்பபட்ட அளவிற்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளட்டும்.

தண்ணீர் குடிக்க சொல்லி குழந்தையை வற்புறுத்தாதீர்கள். காரணம் அவர்கள் விருப்பத்திற்கேற்ப அவர்களை தண்ணீர் பருக விடுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button