New Project 2020 02
Other News

அடேங்கப்பா! வைரலாகும் விஜய்யின் கல்லூரி கால புகைப்படம்!

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தளபதி விஜய்க்கு ரசிகர்களின் எண்ணிக்கை கடல் போன்றது. இவரின் படமோ, அல்லது அது சம்பந்தமான அப்டேட் வெளியாகும்போது அதனை இணையத்தில் மாஸாக ட்ரெண்ட் செய்வார்கள். இதற்கிடையே தற்போது ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதோடு மாளவிகா மோகனன்,  ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜய்யின் நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத்.


இதன் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்கத்தால் ’மாஸ்டர்’ படத்தின் வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது.  முன்னதாக ஏப்ரல் 9-ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், விஜய்யின் சில பழைய புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகின. அதில் குறிப்பாக லயோலா கல்லூரியில் விஜய், எடுத்துக்கொண்ட குரூப் ஃபோட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதனை நடிகர் சஞ்சீவ் வெளியிட்டிருந்தார். கல்லூரி நாட்களையும்,  நண்பர்களையும் நினைவு கூறுவதாக அந்த படத்துடன் குறிப்பிட்டிருந்தார் சஞ்சீவ். படத்தில் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, வித்தியாசமாக உடை அணிந்து ஸ்டைலிஷாக, காட்சியளிக்கிறார் விஜய். ரசிகர்கள் இந்த படத்தை வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Related posts

வெளிவந்த தகவல் ! பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அதிரடியாக களமிறக்கப்படும் வனிதா! சூடுப்பிடிக்குமா ஆட்டம்?

nathan

டீக்கடை நடத்தி வெற்றி பெற்ற ‘கிராஜுவேட் சாய்வாலி

nathan

வரதட்சணை கேட்டு தொந்தரவு-மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மாமனார்

nathan

ஆனந்த் அம்பானி கல்யாணத்திற்கு 5000 கோடி செலவு, மொத்த லிஸ்ட்

nathan

தெரிஞ்சிக்கங்க…சீரகம் அதிகமா சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள்லாம் வருமாம்!

nathan

திருமணங்களைச் சிதைக்கிறது – கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு!

nathan

உலகம் மூன்று நாட்களுக்கு இருளில் மூழ்கும்: பிரபல ஜோதிடர்

nathan

சிரஞ்சீவியை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்-மன்சூர் அலிகான் பற்றி எல்லாம் நீங்க பேசலாமா?

nathan

‘இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிராமம்’ -மாறியது எப்படி?

nathan