முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உடனே மேக்கப்பை பொருட்களை மாற்ற வேண்டும் என்பதை அறிய உதவும் 7 அறிகுறிகள்!!!

அழகை அதிகரித்து வெளிக்காட்ட பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களை ஒரு கட்டதில் மாற்ற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஒருவேளை உங்களுக்கு எப்போது எந்த அழகு சாதனப் பொருளை மாற்ற வேண்டும் என்று தெரியவில்லையோ தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் மேக்கப் செய்து கொள்வது நம்மை அழகாகத் தோற்றமளிக்கச் செய்தாலும், எந்த நேரத்தில் மேக்கப்பை மாற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டியதும் ஒரு முக்கியமான அழகு குறிப்பாக உள்ளது. எனவே இங்கு தரப்பட்டுள்ள குறிப்புகளை மனதில் வைத்துக் கொண்டால், உங்களை பல பிரச்சனைகள் வராமல் காப்பாற்றுவதோடு, அழகாக தோற்றமளிக்கவும் செய்யும்.

பல மாதங்களாக பயன்படுத்தியவை

சில அழகு சாதன பொருட்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பட்டுக் கொண்டிருக்கும். கண்களுக்கு மேக்கப் செய்யும் பொருட்களை அவற்றைத் திறந்த 2 அல்லது 3 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்பது வல்லுநர்களின் அறிவுரையாகும். ஏனெனில் காலாவதியானவற்றைப் பயன்படுத்துவது கண்களில் தொற்றுகள் ஏற்படும் அபாயத்திற்கு வழிவகுக்கும். மிகவும் குறைவான நாட்களுக்கே பயன்படுத்தக் கூடிய கண் மேக்கப் சாதனமாக மஸ்கார இருப்பதால், அதை எப்பொழுது திறந்தோம் மற்றும் அது எப்பொழுது விற்பனைக்கு வந்தது என்று கவனித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும். எனவே, மஸ்காராவை பயன்படுத்த துவங்கிய நாளை குறித்து வைத்துக் கொள்ளவும். சில மாதங்களில் இதனை மாற்ற வேண்டும் என்று தோன்றும் போது, நீங்கள் குறித்து வைத்த தேதி சரியான முடிவெடுக்க உதவும்.

வித்தியாசமான வாசனை

மேக்கப் சாதனம் அது கெட்டுப் போவதற்குள் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அதன் வாசனையை சற்றே கவனித்துப் பாருங்கள். சற்றே வித்தியாசமான மணத்தை அந்த பொருளில் நீங்கள் நுகர நேர்ந்தால், உடனே தூக்கி எறிந்து விடவும். திரவ மற்றும் பவுடர் வகை மேக்கப் சாதனங்கள் ஆகிய இரண்டிற்குமே இது பொருந்தும். மேக்கப் பொருட்களை வாங்கி பயன்படுத்த துவங்கிய பின்னர், அவற்றில் பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகத் துவங்கும். இதன் காரணமாக சரும பிரச்சனைகளும், தொற்றுகளும் ஏற்படும். எனவே, உங்களுடைய பழைய மேக்கப் பொருளை மாற்ற யோசிக்க வேண்டாம்.

உருமாற்றம்

நீங்கள் பயன்படுத்திய அற்புதமான லிப்ஸ்டிக் விசித்திரமான திரவமாக அல்லது மெழுகு போல மாறிவிட்டாலோ அல்லது நீங்கள் பயன்படுத்திய ஐ-லைனர் மிருதுவாகவும், சரியான கோடாகவும் வராமல் சண்டித்தனம் செய்தாலே, அதற்கு மாற்றாக புதிய லிப்ஸ்டிக் அல்லது ஐ-லைனரை நாடிச் செல்லலாம். ஏனெனில், அழகு பொருட்களில் உருமாற்றம் ஏற்படும் போது, அதன் குணம் மாறி விட்டதை உணர முடியும். மிகவும் பிடித்தமான அந்த லிப்ஸ்டிக்கை மாற்றுவது சில நேரங்களில் வருத்தம் தரும் விஷயமாக இருந்தாலும், மாற்றுவதால் அபாயத்தை தவிர்க்க முடியும் என்பது நல்ல விஷயம் தான்!

வண்ணங்கள் மாறுதல்

லிப் க்ளாஸ்கள் போன்ற குறிப்பிடத்தக்க அழகு சாதனப் பொருட்களின் வண்ணம் மாறிவிட்டால், அந்த பொருள் காலாவதி ஆகிவிட்டது என்று பொருளாகும். ஏனெனில், லிப் க்ளாஸ் டியூப்களில் டபுள் டிப் ஏற்படுமாதாலால், அவற்றை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். காலம் கடந்த அழகுப் பொருட்களில் வேகமாக பல்கிப் பெருகும் பாக்டீரியாக்கள், உங்கள் சருமத்தில் அரிப்பு மற்றும் வெடிப்புகள் வரவும் செய்துவிடும். இதுப்போன்ற நேரங்கள் தான், புதிய லிப் க்ளாஸ் வாங்க ஏற்றவையாகும் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

பிரிந்து விடுதல்

ஃபௌன்டேஷன் போன்ற திரவ மேக்கப் சாதனங்களில் தான் பிரிந்து விடுதல் (திரிந்து விடுதல்) போன்ற பிரச்சனைகள் வருகின்றன. இவ்வாறு திரிந்து போன மேக்கப் சாதனங்களை நீங்கள் உடனடியாக தூக்கி எறிய வேண்டும். இந்த பொருட்களால் ஏற்படும் சில விளைவுகள் நம்மை பயமுறுத்தக் கூடியனவாக உள்ளன. சீழ்களை வரவழைக்கும் ஸ்டெஃபிலோகோக்கஸ் போன்ற தொற்றுகள் மற்றும் சதைகளை அரிக்கும் நோய்கள் ஆகியவை இந்த விளைவுகளை பறைசாற்றும் இரண்டு எடுத்துக்காட்டுகளாகும். எனவே, நீங்கள் பயன்படுத்தும் மேக்கப் சாதனம் திரிந்து போய் இருப்பதை பார்த்தால், அதனை தவிர்க்க எள்ளளவும் தயக்கம் காட்ட வேண்டாம். உடனே தூக்கி எறிந்து விட்டு, புதியதை வாங்கவும்.

வாங்கிய நாள் நினைவில்லையே!

பயன்படுத்திக் கொண்டிருக்கும் நெயில் பாலிஷ் எப்பொழுது வாங்கியது என்று நினைவில்லை. இவ்வாறான சூழல்களில், உங்களுடைய மேக்கப் பையை பாருங்கள். அதிலுள்ள ஐ ஷேடோ, பென்சில்கள், ப்ளஷ், பாலிஷ் அல்லது எதையெல்லாம் வாங்கிய நாள் நினைவில்லை என்று கவனித்து வைத்துக் கொள்ளுங்கள். சில பொருட்களை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என்றாலும், நீங்களாகவே அதற்கும் குறைவானதொரு குறிப்பிட்ட இடைவெளிக் காலத்தை நிர்ணயம் செய்து, மாற்றிப் பயன்படுத்த பழகுங்கள்.

காலாவதியாகி விட்டது

உங்களுடைய மேக்கப் சாதனத்தில் அது காலாவதியாகும் நாள் அச்சடிக்கப்பட்டிருப்பதை பார்க்க நேருவது உண்மையில் ஒரு அதிர்ஷ்டமான செயல் என்று தான் சொல்ல வேண்டும். அதில் ஏதாவது பட்டியலிடப்பட்டுள்ளதா என்று கவனியுங்கள். அந்த பொருள் திரிந்து போகாமல், வண்ணம் மாறாமல் அல்லது மணம் மாறாமல் இருந்தால் கூட, அட்டையில் குறிப்பிட்டுள்ள தேதிப்படி காலாவதியாகி இருந்தால், உடனே மாற்றி விடவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button