ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் முதல் பருவத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு முழுமையை உண்டாக்கும். கர்ப்பமாக இருக்கும் காலத்தை கணிக்கவே முடியாது; ஒரு நேரம் சந்தோஷம் மற்றும் வெற்றி உணர்வை கொண்டிருக்கும் நீங்கள் மறு வினாடியே எரிச்சல் மற்றும் கோப உணர்வுகளை பெறுவீர்கள்.

கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பல உள்ளது. பிறக்க போகும் குழந்தைக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் படியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும் போது சரியான உணவை சாப்பிட்டு, உடல் எடையை மெதுவாக அதிகரிக்கச் செய்ய வேண்டும். இந்நேரத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள பல உள்ளது. இதனால் உங்கள் ஆரோக்கியமும் பிறக்க போகும் குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும். கர்ப்பமாக இருக்கும் ஆரம்ப கட்ட நிலையில் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல், இதோ:

பப்பாளி மற்றும் அன்னாசி பழம்

கர்ப்பமாக இருக்கும் காலத்தில், காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளும் அளவை அதிகரிக்க வேண்டும். ஆனால் பப்பாளி, அன்னாசி பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களை கர்ப்பம் தரித்த ஆரம்ப கால கட்டத்தில் தவிர்க்க வேண்டும்.

மீன்

கடல்வாழ் உணவுகள் மற்றும் வாள்மீன், சுறா மீன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற சில வகையான மீன்களில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் கர்ப்பமான முதல் மூன்று மாதங்களுக்கு, இவ்வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். சுஷி என்ற ஜப்பான் உணவு போல், பச்சையான மீன் அல்லது அரை வேக்காட்டு மீன்களை கண்டிப்பாக உண்ணக்கூடாது.

இறைச்சி

கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு பச்சையான இறைச்சி அல்லது அரை வேக்காட்டு இறைச்சியையும் உண்ணக்கூடாது. நீங்கள் உண்ணப்போகும் இறைச்சி நன்றாக சமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதே போல் அது சூடாக இருக்கும் போதே சாப்பிட்டு விடுங்கள். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தவிர்ப்பதும் நல்லது. அதற்கு காரணம் கர்ப்பமான பெண்களுக்கு எளிதில் உணவுநஞ்சேறல் ஏற்படும்.

பால்

பாலில் புரதமும் கனிமங்களும் வளமையாக உள்ளது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் பாஸ்சரைஸ் செய்யப்பட பாலை மட்டுமே குசிக்க வேண்டும். கருவுற்ற ஆரம்ப காலகட்டத்தில் பாஸ்சரைஸ் செய்யாத அல்லது பச்சை பாலை தவிர்ப்பது நல்லது.

முட்டைகள்

நம்மில் பலருக்கும் அரை வேக்காட்டு முட்டை தான் பிடிக்கும். ஆனால் கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகளில் பச்சை முட்டை அல்லது அரை வேக்காட்டு முட்டையும் இடம் பெறுகிறது. பச்சை முட்டை சேர்க்கப்பட்டுள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், பச்சை குக்கீ டோ, கேக் பட்டர், வீட்டில் செய்யப்படும் சாஸ் முதலியவை.

சீஸ்

அனைத்து சீஸ்களும் தீங்கை ஏற்படுத்தாது. ஆனால் பாஸ்சுரைஸ் செய்யப்படாத பாலில் செய்யப்பட்ட அச்சு வடிவிலான முதிர்ந்த சீஸ் மற்றும் மென்மையான சீஸ்களை கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு மென்மையான சீஸ் வேண்டுமென்றால், அது பாஸ்சுரைஸ் செய்யப்பட்ட பாலில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கடைகளில் விற்கப்படும் நற்பதமான ஜூஸ்

கடைகளில் கிடைக்கும் நற்பதமான ஜூஸ்கள் பொதுவாக சுத்தமாக இருக்காது. இது கர்ப்பிணி பெண்களுக்கு தீங்கை விளைவிக்கலாம். அதனால் அவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு பட்டியலில் இதுவும் சேர்கிறது. அவைகளை வீட்டிலேயே தயார் செய்து பருகுங்கள்.

ஈரல் மற்றும் ஈரல் சார்ந்த உணவுகள்

கர்ப்பமான முதல் மூன்று மாதங்களுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஈரல் மற்றும் சார்ந்த உணவுகளான பேட் மற்றும் ஈரல் மிதவதக்கல் போன்றவைகளும் அடக்கம். அவைகளில் அடர்த்தியான அளவில் வைட்டமின் ஏ அடங்கியுள்ளது. இது முதல் மாதத்திற்கு குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.

காப்ஃபைன்

கர்ப்பமான பெண்கள், ஆரம்ப கட்டத்தில் தவிர்க்க வேண்டிய உணவு பட்டியலில் காப்ஃபைன் வரவில்லை என்றாலும் கூட, அதனை குறைவான அளவில் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். டீ, காபி, குளிர் பானங்கள், சாக்லெட் போன்றவைகளில் காப்ஃபைன் கலந்திருக்கும்.

மதுபானம்

குழந்தையின் வளர்ச்சிக்கு மதுபானம் பெரிய தீமையை விளைவிக்கும். அதனால் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகளில் இதுவும் அடங்கும். அனைத்து வகை அல்கொஹால் பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button