மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் போது உடலை சரியாக கவனிக்கவில்லை என்றால் இப்படித்தான்!

இன்றைக்கு சர்க்கரை நோய் மிகவும் சாதரண நோயாக எங்கும் பரவி விட்டிருக்கிறது. யாரைக் கேட்டாலும் தங்களின் சர்க்கரை நோய் கதைகள பகிர ஆரம்பித்து விடுகிறார்கள்.

துவக்கத்தில் ஒன்றிரண்டு பேர் என்று பாதிக்கப்பட்டிருந்த அவலத்தை தாண்டி இப்போது ஒவ்வொரு வீட்டிற்கும் ஒன்றிரண்டு பேர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடல் நலம் குறித்த அக்கறை கொண்டிருப்பவர்கள், சர்க்கரை நோய் என்றாலே மிகவும் பயந்து பார்ப்பவர்கள் சொல்கிற எல்லா வைத்திய முறைகளையும் செயல்படுத்தி பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.

சாதரணமானவர்களுக்கே பயம் இருக்கும் போது கர்பிணிப்பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். கர்ப்பமாக இருக்கும் சர்க்கரை நோய் தாக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது அப்படி சர்க்கரை நோய் பாதித்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? ஒரு வேளை குழந்தைக்கும் சர்க்கரை நோய் வந்து விட்டால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

தாய்ப்பால் நல்லது :

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் ஆரோக்கியமானது. இது குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது தாயின் உடல்நலத்தையும் மீட்டெடுக்க உதவிடுகிறது.

அம்மாக்களுக்கு அதிக சர்க்கரையளவு இருக்கும் போது, தாய்ப்பால் கொடுப்பதால் அதன் அளவு குறைக்கவும் செய்கிறது.

டைப் 2 டயப்பட்டீஸ் :

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதினால் வருங்காலத்தில் குழந்தைக்கு டைப் 2 டயப்பட்டீஸ் வராமலும் பாதுகாக்க முடியும்.

குழந்தை பிறந்தது முதல் குறைந்தது ஆறு மாதங்கள் வரையிலும் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

அம்மாக்களுக்கு :

தாய்ப்பால் கொடுப்பதினால் பெண்களுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு, அதே சமயத்தில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகிற நன்மைகளோடு சேர்த்து ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன.

தாய்ப்பால் கொடுக்கும் போது உடலிலிருந்து கூடுதல் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதனால் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டு வர உதவிடும்.

எடை குறைவு :

பிரசவத்திற்கு பிறகு உடல் எடை கூடுமே என்ற பயம் இன்றைக்கு பெண்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. உண்மையில் தாய்ப்பால் கொடுப்பதினால் இந்த கவலையிலிருந்து நீங்கள் மீள முடியும்.

லோ சுகர் :

தாய்க்கு கர்ப்பத்தின் போது சர்க்கரை நோய் பாதித்திருந்தால் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதில் தாய்க்கு மட்டும் ஒரேயொரு சிக்கல் இருக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதினால் உடலில் அதிக கலோரி எரிக்கப்படும் இதனால் ரத்தச் சர்க்கரையளவு குறைந்திடும்.

மஸ்டிடிஸ் :

சர்க்கரை நோய் பாதித்து தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மஸ்டிடிஸ் என்ற நோய்த் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. மார்பகத்தில் இருக்கக்கூடிய நுண்ணிய திசுக்களில் இன்ஃபெக்‌ஷன் ஏற்படக்கூடும்.

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது இரண்டு மார்பகங்களிலும் மாறி மாறி கொடுக்க வேண்டும்.

அறிகுறிகள் :

இந்த நோய்க்கிருமிகள் தொற்று ஏற்ப்பட்டால் அம்மாக்களுக்கு காய்ச்சல்,தலைவலி,உடல் சில்லிட்டுப் போவது, மர்பகத்தில் வலி ஆகியவை உண்டாகும்.

சிலருக்கு மார்பகம் தடித்துப் போவதும் உண்டு. இந்த அறிகுறிகள் தெரிந்தால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது கட்டாயம்.

தாய்மார்களுக்கு :

தாய்ப்பால் கொடுப்பது கலோரியை எரிக்கும்.அதிக கலோரிகள் எரிக்கப்படும் போது, உடலில் இருக்கும் குளோக்கோஸ் எல்லாம் பயன்படுத்தப்படும். இதனால் உடலில் குளுக்கோஸ் அளவு குறைந்திடும். சில நேரங்களில் நார்மலான அளவைக்காட்டிலும் குறைந்து விடுவதால், சோர்வு,உடல்வலி,மயக்கம் ஆகியவை ஏற்படக்கூடும்.

குழந்தைகளுக்கு :

அம்மாக்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால், குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக பெற வேண்டிய சூழல் ஏற்படலாம்.அல்லது குறைப்பிரசவம் ஏற்படலாம். பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமலையோ அல்லது ஹைபோக்ளைசேமியா பாதிப்பு உண்டாகலாம்.

குழந்தையின் சர்க்கரையளவு :

சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட அம்மாவுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் லோ சுகர் இருக்கக்கூடும். வயிற்றில் இருக்கும் போது அம்மாவுக்கு இருக்கக்கூடிய கூடுதல் சர்க்கரையளவிற்கு ஏற்ப குழந்தையின் இன்ஸுலின் உற்பத்தி இருக்கும். வெளியே வந்ததும். அந்த அளவுகள் வேறுபடுவதால் குழந்தைக்கு குறைந்த சர்க்கரை பாதிப்பு உண்டாகும்.

என்ன செய்யலாம் ? :

சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்து மருந்துகள் கொடுப்பார்கள். மருந்துகளுக்கு பதிலாக தாயிடமிருந்து வெளி வருகிற முதல் பாலை குழந்தைக்கு கொடுப்பது நல்லது. ஏனென்றால் இதில் சாதரண தாய்ப்பாலை விட அதிகளவு சர்க்கரைச் சத்து இருக்கிறது.

தாய்ப்பால் :

கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களினால் உடலில் சர்க்கரை அளவு கூடுகிறது. அதற்கேற்ப இன்ஸுலின் உற்பத்தி இல்லாததால் சர்க்கரை நோய் பாதிப்பு உண்டாகிறது.

பெரும்பாலும் டெலிவரிக்கு பிறகு இது நார்மலாகிவிடும். ஒரே நாளில் இந்த மாற்றம் நிகழாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் இருக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் தாமதம் ஏற்படலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button