மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பல் முளைக்கும் பாப்பாவின் ஈறுகளைப் பாதுகாக்கும் டீத்தர்!

குழந்தைகள் என்றாலே ஆனந்தம் தான். அவர்கள் வளருவதை பார்ப்பது மேலும் ஆனந்தமூட்டும் அனுபவமாக உள்ளது. வளரும் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி படிக்கட்டும் சிறிது கடினமாகத்தான் இருக்கும். சில படிகள் மிகுந்த சவாலானதாக இருக்கும். இது போன்று சவாலான விஷயம் தான் குழந்தைகளுக்கு பல் முளைப்பதாகும்.

இந்த காலத்தில் அவர்களுக்கு மிகுந்த வேதனையும் அசௌகரியமும் ஏற்படும். பற்கள் முளைக்கும் காலம் உங்கள் குழந்தையின வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக விளங்குகின்றது. சில குழந்தைகள் பெரிய அளவில் எந்த பிரச்சனைகள் இல்லாமல் இந்த காலத்தை தாண்டி விடுகின்றனர். சிலர் மிகுந்த வேதனைக்கு ஆளாகின்றனர். இதனால் பெற்றோராகிய நீங்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவீர்கள்.

இந்தப் பகுதியில் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த சிரமத்திலிருந்து எவ்வாறு அவர்களை தப்புவிக்கலாம் என்பதை பற்றி பார்பபோம். இது மழலையருக்கும் மற்றும் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்ற அறிவுரைகளாகும். இந்த குறிப்புகளை கவனமாக படித்து பின்பற்றி பயனடையுங்கள்.

ஈறுகளை மசாஜ் செய்யுங்கள்

நமது விரல்களை கொண்டு அவர்களின் குழந்தைகளின் ஈறுகளை இதமாக மசாஜ் செய்தால் அவர்களுக்கு மிகவும் சுகமாக இருக்கும். இதை செய்வதற்கு நமது விரல்கள் மிகுந்த சுத்தத்துடன் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. நடக்க முயலும் குழந்தைகளுக்கும் இந்த முறையை நாம் செய்து பார்க்கலாம். மெதுவான அழுத்தங்கள் இதமூட்டுபவையாக இருக்கும். இதனால் அவர்களின் வலி குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

குளிர்ந்த டீத்தர்

டீத்தர் பொதுவாக பற்கள் வருமுன் உள்ள ஊறும் தன்மையை குறைக்க வல்லது. அதையே சிறிது நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொடுப்பது குழந்தைக்கு இதமாக இருக்கும். அதன் கைபிடி பிடிப்பதற்கு இதமாக இருக்க வேண்டும். அதுவும் குளிர்ந்த நிலையில் இருந்தால் குழந்தைகளுக்கு கடினமாகிவிடும்.

குளிர்ந்த தண்ணீர்

நன்கு துவைத்து உலர்ந்த சுத்தமான துணி கொண்டு குளிர்ந்த தண்ணீரில் நனைத்து ஈறுகளில் ஒத்தடம் கொடுப்பதும் சிறந்த வழியாகும். இந்த குளிர்ந்த தன்மை குழந்தைக்கு மிகுந்த இதமான உணர்வை தரக்கூடியவை.

குளிர்ந்த உணவுகள்

குளிர்ந்த உணவை கொடுப்பதும் ஒரு நல்ல இதமூட்டும் வழியாக உள்ளது. குளிரூட்டப்பட்ட உணவுகளை தவிர்த்து குளிர்ந்த உணவை கொடுப்பது சிறந்ததாகும். இதை திட உணவுகளை உண்ண தொடங்கிய குழந்தைகளுக்கு முதலில் கொடுக்க முடியும்.

வாயில் வைத்து கடிக்கும் விளையாட்டு பொருட்கள்

கடைகளில் இத்தகைய பொருட்கள் நிறைய கிடைக்கின்றன. பொதுவாக மரக்கட்டையால் செய்த விளையாட்டுப் பொருட்களை கொடுப்பது பிளாஸ்டிக்கின் நச்சுத்தன்மை அவர்களை தாக்காமல் இருப்பதற்கு உதவும். இன்றைய காலத்தில் நச்சு இல்லாத பிளாஸ்டிக் பொருள்களும் கிடைக்கின்றன. இதை வாங்கி குழந்தைகள் கடிப்பதற்கு கொடுக்க முடியும். இது ஒரு எளிய மற்றும் சிறந்த வழியாக உள்ளது.

ரப்பர் டீத்தர்

குழந்தைகளுக்கு எப்போதும் அவர்களது விளையாட்டுச் சாதனங்களை கடிக்கும் பழக்கம் உண்டு. இந்நேரங்களில் டீத்தர் ஒரு விளையாட்டு பொருளாகவும் பற்களுக்கு சிறந்த இதமூட்டும் பொருளாகவும் இருக்கும். குளிரூட்டப்பட்ட பொருட்களை விட இதை கொடுப்பது பாதுகாப்பான மற்றும் இதமான கருவிகளாகின்றது.

தண்ணீர் டீத்தர்

தண்ணீர் நிரம்பிய டீத்தர்கள் கடைகளில் கிடைக்கின்றன. இதை வாங்கினால் அவர்களின் ஈறுகளுக்கு ஏற்ப இதமாக மற்றும் மெலிதாக இருக்கும். இந்த வகையில் அதிரும் அல்லது வைபிரேடிங் டீத்தர் கூட கிடைக்கின்றது.

மருந்து வகைகள்

மிகுந்த வலி ஏற்படும் போது இந்த டீத்தர்கள் பலனளிக்காத தருணங்களில் மருத்துவர்களை அணுகி மருந்துகளை பெற்று அதை பயன்படுத்தி நிவாரணம் பெற முடியும். ஆனால் இதை செய்யும் முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button