ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா காகம் தலையில் கொட்டினால் இந்த ஆபத்து ஏற்படுமா?..

காகத்தைப் பற்றிய பல தகவல்களை நாம் அறிந்திருப்போம், ஆனால், காகம் தலையில் தட்டி விட்டு சென்றால், என்ன நடக்கும்?

அப்படி நம் தலையில் காகம் தட்டி விட்டு சென்றபின்பு, என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய குழப்பம் ஆழ் மனதுக்குள் இருந்து தான் வருகிறது.

இந்த குழப்பத்திற்கு தெளிவான தீர்வு காண்பதற்காகவே இந்த பதிவு.

காகத்திற்கு மட்டுமல்ல பொதுவாகவே எந்த ஒரு பறவைக்கும் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய, எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தன்மை இருக்கின்றது.

இயற்கை சீற்றங்கள், மனிதர்களுக்கு எதிர்காலத்தில் வரும் ஆபத்து இவைகளை பறவைகள் தங்களுடைய பாஷையில், சத்தம் போட்டு வெளிப்படுத்தும்.

அந்த வகையில் காகத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னோர்கள் வழிபாட்டிற்கும் காகத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இது நாம் எல்லோரும் அறிந்ததே.

இப்படிப்பட்ட காகம் சனீஸ்வரனின் வாகனமாகவும் உள்ளது. எம லோகத்தின் வாயிலில், இரு பக்கங்களிலும் காகம் இருப்பதாகவும் சாஸ்திரம் சொல்கின்றது.
இதனால் தலையில் காகம் தட்டியவுடன் பேராபத்து நமக்கு வந்து விடுமோ, என்று நிறைய பேர் மனதில் அச்சம் ஏற்படும்.

உங்களுக்கு ஏதோ பிரச்சினை காத்துக் கொண்டிருக்கின்றது, உங்களை நீங்களே உஷார் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, முன்னோர்கள் ரூபத்தில் இருக்கும் காகம் நமக்கு வலியுறுத்துகிறது என்பது அர்த்தமாகும்.
உங்கள் வீட்டு குல வழக்கப்படி, குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்வீர்களோ, அதன்படி உங்கள் வீட்டிலேயே குடும்பத்தோடு சேர்ந்து, வழிபாடு செய்து விடவேண்டும்.
அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு வாழை இலை போட்டு, நிறைவான படைகளை போட்டு, மனதார, ஏதாவது குற்றம் இருந்தால் அதை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்வது மிகவும் நல்லது.
வீட்டில் குலதெய்வ படத்திற்கு முன்பாக மண் அகல் தீபம், நல்லெண்ணெய் விட்டு, பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றி வையுங்கள். தீபம் ஏற்றுவதை இத்தனை நாட்கள் என்றுதான் கணக்கு கிடையாது. தொடர்ந்து ஏற்றுவது குடும்பத்திற்கு மிகவும் நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button