Other News

தெரிஞ்சிக்கங்க…என்றும் இளமையா இருக்கனுமா? இந்த ஒரு அதிசய பொருள் போதும்….

சருமத்தின் தன்மையை மேம்படுத்துவதில் இஞ்சியும் உதவுகிறது. முகத்துக்கு செயற்கை பொருள்களை பயன்படுத்துவதை காட்டிலும் இயற்கை பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை பக்கவிளைவுகளிலிருந்து காப்பாற்ற முடியும்.

சரும பராமரிப்பு என்று சொல்வதை காட்டிலும் சரும பிரச்சனைகள் உண்டாகும் போது இஞ்சி பலவிதமான நன்மைகளை சருமத்துக்கு அளிக்கிறது.

முகப்பருக்களை தவிர்க்கும் பொருள்களில் இஞ்சி சாறுக்கும் பங்குண்டு. வலுவான ஆன் டி செப்டிக் பண்புகளை கொண்டிருப்பதால் இவை சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் இருக்கும்.

 

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே என்பவர்கள் இஞ்சியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வயதான பிறகு வரும் முகத்தோற்றத்தைக் காட்டிலும் வயது முதிர்வுக்கு இளவயதிலேயே முகத்தில் சுருக்கமும் வயதான தோற்றமும் சிலருக்கு ஏற்பட்டுவிடுகிறது.

இஞ்சியை இந்தகைய பராமரிப்புக்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் வயதான தோற்றத்தை தடுக்க முடியும்.

இஞ்சியில் இருக்கும் 40 ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் உள்ளது. இவை சருமத்தில் முதிர்வை தடுக்க உதவுகிறது.

ரத்த ஓட்டத்தை தூண்டி சருமத்துக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி செய்வதால் சருமத்தில் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது.

சருமத்தை திடமாக நெகிழ்வில்லாமல் வைத்திருப்பதால் சுருக்கமின்றி பொலிவாக இளமையாக வைக்க உதவுகிறது. சருமத்தை சுத்தமும் செய்வதால் சருமமும் ஜொலிப்பாக இருக்கும்.

முகத்தில் உண்டாகும் முகப்பருவுக்கு இஞ்சியை பயன்படுத்தி தீர்வு கான முடியும். இஞ்சி அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் இவை முகப்பருக்களை அடியோடு நீக்க உதவுகிறது முகப்பருக்களால் வடுக்கள், காயங்கள் உண்டானாலும் அவையெல்லாம் நீங்கி முகம் தெளிவாக இருக்க இஞ்சி உதவுகிறது.

முகத்தில் முகப்பரு இருப்பவர்கள் இஞ்சி சாறை தடவி வருவதன் மூலம் விரைவாக முகப்பருக்கள் மறைவதை பார்க்க முடியும். முகப்பருவுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் இளம் இஞ்சியை தோல் நீக்கி சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம்.
முகத்தில் எரிச்சலை உண்டு செய்யுமோ என்று நினைப்பவர்கள் இஞ்சி சாறுடன் பன்னீர் கலந்து தடவ வேண்டும். முகப்பரு காயமோடு வடுக்களோடு இருந்தால் இஞ்சி சாறு நல்லதீர்வாக இருக்கும்.

முகம் சுத்தமாக தெளிவாக இருக்க விரும்பினால் இஞ்சி ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். இவை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண் திட்டுகள், வடுக்கள் போன்றவற்றை அகற்றி முகத்தை சுத்தமாக அழகாக வைக்க உதவும்.

இஞ்சியை தோல்சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, காயவைத்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். ஈரமில்லாமல் இருக்க வேண்டும். இதனுடன் பால் பவுடர் அல்லது சந்தனம் தூளை எடுத்து சம அளவு கலந்து பன்னீர் விட்டு குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.

பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் அழுக்குகளும் கரும்புள்ளிகளும் வெளியேறும். அதிகப்படியான சரும பாதிப்பை கொண்டிருப்பவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை இதை பயன்படுத்தினாலே விரைவில் பலன் கிடைக்கும்.

இஞ்சி சிறந்த நச்சு நீக்கியாகவும் சருமத்தை சுத்தம் செய்யும் பொருளாகவும் விளங்குகிறது. முகத்தின் கடினத்தன்மையை மாற்றி முகத்தை மென்மையாக்கிட இவை உதவும். இளம் இஞ்சியின் தோலை சீவி பாதியாக நறுக்கி சாறோடு முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்துவர வேண்டும்.

தொடர்ந்து 6 வாரங்கள் வரை இதை செய்துவர வேண்டும். முகத்தில் தழும்புகள், அம்மை வடுக்கள் போன்ற ஆறாத ரணமாக இருந்தாலும், இஞ்சியை தேய்ப்பதன் மூலம் சிறந்த நன்மைகளை பெற முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button