28.6 C
Chennai
Friday, May 17, 2024
13 methi gi
சமையல் குறிப்புகள்

சுவையான வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டி

கீரையின் நன்மைகளைச் சொன்னால் தான் தெரியும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அனைவருக்குமே கீரை மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது தெரியும். அந்த வகையில் வெந்தயக்கீரை இன்னும் சிறப்பான ஒரு உணவுப் பொருள். இங்கு அந்த வெந்தயக்கீரையைக் கொண்டு காலையில் எப்படி ஒரு அருமையான ரொட்டி செய்வது என்று கொடுத்துள்ளோம்.

இந்த ரொட்டி செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டியின் செய்முறையைப் பார்ப்போம்.

Methi Ginger Roti Recipe

தேவையான பொருட்கள்:

வெந்தயக் கீரை – 1 கட்டு (பொடியாக நறுக்கியது)

கோதுமை ரவை – 1 1/2 கப்

அரிசி மாவு – 3/4 கப்

பொட்டுக்கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு (சாறு எடுத்துக் கொள்ளவும்)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, இஞ்சி சாறு, கீரை, பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சிறு உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய வைக்க வேண்டும்.

பின்பு ஒரு மென்மையான துணியை நீரில் நனைத்து, நன்கு பிழிந்து, பின் அதில் ஒவ்வொரு உருண்டைகளையும் வைத்து ரொட்டி போன்று கையால் தட்டி, சூடாக உள்ள தோசைக்கல்லில் போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் ரொட்டிகளாக சுட்டு எடுத்தால், சுவையான வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டி ரெடி!!!

Related posts

சுவையான முட்டை ஆப்பம் செய்வது எப்படி?

nathan

தெருவே மணக்கும் இறால் பெப்பர் ப்ரை…

nathan

சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிட சோயா கைமா ரெடி…..

sangika

சுவையான ரவை தேங்காய் உப்புமா

nathan

உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி

nathan

சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

nathan

இட்லி சாப்பிட்டு போரடிக்குதா? இப்படி செஞ்சு சாப்பிடுங்க

nathan

சுவையான வெந்தய குழம்பு

nathan