27.5 C
Chennai
Friday, May 17, 2024
turmeric
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா மஞ்சளை நாம் ஏன் உணவில் சேர்க்க வேண்டும்?

மசாலாக்களின் ராஜா’ என்றாலே அது மஞ்சள் தான் என்று கூறலாம். சாம்பார் முதல் பல்வேறு உணவுகளில் நாம் மஞ்சளை சேர்த்துக் கொள்கிறோம். ஆயுர்வேத மருத்துவத்திலும் மஞ்சள் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

பெண்கள் தங்களின் மேனியைப் பொலிவாக வைத்திருக்க மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள். சாதாரண காயங்களை ஆற்றுவதிலிருந்து புற்றுநோயைக் குணப்படுத்துவது வரை பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக மஞ்சள் விளங்குகிறது. இப்படி மஞ்சளின் மகிமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்தகைய மஞ்சளின் தாயகம் இந்தியா தான் என்பது நமக்குக் கூடுதல் பெருமை. இது நம்முடைய சொத்து தான் என்று மிகவும் கஷ்டப்பட்டு நிரூபித்து, மஞ்சளுக்கான காப்புரிமையை இந்தியா போராடிப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மஞ்சளை நாம் உணவில் எவ்வளவுக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் ஆரோக்கியத்துக்கு அது நல்லது என்பதற்கான 10 காரணங்கள், இதோ உங்களுக்காக…

இயற்கை மருந்து

மஞ்சள் ஒரு இயற்கை நிவாரணியாகும். நம் தோல்களில் ஏற்படும் சிறு காயங்கள் முதல் பல வெட்டுக் காயங்கள் வரை ஆற்ற வல்லது இந்த மஞ்சள்.

எடை குறைய

நம் உடல் எடை அதிகமாவதற்குக் காரணமான கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் மஞ்சள் முக்கியப் பங்கை வகிக்கிறது.

புற்றுநோய் சிகிச்சைக்கு…

கணையப் புற்றுநோயிலிருந்து லூக்கேமியா என்னும் இரத்தப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வரை பல மருத்துவச் சிகிச்சைகளுக்கு மஞ்சள் பயன்படுகிறது. புற்றுநோயைத் தூண்டிவிடும் புதிய இரத்த அணுக்களின் வளர்ச்சியை அது கட்டுப்படுத்துகிறது.

நுரையீரலுக்கு நல்லது

நுரையீரல் சிறப்பாகச் செயல்பட இயற்கையிலேயே மஞ்சள் உதவுகிறது. நுரையீரலுக்குத் தேவையில்லாமல் வரும் நச்சுப் பொருட்களை மஞ்சள் கட்டுப்படுத்துகிறது.

ஆன்டி-ஆக்ஸிடண்ட்

மஞ்சளின் துணை உற்பத்திப் பொருளான க்ளூட்டோதியோன் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட் ஆகும். இது நம் ஆயுளைக் கூட்டுவதற்கு உதவும்.

அல்சைமர் நோய்க்கு…

நினைவாற்றலைக் குறைக்கச் செய்யும் அல்சைமர் நோயின் தாக்கத்தை மஞ்சள் வெகுவாகக் குறைக்கிறது.

வலி நிவாரணி

மஞ்சள் ஒரு இயற்கையான வலி நிவாரணி ஆகும். பல்வேறு வாத நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாக மஞ்சள் விளங்குகிறது.

நோய் எதிர்ப்பைத் தூண்டும்

பல அலர்ஜிகளுக்கு எதிராகப் போராடும் மஞ்சள், நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது.

இரத்தத்திற்கு நல்லது

இரத்தம் உறைதலை வெகுவாகக் குறைக்கும் மஞ்சள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.

செரிமானத்திற்கு நல்லது

உடல் செரிமானத்திற்கு மஞ்சள் ஒரு அருமையான மருந்தாகும். எனவே மஞ்சளை நம் உணவில் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Related posts

ரகசியமாக உங்கள் பற்களில் கறையை உண்டாக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan

குளிர்காலத்தில் இவற்றை செய்கிறீர்களா?

sangika

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 15 நிமிட உடற்பயிற்சி!

nathan

முயன்று பாருங்கள்..சீரகத்தை கொதிக்கவைத்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!

nathan

மார்பகங்கள் எடுப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்!

nathan

நீண்ட நாள் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு

nathan

மகளிர் பக்கம் மாதவிலக்கு…

nathan

தூங்குவதற்கு சிரமமாக இருக்கிறதா? இரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா?

nathan

குடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்

nathan