அலங்காரம்மேக்கப்

மேக்கப் போடுவது ஒரு தனி கலை

images (6)தெரிந்ததுதான் பவுன்டேஷன், ஐலைனர், பவுடர் ஆகியவை.
ஆனால் அதன் திறமையான உபயோகம் ஒருவர் தோற்றத்தையே மாற்றக்கூடியது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. உங்களை அழகாகவும் இளமையாகவும் தோன்ற வைக்கக் கூடியதும் மேக்கப்தான். அதே சமயம் தவறான உபயோகத்தில் வயதான தோற்றத்தை தரக்கூடியதும் மேக்கப்தான்!

கீழ்வரும் எளிய குறிப்புகள் சிறந்த முறையில் மேக்கப் போட உங்களுக்கு உதவும்

கன்சீலரின் திறமையான உபயோகம்:

கண்களின் கீழ் மற்றும் மூக்கைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை மறைப்பது முக்கியம். உங்கள் முகத்தை கீழே சாய்த்தபடி கண்ணாடியில் நேராகப் பார்த்தால் இவற்றை கண்டுபிடிக்கலாம். அதை கண்டுபிடித்தபின், ஒரு சிறிய தட்டையான பிரஷ்ஷைக் கொண்டு கன்சீலரை அந்த இடத்தில் எடுத்துத் தடவவும். கன்சீலரை கருப்பு மருக்கள் மீது தடவலாம். ஆனால் கொஞ்சமாக. நுனிகூர்மையாக உள்ள கன்சீலர் பிரஷ் இவற்றிற்கு பயன்படுத்தலாம்.

பவுன்டேஷன்:

இதை லேசாக பயன்படுத்துவது நல்லது. அதிகப்படியான மேட் பவுன்டேஷன் முகத்தின் கோடுகளை வெளிப்படுத்திக்காட்டும். மேலும் முகத்தில் சுருக்கங்கள் இதன் அதிகப்படியான உபயோகத்தின் பின் விளைவு ஆகும். லேசான அல்லது எண்ணெய்ப் பசையை குறைக்கக்கூடிய பவுன்டேஷன் (சன்ஸ்ரீனுடன் இணைந்து) அல்லது ஈரப்பதமான பவுன்டேஷன் சருமத்தின் மிருதுவாக்கும்.

பவுடர் போடுவது எப்படி:

பவுடர் பூசும்போது மேலிருந்து கீழ் நோக்கி தடவவும். கீழிருந்து மேலே பூசினால் கண்ணுக்குச் சரியாகத் தெரியாத முடிகள் எழுந்து நின்று முகத்தை அசிங்கமாக காட்டலாம்.

கண்களில் ஒளியை ஏற்ப்படுத்துங்கள்:

நல்ல “ஐ ஷேடோவை” அடிப்படையாக பயன்படுத்துவதால் கண்களுக்கு அதிகப்படியான ஒளி கிடைக்கிறது. பளபளக்கும் வெளிர் நிறங்களை
பயன்படுத்தி பாருங்கள். இவை கண் இமைகளுக்கு பளபளப்பைக் கொடுக்கும். உங்கள் கண்களின் ஒளியையும் அதிகரிக்கும்.

“ஹைலைட்டர்” உபயோகியுங்கள்:

வெளிர் நிற அல்லது பளபளக்கும் ஐஷேடோ அல்லது கிரீம் ஹைலைட்டரை” கண்ணங்களின் மேற்பகுதியில், இமைகளுக்கு மேல் எலும்புப் பகுதியில் மற்றும் உதட்டின் மேற்பகுதியில் தடவினால் முகத்தின் பளபளப்பு அதிகமாகும். தினசரி மேக்கப் எளிமையாகவும், சுலபமாகவும் இருக்கவேண்டும்.

பிளஷ்கலர் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் இயற்கை நிறத்தைவிட சற்று ‘டார்க்’ ஆக இருந்தால் நல்லது. பிங்க் அல்லது பிரவுன் நிறம் இயற்கையான நிறத்தோடு ஒத்துப்போகிறது. ஆனால் அதை குறைந்த அளவில்தான் தடவவேண்டும். அதிகப்படியான ‘பிளஷ்’ மோசமான
தோற்றத்தை தரும்.

கண்களை பெரிதுபடுத்திக்காட்டுங்கள்:

குறைந்த ஐலைனர் மற்றும் அதிக மஸ்காரா உபயோகியுங்கள். அதிகமான கண் மேக்கப் போடுவதைத் தவிர்ககவும். சாம்பல் நிற லைனர் அதிக வயதடைந்த தோற்றத்தை உண்டாக்கும். ஐலாஷ் கர்லர் உபயோகித்தால் கண்ணுடைய வடிவம் மிகவும் அழகாக இருக்கும். மஸ்காரா போடும் முன் ஐலாஷ் கர்லர் உபயோகித்தால் கண்கள் பெரியவை போன்ற தோற்றத்தை அளிக்கும்.

புருவங்களை அழகாக்க:

புருவங்கள் பாலிஷ் செய்யப்பட்ட தோற்றம் அளிக்க வேண்டும். புருவங்கள் முகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. புருவங்கள் அதிகமாக
கருமையாக்குவதை தவிருங்கள். கான்ட்ராஸ்ட் கண்மேக்கப்புக்கு சரிப்பட்டுவராது. லைட் பிரவுன் நிறத்தைப் பயன்படுத்தி புருவத்தின்
நீளத்தை அதிகரிக்கலாம்.

குறைந்த அளவு பவுடரை உபயோகிக்கவும்:

அதிக அளவில் பளபளப்பான பவுடரை பயன்படுத்தினால் முகத்தின் கோடுகளிலும் சுருக்கங்களிலும் சேர்ந்து அவற்றை அதிகப்படியாக வெளிப்
படுத்திக் காட்டும். உங்கள் பவுன்டேஷன் செட் ஆவதற்கு ஏற்ற அளவில் குறைவாக பவுடர் போடவும். அல்லது பவுடரைத் தவிர்த்து மாய்ஸ்ச்ரைஸர் (சன் ஸ்கிரீன் உடன்) பயன்படுத்தலாம்.

நல்ல லிப்ஸ்டிக் பயன்படுத்தவும்:

பிங்க் பிரவுன் ஷேட் உங்கள் இயற்கையான உதட்டு நிறத்தை அதிகரிக்கும் உங்கள் லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற லிப்லைனர் பயன்படுத்தவும். டார்க் லிப்லைனருடன் வெளீர் லிப்ஸ்டிக் தடவினால் அது வயதை அதிகப் படுத்திக்காட்டும்.

Related posts

கை, கால்களின் வசீகரம் கூட நகங்களை பாதுகாத்தல்!…

sangika

கண்களுக்கு மேக்கப்

nathan

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்……

sangika

பொட்டு!!

nathan

முறையான புரிதல் இல்லாத மாமியார் மருமகள் பிரச்னைகளுக்கு தீர்வு!….

sangika

வீட்டை அழகாக்க எத்தனையோ வழியிருக்கு

nathan

தங்கள் உடல் அமைப்பை பார்த்து கவலைப்படும் பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம்……

sangika

கருப்பான பெண்கள் எப்படி மேக்கப் போடலாம்?

nathan

வாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன என்று தெரியுமா உங்களுக்கு? அப்போ இத படியுங்கள்!…

sangika