தலைமுடி சிகிச்சை

கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்வது எப்படி?

ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நவரத்தின எண்ணெய் இவை எல்லாவற்றையும் கலந்தும் ஆயில் மசாஜ் செய்யலாம். ஆயில் மசாஜ் செய்தால் டென்ஷன் குறையும். மேலும் இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள்.

முதலில் தலையை நன்கு சீவிக் கொள்ளவும். பிறகு தலையின் மேல் பகுதியில் இருந்து வகுடு இருக்கும் பகுதி முழுவதும் எண்ணெயை பஞ்சால் தடவவும். ஒவ்வொரு சிறு சிறு பகுதியாக பிரித்து எடுத்து பஞ்சால் எண்ணெயை தொட்டு தலையின் எல்லா பகுதியிலும் படும்படி தடவவும். எண்ணெய் முழுவதும் தடவிய பிறகு இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு தலை முழுவதும் anticlockwise-ல் சுற்றவும். அப்போது கையின் விரல்களால் மட்டும் தேய்க்கவும்.

இரண்டு கையின் கட்டைவிரலை தலையின் மேல் பகுதியில் வைத்து எதிர் எதிர் திசையில் வைத்து நகர்த்திக் கொண்டே வரவும்( ஒரு விரல் மேலேயும் மற்றொரு கட்டை விரலை கீழேயும் வைத்து நகர்த்தி மேலிருந்து கீழ் வரை நகர்த்திக் கொண்டே வரவும்). இதே போல் தலையின் எல்லா பகுதியிலும் செய்யவும். செய்த பிறகு மீண்டும் இரண்டு கையை தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும். முதலில் தலையின் மேல் புறத்தில், ஒரு கையால் சிறிதளவு முடியை எடுத்து ஒரு விரலில் இருமுறை சுற்றிக் கொண்டு தலையில் வைத்து சுற்றி அழுத்தி தேய்க்கவும் (clockwise direction). நன்கு உள்ளங்கையை வைத்து தேய்க்கவும்.

இதே போல் தலை முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்துத் தேய்க்கவும். பிறகு மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும். பிறகு தலையில் மேல் பகுதியில் இருந்து இரண்டு கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்து விரலில் சுற்றி கொண்டு அப்படியே மெதுவாக இழுத்து ஃப்ரஷர்(pressure) கொடுக்கவும். இதே போல் தலை முழுவதும் எல்லா முடியையும் எடுத்து செய்யவும்.

பிறகு மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும். இரண்டு கையையும் ஒன்றாக சேர்த்து(படத்தில் உள்ளவாறு) தலை முழுவதும் விரல் மட்டும் படும்படி அடிக்கவும். தலையின் முன்பக்கத்தில் பத்து விரல்களையும் வைத்து விரல்களால் தடவிக் கொண்டே வரவும். இதைப் போல் தடவி காது அருகே வந்ததும் அழுத்தவும். மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும். தலையின் மேல் பகுதியில் ஒரு கையையும் மற்றொரு கையை தலையின் அடிப்பகுதியில் வைத்து அழுத்தி விடவும்.

அப்படியே எல்லா இடங்களிலும் அழுத்தவும். பிறகு மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும். தலையின் முடியை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாகத்தின் உள்ள முடியை மடித்து சுற்றி anticlockwise- ல் தேய்க்கவும். பிறகு மற்றொரு பாகத்தை அதே போல் anticlockwise-ல் தேய்க்கவும்.

பிறகு எல்லா முடியையும் ஒன்றாக சேர்த்து சுற்றி anticlockwise-ல் தேய்க்கவும். இறுதியில் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றிய பிறகு தலையை சீவி கொண்டைப் போட்டுக் கொள்ளவும். (ஒவ்வொரு முறையும் தலைமுடியை சீப்பு கொண்டு நன்கு சீவிக் கொள்ளவும்.) குறைந்தது அரைமணி நேரமாவது தலையில் எண்ணெய் ஊறி இருக்க வேண்டும். அதன் பிறகு ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலையை அலசி விடவும்.47a2 89e1 ebc9746d3bc3 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button