Other News

நீங்களே பாருங்க.! 23 வயதில் எஸ்.பி.பி எப்படி இருக்கின்றார் தெரியுமா? நடிகர்களையும் மிஞ்சிய அழகு!

புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம், கோவிட் -19 தொற்றுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திய பிறகு, செப்டம்பர் 25ம் தேதி காலமானார்.

அற்புதமான பாடகர் எஸ்.பி.பி-யின் ரசிகர்கள் அவரது அற்புதமான இசைத்தொகுப்புகள் மற்றும் இந்திய இசையில் அவருடைய பங்களிப்புகளை நன்கு அறிவார்கள்.

தற்போது மறைந்த எஸ்.பி.பியின் புகைப்படம் ஒன்றினை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

அந்த புகைப்படத்திற்கு பின்னால் மிகவும் சுவாரஷ்யமான ரகசியம் ஒன்று மறைந்துள்ளது.

எஸ்.பி.பி பாடி திரைக்கு முதலில் வந்தது அடிமைப் பெண் திரைப்படத்தின் பாடலான “ஆயிரம் நிலவே வா”. ஆனால் அது அவர் பாடிய முதல் பாடல் கிடையாது.

முதன் முதலாக எஸ்.பி.பி. திரைப் பாடலாகப் பாடியது சாந்தி நிலையம் படத்துக்காக `இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’தான் என்ற பாடலாகும்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. அப்போது எஸ்.பி.பியின் வயது 23 ஆகும்.625.0.560.370.180.700.770.800.668.1 e1601984264429

உடன் பாடுபவர் P.சுசீலா. இந்த புகைப்படம் கடந்த 1969 ஆம் வருடம் எடுக்கப்பட்டது என்பதும் மற்றொரு சுவாரஷ்யமாக தகவலாகும்.

இதேவேளை, பாட்டுடைத் தலைவன், களிப்பும் காதலும் ததும்பும் எஸ்.பி.பி.யின் குரல் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று. பல்லவிகளும் சரணங்களும் வாழ்வான எஸ்.பி.பியின் வாழ்க்கையில் பலருக்கு தெரியாத சுவாரஷ்யங்கள் மறைந்துள்ளது.

இதனை ரசிகர்கள் தேடி கண்டுப்பிடித்து நாளுக்கு நாள் வைரலாக்கி கொண்டிருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button