Other News

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்வை தடுக்கும் நெல்லிக்காயை பயன்படுத்தும் வழிகள்!!!

முடி உதிர்தல் என்பது இயற்கையான செயல்பாடே. மரபணு, முறையற்ற உணவுகள், நீண்ட நாள் நோய் மற்றும் மன அழுத்தம் ஆகியவைகளே முடி உதிர்தலுக்கு காரணமாக விளங்குகிறது. மாசு, ஷாம்பு போடுதல் மற்றும் கூந்தல் சிகிச்சைகளால் உங்கள் கூந்தல் பல வித அழுத்தத்திற்கு ஆளாகிறது. இந்த காரணிகளால் முடி உதிர்வு ஏற்படுகிறது. உங்கள் முடி புத்துணர்வு பெற்று மீண்டும் பொலிவை பெறுவதற்கு நிரூபிக்கப்பட்ட தீர்வாக விளங்குகிறது நெல்லிக்காய்.

நெல்லிக்காயை தினசரி வாழ்வில் பயன்படுத்தி வந்தால், அதுவே முடி கொட்டுதலுக்கான சிகிச்சையாக அமைகிறது. தலையை நெல்லிக்காயினால் மசாஜ் செய்தால் தலைச் சருமத்தில் இருந்து தேவையற்ற செதில்களை நீக்கி விடும். மேலும் முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். முடி உதிர்தலுக்கு வைட்டமின் சி குறைபாடு மற்றொரு காரணமாக விளங்குகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி வளமையாக உள்ளதால் இது உங்களுக்கு உதவிடும். வைட்டமின் சி-யுடன் அதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சீக்கிரமான முடி நரையை தடுக்கும். முடியின் இறுதியில் ஏற்படும் பிளவை தடுக்கவும் நெல்லிக்காய் உதவிடும்.

கீழ்கூறிய சில முடி உதிர்தலுக்கான சிகிச்சைகளாகும். இவைகளை உங்கள் தினசரி கூந்தல் பராமரிப்புடன் சேர்த்துக் கொள்ளலாம். பாதிப்படைந்த உங்கள் கூந்தலுக்கு புதிய வாழ்க்கையை அளித்திட நெல்லிக்காயை பயன்படுத்தலாம். இது முடி உதிர்வையும் தடுக்கும்.

நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காய் எண்ணெய்யை சீரான அடிப்படையில் பயன்படுத்தலாம். சந்தையில் இது தொடர்பாக பல வகையான பொருட்கள விற்கப்படுகிறது. எளிய செயல்முறையில் வீட்டிலேயே கூட நெல்லிக்காய் எண்ணெய்யை தயாரிக்கலாம். அதற்கு நெல்லிக்காய் பொடி, வெந்தய பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் தேவைப்படும். முடி உதிர்வுக்கு நெல்லிக்காய் எண்ணெய்யை சிறப்பாக பயன்படுத்தலாம். அதற்கு அதனை உங்கள் தலையில் 15-30 நிமிடங்களுக்கு தடவவும். கூந்தலை வெதுவெதுப்பான ஈரப்பதம் அடங்கிய துண்டில் முடிந்து கொண்டு, பின் மென்மையான ஷாம்புவை கொண்டு அலசவும்.

நெல்லிக்காய் ஹேர் பேக்

இந்த நெல்லிக்காய் ஹேர் பேக்கை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். இந்த ஹேர் பேக்கில் முட்டை, நெல்லிக்காய் பொடி, சீயக்காய் பொடி மற்றும் வாதுமை கலந்து அடர்த்தியான பேஸ்ட் போல் செய்யப்படும்.. இதனை உங்கள் தலை சருமத்தில் தடவி, ஒரு 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட்டு, பின் அலசி விடுங்கள். முட்டையும் நெல்லிக்காயும் போதும் அந்த மாயத்தை நிகழ்த்த. கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக விளங்கும் இது உங்கள் கூந்தலை திடமாகவும் மென்மையாகும் மாற்றும்.

நெல்லிக்காய் ஜூஸ்

முடி உதிர்வுக்கு நெல்லிக்காயை பயன்படுத்த வேண்டும் என்றால், அது எப்போதுமே நேரடியாக தலையில் தடவி கொள்ளும் வடிவில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நெல்லிக்காயை உட்கொண்டாலும் கூட முடி உதிர்தல் தடுக்கப்படும். நெல்லிக்காய் ஜூஸ் சற்று புளிப்பு கலந்த துவர்ப்புடன் இருக்கும். ஆனால் நம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் அது பெரிய உதவியை புரிகிறது. உன்ஹல் பற்களும் ஊன்களும் திடமாகும். உங்கள் இரத்தம் தூய்மையாகி அணுக்கள் முனைப்புடன் செயல்படும். இந்த ஜூஸை நீர்த்த வடிவில் தேன் கலந்து குடிக்கலாம்.

மசாஜ்

முடி உதிர்தலை தடுக்க தலையில் நெல்லிக்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யலாம். இதுவும் கூட முடி உதிர்தலை தடுக்கும். இது உங்கள் உடலை அமைதியுற செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். மசாஜ் செய்வதற்கான சிறந்த வழி – காய்ந்த நெல்லிக்காய் துண்டுகளுடன் நெல்லிக்காய் எண்ணெய்யை தலையில் தேய்க்க வேண்டும்.

உணவில் நெல்லிக்காய்

முடி உதிர்தலுக்கு நெல்லிக்காயை பயன்படுத்த வேண்டுமானால் அதனை உணவிலும் கூட சேர்த்துக் கொள்ளலாம். நெல்லிக்காய் ஜூஸ், நெல்லிக்காய் ஊறுகாய் அல்லது வேக வைத்த நெல்லிக்காய் போன்றவைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் உடலுக்கு கிடைக்க போகும் ஆரோக்கிய பயன்களை பெற்று மகிழலாம்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button