மருத்துவ குறிப்பு

அடிக்கடி புளித்த ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா?

எப்போதாவது புளித்த ஏப்பம் வருவது பற்றி அச்சப்படத் தேவையில்லை. எப்போதுமே புளித்த ஏப்பம் வந்து கொண்டிருந்தால் சற்று அச்சப்பட்டு மருத்துவரிடம் கண்டிப்பாக கலந்து ஆலோசிக்க வேண்டும்.

சிலருக்குச் சாப்பிட்டு முடித்த பின் என்றாவது ஒருநாள் புளிப்பு கலந்த ஏப்பம் வரும். இது குறித்துக் கூட அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை.

ஆனால் உணவு ஜீரணமாகாமல் அடிக்கடி புளித்த ஏப்பம் வருவது நோயின் அறிகுறி.

இரைப்பை, சிறுகுடலின் முன்பகுதியில் அடைப்பு ஏற்பட்டால் உணவு ஜீரணிக்கும் தன்மை மட்டுப்படுகிறது. உடலில் எந்த ஒரு பாகத்திலும் சுரப்பு நீர் தங்கிவிட்டால் கிருமிகள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்துவிடும்.

இதனால் இரைப்பையில் உள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்தி துர்நாற்றத்துடன் ஏப்பம் வரத் தொடங்கும். இதுவே புளித்த ஏப்பம் என்கிறோம்.

தினமும் சாப்பிட்டு சில மணி நேரம் கழித்து ஏப்பம் வந்தால் உஷாராகி விட வேண்டியதுதான். இரைப்பையில் அடைப்பு இருந்தால் தான் இதுபோன்ற ஏப்பம் வரும். இதைத்தான் புளித்த ஏப்பம் என்கிறோம்.

இது அடைப்பு புற்று நோயாக இருக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
0a008ce0 fcb4 4d4e a341 849e65b22821 S secvpf
எதுக்களிப்பது எதனால்? சிலருக்கு சாப்பிட்ட உணவு சிறிது நேரத் திலேயே எதுக்களித்து வரும். நாம் சாப்பிடும் உணவு ஒரு வழிப்பாதையைப் போன்று உணவுக் குழாய் வழியாக இரைப்பை க்குள் சென்று விட்டால் சாதாரணமாகத் திரும்பி வரக் கூடாது.

அதுபோன்றுதான் நமது ஜீரண மண்டலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இரைப்பையில் உள்ள காரம், அமிலம், பித்த நீர் மேலே வந்து பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.

இதுபோன்ற அமிலங்கள் மேலே வருவதைத் தடுப்பதற்காக இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையே திரளான தசைப்பகுதி உள்ளது. இதுதான் உதரவிதானப் பகுதி.

இது ஒரு வால்வு போன்று செயல்படுகிறது. இந்த தசைப் பகுதி பழுது படும்போது அமிலம் மேலே வந்து உணவுக் குழாயில் எரிச்சல், எதுக்களித்தல் ஏற்படுகிறது.

மது அருந்துதல், புகை பிடித்தல், அதிகக் காரம், அளவுக்கு மீறிய மசாலா, தலைவலி மாத்திரை ஆகியவற்றால் இத்தசை பாதிக்கப்பட்டு எதுக்களிப்பு வரலாம்.

பிறக்கும் போது இயற்கையாகவே தசைப்பகுதி சரியாக வேலை செய்யாமல் இருந்தால் எதுக்களிப்பு வரலாம். தொடர்ந்து எதுக்களிப்பு ஏற்பட்டால், உணவுப் பாதை பாதிக்கப்பட்டு புற்று நோயாக வரும் வாய்ப்பு உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button