முகப் பராமரிப்பு

மூக்கின் மேல் சொரசொரவென்று உள்ளதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

எண்ணெய் பசை சருமத்தினர் தான் அதிக அளவில் வெள்ளைப்புள்ளிகளின் பிரச்சனைகளுக்கு பாதிக்கப்படுவார்கள். அதிலும் இந்த வெள்ளைப்புள்ளிகளானது மூக்கின் மேலேயும், அதனைச் சுற்றியும், தாடை மற்றும் கன்னங்களில் வரக்கூடியவை. இவையும் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்று, அழகை பாழாக்கக்கூடியவை.

குறிப்பாக இவை சருமத்தின் மென்மைத்தன்மையை பாதிக்கும். இதற்கு முக்கிய காரணம் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், அவ்விடத்தில் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் அப்படியே தங்கி, சருமத் துளைகளை அடைத்து, நாளடைவில் அவ்விடத்தில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் புள்ளிகளாக மாறும். இவற்றை எளிதில் ஒருசில இயற்கை வைத்தியங்களின் மூலம் போக்கலாம்.

சரி, இப்போது மூக்கின் மீது சொரசொரவென்று வெள்ளையாக இருக்கும் அந்த வெள்ளைப்புள்ளிகளை எப்படி போக்குவது என்று பார்ப்போம்.

ஆவிப்பிடிப்பது

வெள்ளைப்புள்ளிகளை போக்க நல்ல சூடான நீரில் ஆவிப்பிடிப்பது தான். அதிலும் அப்படி ஆவி பிடித்த பின்னர், முகத்தை காட்டன் கொண்டு நன்கு அழுத்தி துடைத்து எடுத்தால், வெள்ளைப்புள்ளிகளானது போய்விடும்.

ஸ்கரப்

வீட்டிலேயே சூப்பரான ஸ்கரப் தயாரித்தும் பயன்படுத்தலாம். அதற்கு அரிசி அல்லது ஓட்ஸை பொடி செய்து, அதனை ஈரமான முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் வெளியேறி, வெள்ளைப்புள்ளிகளும் போய்விடும்.

கிளின்சர்

மற்றொரு அட்டகாசமான ஒரு வழி தான் கிளின்சர். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள சொரசொரப்பான வெள்ளைப்புள்ளிகள் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

தக்காளி

தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் நீங்கிவிடுதோடு, சருமம் அழகாகவும், பொலிவோடும் இருக்கும்.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்டை சொரசொப்பாக இருக்கும் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் அனைத்தும் போய்விடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கழிங்கை அரைத்து, அதனை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முட்டை மற்றும் தேன்

முட்டையை ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து நன்கு அடித்து, பின் அதனை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தாலும், வெள்ளைப்புள்ளிகள் நீங்கிவிடும்.

வெந்தய இலை

வெந்தய இலையை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பிம்பிள், வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

Related posts

‘பளிச்’ முகத்துகு பலவித மாஸ்க்

nathan

பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த டெட் ஸ்கின்னை நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும்

nathan

பளிச்சென மின்ன வேண்டுமா?

nathan