மருத்துவ குறிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஐஸ்வாட்டர் அருந்துவதால் ஆண்மை தற்காலிகமாக குறைவடைவது உண்மையா??

நீர் என்பது உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும், நீர்மச்சத்துக்களையும் வழங்குவது நீர்தான்.

உடலில் 60 சதவீதத்துக்கு மேல் நீரினால் ஆனது. தினமும் போதுமான அளவு நீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் அது எந்தவகையான நீர் என்பதில் கவனம் தேவை.

ஏனெனில் குளிர்ந்த நீர் குடிப்பது உங்களுக்கு சில தீமைகளை ஏற்படுத்தலாம். நீரின் வெப்பநிலை மாறும்போது அதன் தன்மையும் மாறுபடுவது இயல்புதானே. உங்களுக்கு குளிர்ந்த நீர் குடிப்பது மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கலாம், ஆனால் அதன் விளைவுகளை பார்க்கும்போது அதனை தள்ளிவைப்பதே சிறந்தது என்பது பொதுவான கருத்து ஆகும். குளிந்த நீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகளை இங்கே பார்க்கலாம்.

கூடுதல் கொழுப்பு வழிவகுக்கும்
ஐஸ் வாட்டர் குடிப்பது உடலை அதிக வேலை செய்ய வைத்து கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவும் என்பது தவறான நம்பிக்கையாகும். உடலில் உள்ள வெப்பநிலை குறைவதால் கொழுப்புகள் உறைந்து கரைய அதிக நேரம் எடுக்கும். இதனால் உங்கள் எடை அதிகரிக்குமே தவிர குறையாது.

மலச்சிக்கல்
சாதாரண வெப்பநிலையில் உள்ள நீரை குடிப்பது செரிமானத்தை அதிகரிக்கும், ஆனால் குளிர்ந்த நீர் குடிப்பது உங்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். சாப்பிடிக்கும்போது குளிர்ந்த நீர் குடிப்பது உணவை உள்ளே செல்வதை கடினமாக்குகிறது, அதேசமயம் இந்த உறை வெப்பநிலை குடல் இயக்கங்களையும் பாதிக்கிறது. இதன் விளைவு மலச்சிக்கல் தான்.

நீரேற்றத்தை பாதிக்கிறது
நீர் குடிப்பதன் முக்கிய நோக்கமே உடலில் நீரேற்றத்தை அதிகரிப்பதுதான். ஆனால் குளிர்ந்த நீர் குடிப்பது இதனை பாதிக்கிறது. ஏனெனில் உடல் நீரை பயன்படுத்த முதலில் அதனை சரியான வெப்பநிலைக்கு கொண்டுவர வேண்டும். ஆனால் குளிர்ந்த நீர் குடிப்பது இதனை தடுப்பதால் நீரேற்றம் பாதிக்கப்பட்டு ஆற்றல் இழப்பு ஏற்படலாம்.

ஆற்றல் இழப்பு
குளிர்ந்த நீர் குடிப்பது உங்களை சிறிது நேரத்திற்குள் புத்துணர்ச்சி அடைய செய்யலாம், ஆனால்

இது நீண்ட தூரம் ஓடுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.ஆனால் நீண்ட நேர ஆற்றலுக்கு குளிர்ந்த நீர் ஏற்றதல்ல. குளிர்ந்த நீர் உங்களை சில நொடிகளில் சோர்வாக மாற்றக்கூடியது.

செரிமான கோளாறு
குளிர்ந்த நீர் குடிப்பது அடிவயிற்றில் வலி, குமட்டல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் குளிர்ந்த நீர் எதிர் அழற்சி பண்புகளை உடையது. இதனால் இரத்த நாளங்கள் சரியாக செயல்பட முடியாது. மேலும் இது வயிறை இறுக்குவதால் உணவு செரிமான அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதய துடிப்பை குறைத்தல் குளிர்ந்த நீர் உங்கள் இதய துடிப்பை குறைக்கவல்லது. இதற்கு காரணம் உங்கள் கழுத்திற்கு பின்புறமுள்ள வாகஸ் என்னும் நரம்பு திடீர் வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவதுதான். மீண்டும் சாதாரண வெப்பநிலையை அடையும் வரை உங்கள் இதய துடிப்பு குறைவாகத்தான் இருக்கும். தொண்டை எரிச்சல் குளிர் காலத்தில் சாதாரண நீர் எப்படி உங்களுக்கு மூக்கடைப்பையும், தொண்டை கரகரப்பையும் ஏற்படுத்துமோ அதே சூழ்நிலையை நீங்கள் குடிக்கும் குளிர்ந்த நீரும் ஏற்படுத்தக்கூடும். உங்கள் உடல் மஸ்கஸ் எனப்படும் ஒரு ஈரப்பத திரவத்தை சுரக்கிறது. நீங்கள் குளிர்ந்த நீர் குடிக்கும் போது இதன் சுரப்பு அதிகரிப்பதால் தொண்டை எரிச்சல் ஏற்படுகிறது. தலைவலி ஐஸ்கிரீம் அல்லது அதிக ஐஸ் சேர்க்கப்பட்ட குளிர்பானம் குடிக்கும் போது நீங்கள் மூளை முடங்கியது போல உணர்ந்தால் அதே பாதிப்பை குளிர்ந்த நீரும் ஏற்படுத்தக்கூடும். இது உங்களுடைய பல நரம்புகளை உறைய செய்வதால் அவை உங்கள் மூளைக்கு உடனடி தகவல் அனுப்பும், இதன் விளைவு தலைவலி ஆகும். தற்காலிக ஆண்மைக்குறைவு ஆணுறுப்பின் விறைப்பு என்பது அதற்கு செல்லும் இரத்தத்தின் அளவை பொறுத்ததாகும். உடலில் சீரான இரத்த ஓட்டம் இருக்க வேண்டுமெனில் உடலின் வெப்பநிலை சீராக இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்கும்போது திடீரென உங்கள் உடல் வெப்பநிலை மாறுவதால் இரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உங்கள் ஆணுறுப்பு விறைப்படைவதில் பிரச்சினை ஏற்படலாம். எனவே உறவில் ஈடுபடுவதற்கு முன் குளிர்ந்த நீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button