கூந்தல் பராமரிப்புஹேர் கண்டிஷனர்

செம்பருத்தி ஹேர் டானிக் – ட்ரைப்பண்ணலமா..?

செம்பருத்தி பூ- 10 கிராம், சுருள்பட்டை – 10 கிராம், வெந்தயம் – 5 கிராம், உலர்ந்த செண்பகப்பூ – 5 கிராம், இவற்றை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் போட்டு தினமும் வெயிலில் வைத்து எடுங்கள்.

ஒரு வாரத்தில், சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் எசென்ஸ் எண்ணெயில் இறங்கிவிடும்.

இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வந்தால், தலை சூப்பர் சுத்தமாவதுடன் முடி நன்றாக வளரத் தொடங்கும்; கூந்தல் வாசனையும் ஊரைக் கூட்டும். தலைக்கு கலரிங் செய்து கொள்ள ஆசைதான்.

ஆனால், அதிலுள்ள ரசாயனப் பொருள் கூந்தலை ப்ளீச் செய்து, பிறகு நிறத்தைத் தருவதால் கூந்தல் உதிருமே என்று பயப்படுகிறீர்களா?

பீட்ரூட்டில், பயன்படுகிறீர்களா? பீட்ரூட்டில், உங்கள் கூந்தலை இயற்கையாகவே நிறமாக்குகிற விசேஷத் தன்மை இருக்கிறது.

கிராம் டீத்தூளை தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள், இதனுடன் மருதாணி பவுடர் – 50 கிராம், துளசி பவுடர் – 5 கிராம், கடுக்காய் பவுடர் – 5 கிராம் கலந்து ஒரு பாத்திரத்தில் வையுங்கள்.

அரை மணி நேரம் கழித்து மற்றொரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.

அடுப்பை சிம்மில் வைத்து, இந்தக் கலவையை பாத்திரத்தினுள் வைத்து, நன்றாக கொதி வந்ததும் இறக்குங்கள்.

ஆறியதும் அரை கப் பீட்ரூட் ஜுஸ், ஒரு எலுமிச்சை ஜுஸ் இரண்டையும் கலந்து விடுங்கள்.

மறுநாள் இதே போல் பாத்திரத்தினுள் வைத்து சூடுபடுத்தி இறக்கி அதில் அரை டீஸ்பூன் செம்பருத்தி பவுடரை கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டடை தலை முழுவதும் பேக் ஆகப் போட்டு, அதிக பட்சம் 3 மணி நேரம் குறைந்த பட்சம் அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். பிரமாதமான நிறத்தில் மின்னும் உங்கள் கூந்தல்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button