மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு டயப்பர் எரிச்சலா? இதோ 12 சூப்பர் மருந்துகள்!!!

குழந்தைகள் உச்சா, கக்கா அடிக்கடி போவதால் இந்தக் காலப் பெற்றோர்களுக்கு டயப்பர் என்பது ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே காணப்படுகிறது. இன்னொரு பக்கம் அது ஒரு ஃபேஷனாகவும் ஆகிவிட்டது.

டயப்பர் உபயோகிப்பதால் இந்தக் காலக் குழந்தைகளின் இயல்பான நடையே மாறிவிட்டதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் டயப்பர் என்பது இப்போது ஒரு அத்தியாவசியப் பொருட்களில் ஒன்று தான் என்பது தான் உண்மை.

டயப்பர் மாட்டுவதால் சில நேரம் குழந்தைகளுக்குக் கடும் எரிச்சலும் ஏற்படுகிறது. டயப்பரை மிகவும் இறுக்கமாகக் கட்டுவதால் பெரும்பாலும் இந்த எரிச்சல் ஏற்படுகிறது. நீண்ட நேரம் டயப்பரை மாற்றாமல், அதனால் கக்கா காய்ந்து போய் அது தோலில் உரசும் போது குழந்தை எரிச்சலால் அலறுவதுண்டு.

இந்த எரிச்சலைப் போக்க, உடனடியாக டயப்பரை மாற்ற வேண்டும். குழந்தைக்கு சாதாரண சோப்பைப் போட்டு குளிக்க வைக்கலாம். டயப்பரிலிருந்து குழந்தைக்கு சிறிது விடுதலை கொடுக்கலாம். இவை தவிர, மேலும் 12 அருமையான தீர்வுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போமா?

கற்றாழை

கற்றாழை இலையை வெட்டி, அதில் வரும் பசையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் நன்றாகத் தடவினால் குழந்தையின் எரிச்சல் அடங்கும்.

கார்ன் ஸ்டார்ச்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் கார்ன் ஸ்டார்ச் பவுடரைத் தூவி, அதன் பிறகு டயப்பரை குழந்தைகளுக்கு அணிவது நல்லது.

தேங்காய்/ஆலிவ் எண்ணெய்

டயப்பர் அணியும் பகுதிகளில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைத் தடவி, சிறிது மசாஜ் செய்து விட்டால், குழந்தைக்கு ஏற்படும் எரிச்சல் அடங்கி குழந்தை அமைதியாகும்.

டீ-ட்ரீ எண்ணெய்

நீருடன் டீ-ட்ரீ எண்ணெயைக் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவினால் எரிச்சல் குறையும்.

வாசலின் பெட்ரோலியம் ஜெல்லி

வாசலின் பெட்ரோலியம் ஜெல்லியை டயப்பர் அணியும் பகுதிகளில் மிருதுவாகத் தடவினால் எரிச்சல் தணியும்.

சோடா உப்பு

இளஞ்சூடான நீரில் 2 ஸ்பூன் சோடா உப்பைக் கலந்து, அதைப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உபயோகப்படுத்துவது நல்லது.

தயிர்

குழந்தைக்குக் கொடுக்கும் உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது அதை கிரீமாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவினால் எரிச்சல் குறையும்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ பைகளை நீரில் ஊறப் போட்டு, அதில் குழந்தையைக் குளிக்க வைக்கலாம். பின்னர் சோடா உப்பு அல்லது கார்ன் ஸ்டார்ச்சை உபயோகிக்கலாம். அதை விட, ஓரிரு சீமைச்சாமந்தி டீ பைகளை டயப்பருக்கு உள்ளேயே போட்டுவிட்டு, அதை மாட்டிவிட்டால் குழந்தை எரிச்சல் மறந்து சிரிக்கும்.

ஓட்மீல் குளியல்

ஒரு கப் ஓட்மீலை நீரில் கலந்து குழந்தையைக் குளிப்பாட்டுவது மிகவும் சிறந்தது.

கிரேப் ஃபுரூட் விதை எண்ணெய்

இதை நேரடியாகவே குழந்தையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவினால் டயப்பர் எரிச்சல் தணியும்.

பால்

ஒரு சுத்தமான துணியைப் பாலில் நன்றாக ஊற வைத்து அதைக் குழந்தைக்கு மாட்டி விட்டால் எரிச்சல் நீங்கி குழந்தை அமைதியாகும்.

மாவு

வாணலியில் சிறிது மாவை குறைந்த தீயில் சுட வைத்து, அது பொன்னிறமாக மாறிய பின் நன்றாக ஆற வைக்கவும். பின்னர் அதை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவினால் எரிச்சல் நீங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button