ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… அப்பாவாக ஒரு ஆண் செய்யும் இந்த ஒரு தவறின் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

ஆண்கள் ஒரு குடும்ப தலைவனாக நிறைய சுமைகளை தாங்கிக் கொண்டு தான் வாழ்ந்து வருகிறார்கள். அவசர காலத்தில் பணம் ஏற்பாடு செய்வதில் இருந்து, குடும்பத்திற்குள் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதை வெளி உலகுக்கு தெரியாமல் சுமூகமாக முடிப்பது வரை ஒரு குடும்ப தலைவனாக ஒவ்வொரு நாளும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பலவன இருக்கின்றன.

அம்மாவிடம் அதிகம் பாசம் வெளிப்படம், அப்பாவிடம் இருந்து மட்டுமே அதிக அக்கறை வெளிப்படும். சில சமயம் அந்த அக்கறை கோபமாக வெளிப்படுவதால், நாம் அப்பா என்றாலே வில்லன் என கருதுவது உண்டு. ஓரிடத்திற்கு சென்று வர வேண்டும் என்று அம்மாவிடம் அனுமதி கேட்டால், “போ”, “வேண்டாம்..” என ஒற்றை வார்த்தையில் பதில் கிடைக்கும். கிளம்பும் போது “பார்த்து போயிட்டுவாடா கண்ணா…” என்ற பாசமான வார்த்தைகள் கேட்க இயலும்.

இதையே அப்பாவிடம் கூறினால் என்ன நடக்கும்….

அப்பா!

இதுவே, அப்பாவிடம் ஓர் இடத்திற்கு சென்று வர வேண்டும் என்று அனுமதி கேட்டால், எப்படி போறீங்க, எத்தன பேர் போறீங்க, எத்தன நாள் தங்க போறீங்கள், எந்த ரூட்ல போறீங்க, அங்க தங்குறதுக்கு, சாப்பிடறதுக்கு வசதி எல்லாம் இருக்கா, எவ்வளோ செலவாகும்? என பல கேள்விகள் வந்து விழுகும். இளம் வயதில் பலரும் அப்பா ஏன் நோண்டி, நோண்டி கேள்விக் கேட்டு சாகடிக்கிறார் என எரிச்சல் அடைவார்கள்.

ஆனால், அதன் பின்னணயில் பெரும் அக்கறை புதைந்திருக்கும். அதை நாம் கவனித்திருக்கவும் மாட்டோம், அவரும் பெரிதாக அதை காட்டிக் கொண்டிருக்கமாட்டார்.

சின்ன, சின்ன சந்தோசங்கள்!

இப்படி ஒரு குடும்ப தலைவன் தன் மனைவி, பிள்ளைகள், பெற்றோர் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறான். ஆனால், பல சமயங்களில் குழந்தைகளால் தவறாக கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த அக்கறையின் பேரில் சில குடும்ப தலைவர்கள் ஒரே ஒரு தவறு செய்வதுண்டு. அந்த சிறு தவறு தான் வீட்டில் பல சமயங்களில் சின்ன, சின்ன சந்தோசங்களை சீர்குலைத்துவிடுகிறது. அது என்ன?

கேள்வி!

தனது மனைவி பிள்ளைகளுக்கு என்ன வேண்டும், என்ன கூடாது என பார்த்து, பார்த்து செய்யும் குடும்ப தலைவர்கள் தான் அதிகம். அதே சமயத்தில், தான் அவர்களுக்காக செய்யும் அந்த செயல் அல்லது வேலை அவர்களுக்கு பிடித்துள்ளதா? அவர்கள் என்ன கருதுகிறார்கள்? அவர்கள் மனதில் இருக்கும் ஆசை என்ன? உனக்கு இது வேண்டும் என்று தெரியும்… ஆனால், அதில் எத்தகைய ஒன்றை நீ விரும்புகிறாய், நான் வாங்கி தருவது, அமைத்து தருவது நிஜமாகவே அவர்கள் விரும்புவது தானா? என்ற ஒரே ஒரு கேள்வி கேட்காமல் போவதால் குடும்பத்தில் இருக்கும் சின்ன, சின்ன சந்தோசங்கள் அழிந்துவிடுகிறது.

ஒரு புடவையை வாங்கி தருவதற்கும், அவரையே கடைக்கு அழைத்து சென்று வாங்கி தருவதற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தான் இது.

மாறுபடும் கருத்து!

வாங்கி தரதே பெருசு, இதுல இதுதான் வேண்டும், அதுதான் வேண்டும்ன்னு அடம் பிடிக்கனுமா என்ன? என்று சிலர் கூறுவார்கள். இது அந்தந்த பொருளையும், செயலையும், வாய்ப்பையும் பொருத்து மாறுபடலாம். முக்கியமாக அந்த குடும்பத்தின் பொருளாதார நிலையை சார்ந்து பெருமளவில் மாறுபடலாம்.

ஒரு ஏழை மகனுக்கு தன் அப்பா வாங்கி தரும் கடலை மிட்டாய் கூட பெரிய விஷயம் தான். ஆனால், பணக்கார மகனுக்கு தன் அப்பா ஆயிரங்களை கொட்டி ஃபாரின் சாக்லேட் வாங்கிக் கொடுத்தாலும், அது தனக்கு பிடித்த ஃப்ளேவர் இல்லை, இது எனக்கு பிடிக்காது என முகத்திற்கு நேராக கூறும் குணம் கொண்டிருப்பான்.

பணம்?!

இங்கே பணமும் பெரிய விஷயம் இல்லை.

ஒருவேளை, அந்த ஏழை மகனுக்கு கடலை மிட்டாய் பிடிக்காமல், பூமர் பிடித்திருந்தால். இதற்கு பதிலாக அப்பா அதை வாங்கிக் கொடுத்திருந்தால் அவன் இன்னமும் கொஞ்சம் சந்தோசப்பட்டிருப்பான். இதெல்லாம் சின்னசின்ன விஷயங்கள். இதெல்லாமா? கேட்டுப் பண்ணனும் என்று வினா எழலாம்.

வாழ்க்கை!

மனைவிக்கு புடவை வாங்கி தரும் போதோ, மகனுக்கு தீபாவளி பட்டாசு வாங்கிக் கொடுக்கும் போதோ இதன் தாக்கம் இன்னம் கொஞ்சம் பெரிதாக இருக்கலாம். அதுவே, அந்த மகன் மற்றும் மனைவியின் ஆசையிலும், கனவிலும் பெரிய மாற்றத்தை, தாக்கத்தை உண்டாக்கும் எனில்… ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த வாழ்க்கை அமைப்பை மாற்றும் வாய்ப்புகள் இருக்கின்றன.

உதாரணமாக…

உதாரணமாக மகனுக்கு கட்டிட பொறியியல் படிப்பு பயில வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். ஆனால், அதை காதுக் கொடுத்து கேட்காமல். ஐடி படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கிறது, நன்கு சம்பாதிக்கலாம் என்று கூறும் அப்பாக்கள் இன்றும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தான் படிக்க கூறும் படிப்பு தன் மகனுக்கு வருமா? பிடிக்குமா? என்ற அவர்கள் யோசிப்பது இல்லை.

நண்பர்கள், உடன் பணிபுரியும் இடத்தில் தெரிந்தவர்கள் இந்த படிப்புக்கு ஸ்கோப் இருக்கு என்றால் அதை உடனே தனது மகனை படிக்க கூறுவார்கள்.

வேலை!

சரி ஐடி படிச்சாச்சு, ஏற்கனவே படிச்சு முடிச்சு வெளியே வந்தவர்களுக்கு வேலை இல்லை. படித்து முடித்து வெளிவரும் மகனுக்கும் வேலை கிடைக்கவில்லை எனில். உடனே இப்போ கரண்ட் ட்ரெண்டில் எதில் அதிக வாய்ப்புகள், சம்பளம் கிடைக்கும் என்று யோசிப்பார்கள். சரி பேங்கிங்கில் நிறைய ஸ்கோப் இருக்கிறது என்று தெரிந்துவிட்டால் அதற்கான கோச்சிங் வகுப்புகளில் சேர்த்துவிடுவது, தேர்வுகள் எழுத கூறுவது என நச்சரிப்பார்கள்.

ஆக, நான்கு வருடம் வராத படிப்பை அவன் முக்கி, முக்கி படித்து பாஸ் செய்தது எல்லாம் இங்கே வீணாகிவிடுகிறது.

இன்றும்…

இன்றும், தனக்கு பிடிக்காத படிப்பை படித்து முடித்து, படித்த வேலையை செய்ய முடியாமல், பிடித்த வேலையும் செய்ய முடியாமல். கிடைத்த வேலையை குடும்பத்திற்காக செய்து வரும் பிள்ளைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். சச்சினாக நினைத்து சாப்ட்வேர் இன்ஜினியராகவும், ஆர்கிடெக்ட் ஆக நினைத்து வங்கி மேலாளாராகவும் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் நபர்கள் நம்மை சுற்றி எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

வேலை இல்லா திண்டாட்டத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆட்டோமேஷன்

நான்கு வருடங்களுக்கு முன்னர் இன்ஜினியரிங் படிச்சா தான் கெத்து, கடந்த ஓரிரு ஆண்டுகளாக வங்கியில் வேலை கிடைச்சா தான் கெத்து, அடுத்து அவரும் ஆண்டுகளில் எது கெத்து, எதை படித்தால், என்ன வேலை செய்தால் பிழைக்க முடியும் என யாருக்கும் தெரியாது.

ஆட்டோமேஷன் இன்று ஐடி முதல் வங்கி வரை பெரும்பாலான வேலை வாய்ப்புகளுக்கு ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறது.

கேளுங்கள்…

இனிமேலாவது உங்கள் மகனிடம், மகளிடம்… நீ என்ன படிக்கிறாய்? உனக்கு பிடித்தது என்ன? நீ என்னவாக விரும்பகிறாய்? உனக்கு என்னிடம் இருந்து என்ன உதவி / வழிகாட்டுதல் வேண்டும்? என்று கேளுங்கள்.

ஒரு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கான சரியான கேள்வியை கேட்க வேண்டும். அதேபோல தான் வாழ்க்கையும். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் அவர்களிடம் நிறைய கேள்விகள் கேளுங்கள்.

தவறு!

இன்றைய மாடர்ன் பெற்றோர்கள் செய்யும் பெரிய தவறே கேள்வி கேட்காமல் இருப்பது தான். வெளியே போகிறேன் இத்தனை பணம் வேண்டும் கேட்டால் எடுத்துக் கொடுத்து விடுகிறோமே தவிர, அவன் எங்கே செல்கிறான், யாருடன் செல்கிறான், அங்கே எதற்காக செல்கிறான்… என்ன செய்ய போகிறான்? என்று எந்த கேள்வியும் கேட்பதே இல்லை.

அப்பா மகனுடன் நண்பர்கள் போன்ற உறவு இருப்பது தவறில்லை. ஆனால், நல்ல நண்பனாக இருக்க வேண்டும். எதை வேண்டுமானாலும் செய் என்று விட்டுவிடக் கூடாது.

கேள்விகள் கேட்பது சந்தோசங்களை அதிகரிக்கும், குற்றங்களை குறைக்கும், சமூகத்தில் ஒரு நல்ல அடையாளமாக உங்கள் மகன் / மகள் உருவாக துணை நிற்கும்.

கேளுங்கள்… உங்கள் மகனிடமும், மகளிடமும் என்ன பிடிக்கும் என்பதில் துவங்கி, இன்றைய நாளில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது வரை நிறைய கேள்விகள் கேளுங்கள்!

Related Articles

7 Comments

  1. please any man or father or any one do not kiss a woman or a lady or a baby girl or school girl. this is ruining their life

  2. நான் ஆம்பளை, சம்பாதிக்கிறவன், குடும்பத்தலைவன் என்கிற கோதாவில் பல ஆண்கள் செய்யும் தவறுகளே இவை..இதற்கு ஒத்து ஊத குடும்பத்தில் அவங்க பாட்டி, அம்மா வேறு கிளப்பி விடுவாங்க.. அது அந்தக்காலம்,. இப்போ காலம் மாறிப்போச்சு.. மனைவி, பிள்ளைகளுடன் கலந்து பேசி முடிவெடுங்க, அது ஒரு சின்ன விஷயமா இருந்தால் கூட..

  3. அவ நம்மகூட வாழபோரான்னு கல்யாணம் பண்ணா அவன் ஓலுக்காகதான் கல்யாணம் பண்ணான்னு ஓடிப்போயிட்டான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button