35.1 C
Chennai
Monday, Jun 17, 2024
3f509f3f 82ab 4a13 9938 c2237630cf62 S secvpf
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

இளநரையை போக்கும் மூலிகை தைலம்!!

இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர்.

போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.

இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும்.

மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது.

சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

Related posts

வெள்ளை முடிகளை நிரந்தரமாக கருமையாக்க ஒரு எளிய வழி !…சூப்பர் டிப்ஸ்

nathan

நரைமுடிக்கு இயற்கை வைத்தியத்தை தேடுபவரா நீங்கள்?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பளபளப்பான நீண்ட கூந்தலை பெற இந்த விதையை உபயோகித்திருக்கிறீர்களா? உபயோகமான ரெசிபி!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களது கருமையான கேசம் பழுப்பு நிறமாக மாறுகிறதா?

nathan

முடியை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த எளிய மற்றும் உபயோகமான வழிகளே போதுமாம்…!

nathan

சில் கிளைமேட்டில் கூந்தல் பராமரிப்பு

nathan

முடி உதிர்வை எப்படி சமாளிக்கலாம் தெரியுமா?

nathan

முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்

nathan

தலைமுடிக்கு நல்ல கண்டிஷனர் தரும் துளசி

nathan