29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
2diabetes
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முன்நீரிழிவு நோய் வருவதற்கான 5 அறிகுறிகள்!!!

நீரிழிவு நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்து விட்டு, அப்படி எதுவும் இல்லை என்று திருப்தியுடன் வெளியே வந்து விட்டீர்களா? ஆனால், உங்களுக்கு முன்நீரிழிவு வந்திருந்தால் எப்படி அறிந்து கொள்வீர்கள்? ஆம், உங்களுடைய இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு சாதாரண அளவை விட அதிகமாக இருக்கும் போது முன்நீரிழிவுக்கான பரிசோதனை நடத்தப்படும். ஆனால் இந்த பரிசோதனையின் போது முழுமையான நீரிழிவுக்கான அளவு குளுக்கோஸ் இருப்பதில்லை.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பெரும் எண்ணிக்கையிலானவர்களை பாதித்திருக்கும் நோயாக ப்ரீ டையாபடீஸ் (Prediabetes) என்ற முன்நீரிழிவு நோய் உள்ளது. ஆனால், இப்படி பிரச்சனை இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

முன்நீரிழிவு நோய்க்கென்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய அறிகுறிகள் எதுவும் இருப்பதில்லை. எனினும், இது நோய்தானா அல்லது வேறு அறிகுறியா என்று சொல்லக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

டைப்-2 நீரிழிவுக்கான அதிக ஆபத்துடன் இருத்தல்

உங்களுடைய குடும்பத்தினருக்கு நீரிழிவு நோய் இருந்தாலோ அல்லது உடலுழைப்பு அதிகம் தேவைப்படாத வாழ்க்கை முறையை நீங்கள் கொண்டிருந்தாலோ, உங்களுக்கு முன்நீரிழிவு நோய் வர அதிகமான வாய்ப்புகள் உள்ளது எனலாம். அதே போல, 45 வயதுக்கு மேல் உள்ளவராக இருந்தாலும் முன்நீரிழிவு வரலாம்.

அதீத எடை அல்லது உடல் பருமன்

முன்நீரிழிவு நோயை தூண்டி வரவழைக்கும் விஷயமாக உடல் பருமன் உள்ளது. உங்களுடைய உடல் பருமன் குறியீடு (BMI) 25-க்கும் அதிகமாக இருந்தால், அது இரத்தத்தில் அதிகமான சர்க்கரை உள்ளதாகவே கண்டிப்பாக காட்டும். அதிகமான இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் ஆகிய நோய்களும் கூட அதிகமான எடை அல்லது உடல் பருமன் காரணமாக வருகின்றன.

சாதாரண நீரிழிவு அறிகுறிகள்

இது முன்நீரிழிவு நோயின் பயத்தை ஏற்படுத்தும் பகுதியாகும். பெரும்பான்மையான மக்களுக்கு முன்நீரிழிவு நோய் பற்றிய அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. ஆனால், அதிகரிக்கப்பட்ட இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் காரணம் தெரியாத களைப்பு, தாகம் அதிகரித்தல் அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுதல் ஆகியவை முன்நீரிழிவு நோய்க்கான காரணங்கள் எனலாம்.

தோலில் கரும்புள்ளிகள்

ஆகன்தோசிஸ் நைக்ரிகான்ஸ் (acanthosis nigricans) என்பது முன்நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வரக்கூடிய தோல் வியாதியாகும். உடலில் மடிப்புகள், வித்தியாசமான கறுப்பு மற்றும் மொத்தமான புள்ளிகள் இருப்பதே இந்த நோயின் அறிகுறியாகும். இந்த நோய் சாதாரணமாகவே, கழுத்து, முழங்கைகளுக்கு நடுவிலும், முழங்கால்களுக்கு பின்பக்கத்தில் மற்றும் விரல்கள் இணையும் இடங்கள் ஆகிய பகுதிகளிலும் காணப்படும்.

தூக்கமின்மை

உங்களுக்குத் தூக்கம் வருவதில்லை என்பதை தானாகவே உணர்ந்திருக்கிறீர்களா? உங்களுக்கு முன்நீரிழிவு நோய் வந்திருக்கலாம்! ஒரு நாளுக்கு 6 மணிநேரத்திற்கும் குறைவாக, இரவு நேரங்களில் உறங்கும் மனிதர்களுக்கு முன்நீரிழிவு நோய் இருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது ஹார்மோன்கள், நரம்பு மண்டலம் மற்றும் தூக்கமின்மை ஆகியவைகளுக்கு இடையிலான தொடர்புகளின் காரணமாக ஏற்படும்.

Related posts

பற்களை துலக்குவதில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

nathan

கிட்னி பிரச்சினை வராமல் இருக்க வேண்டுமா?

nathan

பெண்களே வெளிநாடு செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

nathan

உங்கள் கவனத்துக்கு பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுபவரா நீங்கள்?

nathan

மனித இனத்தை உலுக்கும் கொடூரமான நோய்கள்

nathan

ஒயரிங்’ பணிகளில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்

nathan

போராபத்து கூட நிகழும்! காலாவதியான மாத்திரைகளை ஏன் உபயோகிக்கக்கூடாது?

nathan

மாசத்துக்கு இரண்டு பீரியட்ஸ் வருதா.. காரணம் இதுவா இருக்கலாம்

nathan

மனம்: நலம்.. நலமறிய ஆவல்…

nathan