மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சுகமான பிரசவம் அமைய ஆயுர்வேத நூல்கள் கூறும் டிப்ஸ்கள்!

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியமான ஒரு தருணமாகும். இந்த கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது உடல் நலன் மீது முழு அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் தான் பெண்கள் தனது குழந்தையை பார்க்க போகிறோம் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்..

இந்த கர்ப்ப காலத்தில் பெண்கள் மகிழ்ச்சியை மட்டுமின்றி ஒரு சில வலிகளையும் உணர்கின்றனர்.. ஆனால் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அனுபவிக்கும் வேதனைகளும் சுகம் தான்.. கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின் போதும் அனுபவித்த அத்தனை கஷ்டங்களும் தனது குழந்தையின் பிஞ்சு முகத்தை பார்க்கும் போது காணாமல் போய்விடும் என்பது தான் உண்மை..

கர்ப்பமான உடனேயே ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு பிறகு, உங்களது மனதில் பல கேள்விகள் உதயமாகும்.. கர்ப்ப காலத்தில் எந்த விஷயங்களை செய்வது, எந்தெந்த விஷயங்களை செய்ய கூடாது என்பது போன்ற கேள்விகள் நிச்சயம் இருக்கும். எப்படி தூங்க வேண்டும்.. எப்படி உறங்க வேண்டும் ..? என்னென்ன சாப்பிட வேண்டும் ..? என்னென்ன சாப்பிட கூடாது ..? எவ்வளவு சாப்பிட வேண்டும் ? என்பது போன்ற கேள்விகளே உங்களுக்கு தலைவலியை உண்டாக்கிவிடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை..

நீங்கள் இதை பற்றி எல்லாம் கவலையே பட வேண்டியது இல்லை.. ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வுகள் குவிந்து கிடக்கின்றன.. பழங்கால ஆயுர்வேத புத்தகங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு என சிறந்த ஆயுர்வேத டிப்ஸ்கள் உள்ளன.. அவற்றை இந்த பகுதியில் காணலாம்..!

உணவு பழக்கம்

கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் உங்களை பட்டினி போட்டுக் கொள்வது என்பது குழந்தையை பட்டினி போடுவதற்கு சமமான ஒன்றாகும்.. எனவே எக்காரணத்தை கொண்டும் கர்ப்ப காலத்தில் பட்டினியாக இருக்காதீர்கள்.

ஊட்டச்சத்து உணவு

கர்ப்ப காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், கீரை வகைகள், தானிய வகைகள் என அனைத்தும் உணவில் கட்டாயம் இடம் பெற வேண்டியது அவசியமாகும். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் உண்ண வேண்டியது என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். இதனை சாப்பிட்டாலே ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம்..

முதல் மூன்று மாதங்கள்

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் கண்டிப்பாக வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியது இருக்கும். இந்த பிரச்சனைகளின் காரணமாக உங்களது உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் உடல் வறட்சியடைதல் பிரச்சனை உண்டாகும்.

இது போன்ற பிரச்சனைகளுக்கு திட உணவுகள் மற்றும் கெட்டியான உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை காட்டிலும் திரவ உணவுகளை சாப்பிடுவது என்பது வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு தீர்வளிக்கும்.

பால்

கர்ப்பிணி பெண்கள் பால் குடிப்பது இந்த குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாக அமையும். இந்த பாலில் கால்சியம், புரோட்டின், கொழுப்பு போன்றவைகளும் உள்ளதால் இது சிறந்த ஊட்டச்சத்து உணவாக இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.. பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது என்பது இந்த காலகட்டத்தில் முக்கியமான ஒன்றாகும்.

இரண்டாவது மூன்று மாதம்

இரண்டாவது மூன்று மாதங்களில் நீங்கள் நீர்ம உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும். இனிப்புகளையும், தானியங்களையும் அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். சமைக்கப்பட்ட பிரவுன் ரைஸ், தயிரில் சர்க்கரை சேர்த்து லசியாக குடிப்பது, பால் போன்றவற்றை எடுத்துக் கொள்வது என்பது ஆரோக்கியமான ஒன்றாக அமையும். 4 மாத குழந்தை சிறப்பாக வளர வேண்டும் என்றால், அதிகளவு புரோட்டின் உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும்.

மூன்றாவது டிரைமெஸ்டர்

மூன்றாவது டிரைமெஸ்டரில் நீங்கள் திட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது அவசியமானதாகும். கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும். தேவையான அளவு நீர்ம உணவுகளை சாப்பிட வேண்டியது என்பதும் முக்கியமான ஒன்றாகும். அத்துடன் தானிய உணவுகள், பாசிப்பயிறு உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா மூலிகை பொடியையும், நெய்யையும் பாலில் கலந்து கர்ப்ப காலத்தில் பருகுவது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதனை முதல் மூன்று மாதங்களில் பருக வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள சிசுவிற்கு எந்த விதமான பாதிப்பும் உண்டாகாது. அஸ்வகந்தா மூலிகையானது கர்ப்பிணி பெண்களுக்கு வலிமையை தரக் கூடிய ஒன்றாக உள்ளது.

இதனை பருகுவதால் பெண்கள் பிரச்சனையற்ற கர்ப்ப காலத்தினை பெற முடியும். அதோடு கர்ப்ப காலத்தினை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடிகிறது. சுத்தமான நெய் உங்களது ஆரோக்கியத்தினை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

இதனை தவிக்கவும்

கர்ப்ப காலத்தில் நீங்கள் கண்டிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளையோ அல்லது துரித உணவுகளையோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். மேலும் ஆல்கஹாலை தவிர்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இதை சாப்பிட கூடாது

கர்ப்ப காலத்தில் வெறும் வயிற்றிலும் அஸ்வகந்தா மூலிகையை சாப்பிடுவது கூடாது. மேலும் விரதம் இருந்தாலும் இந்த மூலிகையை சாப்பிடுவது கூடாது.

தவிர்க்க வேண்டியவை

மிகவும் சிரமமான உடற்பயிற்சிகள், கர்ப்ப காலத்தில் மிக அதிக தூரம் நடப்பது, அதிக எடைகளை தூக்குவது, நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது, அதிக நேரம் வெயிலில் அலைவது இவைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

தூக்கம்

கர்ப்ப காலத்தில் நன்றாக தூங்க வேண்டியது அவசியமாகும். மதிய நேரம் தூங்குவது நல்லது தான் ஆனால் பகல் தூக்கமானது உங்களது இரவு தூக்கத்தை கலைக்குமாறு இருப்பது கூடாது.

உணர்ச்சிகள்

கர்ப்ப காலத்தில் தாய் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் கோபப்படுவது, சோகமாக இருப்பது, பயப்படுவது, மிக அதிகமான அதிர்ச்சிகள் கூடவே கூடாது. இவை கருவில் இருக்கும் குழந்தையை பாதிப்பதாக இருக்கும்.

ஆயில் மசாஜ்

கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்தில் இருந்து பிரசவம் வரையில் தாய் ஆயில் மசாஜ் செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த மசாஜ் வலிகள், சோர்வாக உணர்வது, பிரசவத்திற்கு பிறகு தழும்புகள் வருவது, சருமம் சுருங்குவது போன்றவற்றில் இருந்து விடுதலை அளிக்க கூடியதாக இருக்கும். நீங்கள் விளக்கெண்ணெய், ஆளி விதை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டும் மசாஜ் செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button