24.7 C
Chennai
Monday, Jan 13, 2025
01 5 solanu
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

கீரைகளை கடவுள் நமக்கு தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் கீரைகளில் சத்துக்களானது அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் உள்ள பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைக்கச் சொல்வார்கள். மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான், அவர்களின் உடல் இன்று வரை மிகவும் வலிமையுடன் உள்ளது. அதுமட்டுமின்றி, அவர்களின் உடலை எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.

இத்தகைய கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது. இப்போது அந்த மணத்தக்காளி கீரையின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றிப் பார்ப்போமா!!!

வாய்ப்புண்

வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தொண்டை கரகரப்பு

தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், செரிமான பிரச்சனையும் நீங்கிவிடும்.

உடல் வெப்பம்

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வர, உடல் வெப்பம் தணியும்.

காசநோய்

காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.

கை கால் வலி

காய்ச்சல் வந்தால், கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும், காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.

சரும அலர்ஜி

சருமத்தில் அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், அப்போது மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால், விரைவில் குணமாகும்.

சிறுநீர் கோளாறு

சிலர் தினமும் சரியாக சிறுநீர் கழிக்கமாட்டார்கள். அத்தகையவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் சீராக வெளியேறி சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

கருத்தரிக்க…

உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், கரு வலிமை பெறும். குறிப்பாக பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும்.

கல்லீரல் பிரச்சனைகள்

மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காண மணத்தக்காளி கீரை பெரிதும் உதவியாக இருக்கும்.

அதிகப்படியான களைப்பு

அதிகப்படியான களைப்பு உள்ளவர்கள், இரவில் படுக்கும் போது மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், உடல் களைப்பை போக்குவதோடு, நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

நெஞ்சு வலி

மணத்தக்காளி கீரை மற்றும் பழத்தினை காய வைத்து, பொடி செய்து காலை மற்றும் மாலையில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு, இதயமும் வலிமையடையும்.

வலிமையான விந்தணு

முக்கியமாக ஆண்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணு வலிமையுடன் இருக்கும்.

Related posts

உடல் துர்நாற்றத்தை போக்குவது எப்படி…?

nathan

கையெழுத்து சொல்லும் ரகசியம்

nathan

எந்த ராசிக்கல் போட்டா நல்லது நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவரா? கண்டிப்பாக படியுங்கள்

nathan

ஜாக்கிரதை… குழந்தையை ஒரு நிமிடத்தில் கொன்றுவிடும்….

nathan

வயதான தோற்றத்திலிருந்தும் விடுபடல ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி!…

nathan

நாம் வலுக்கட்டாயமாக வாக்கர் மூலம் நடக்கப் பழக்கப்படுத்துவது இயற்கைக்கு முரணானது.

nathan

ஈஸியா தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியில் ஒன்றை செய்து பாருங்க

nathan

ஒரே நாளில் வியர்வை நாற்றம் போக வேண்டுமா?

nathan