மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!

பல தாய்மார்கள் குழந்தை மற்றும் தாய்க்கு இடையே தாய்ப்பால் தொடர்பானது இயற்கையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். பால் சுரப்பது முதல் குழந்தை மார்பகத்தில் பாலை உறிஞ்சுவது வரை நிகழும் ஏராளமான செயல்பாடுகளை இயற்கை என்ற ஒற்றை வார்த்தையில் கூறுவது பொருத்தம் தான்.

ஆனால் அது எளிமையானது என்று சொல்லி விட முடியாது. ஒவ்வொரு தாயும் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது பற்றி சில உபயோகமான குறிப்புகளைத் தெரிந்து கொண்டால், அது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாறிவிடும்.

தாய்ப்பால் கொடுக்கும் முறை

குழந்தை இயற்கையாகவே பாலை உறிஞ்சிக் குடிக்க அனுமதிக்க வேண்டியது முக்கியம். வற்புறுத்தி குழந்தையின் வாயை மார்புக்குக் கொண்டு வந்து அழுத்துவது, தவறான முறை என்பதோடு வலியும் எரிச்சலும் ஏற்பட்டு குழந்தை பட்டினியாகிவிட நேரும். இயற்கை உந்துதலினால் குழந்தைகள் எந்த உதவியுமின்றியே மார்பகத்திலிருந்து பாலை உறிஞ்சிக் குடிக்கக் கற்றுக்கொள்ளும். முதலில் எந்தப் பக்கம் திரும்புவது, எப்படி உறிஞ்சுவது என்ற குழப்பங்கள் ஏற்பட்டாலும் குழந்தை மார்பகத்தின் தோற்றம், மணம் ஆகியவற்றைக் கண்டு மிரண்டு தலையைப் பின்னுக்கு இழுத்தாலோ குழந்தையை மெதுவாகச் சமாதானப்படுத்தி சிறிது நேரம் கழித்து மீண்டும் உறிஞ்சச் செய்யலாம்.

வெவ்வேறு நிலைகளைத் தேர்ந்தெடுக்கவும்

தாய்ப்பால் கொடுப்பதில் பொதுவாக நான்கு முறைகள் உள்ளன. அவை தொட்டில் நிலை, இடைப்பட்ட நிலை, பிடிப்பு நிலை மற்றும் பக்கவாட்டு நிலை. குறுக்காக குழந்தையைப் பிடித்து, பாலூட்டும் பக்கத்தின் முழங்கை மேல் படுக்க வைப்பது தொட்டில் நிலை. இடைப்பட்ட நிலை என்பது தொட்டில் நிலை போலவே வைத்து இன்னொரு கையால் தலைக்கு ஆதரவு கொடுப்பது. பிடிப்பு நிலை என்பது குழந்தையின் உடலைத் தாயின் உடலிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்துப் பாலூட்டுவது. பக்கவாட்டு நிலை என்பது தாயும் குழந்தையும் ஒன்றாகப் படுத்துக் கொண்டு பாலூட்டுவது.

குழந்தையைத் தாங்குவதற்கு உதவியைப் பெறவும்

10 அல்லது 20 நிமிடங்களுக்கு குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு பாலூட்டுவது கையின் தசைகளுக்கு வலி ஏற்படுத்தும். எனவே அபோது ஒரு தலையணை கொண்டு குழந்தையை மார்பகத்தின் உயரத்திற்குத் தூக்கி நிறுத்தலாம். இதற்கென சில சிறப்புத் தலையணைகள் விற்கப்படுகின்றன என்றாலும் படுக்கையில் பயன்படுத்தும் சாதாரணத் தலையணையே கூட போதும்.

மார்பகத்தைச் சுத்தப்படுத்தவும்

குழந்தை பால் குடித்து முடிந்ததும் தவறாமல் மார்பகத்தைக் கழுவிச் சுத்தப்படுத்துங்கள். பால் சுரப்பிகளில் நோய்த் தோற்று ஏற்படாமல் தடுக்கவும், குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் இது அவசியம்.

வெப்பம் என்பது நோய்த்தொற்றின் அறிகுறி

பாலூட்டுவது வலி ஏற்படுத்தலாம். சில நேரங்களில் மார்பகத் தோலின் நிறம் வெளிறி காணப்படலாம் அல்லது மார்புத்தசை வழக்கத்தை விட அதிக சூடாக இருக்கலாம். இது நோய்த்தொற்றின் அறிகுறியாகும். அப்படியானால் உடனடியாக டாக்டரைக் கலந்தாலோசிக்க வேண்டும். நோய்த்தொற்று குணமாகும் வரை குழந்தையால் பாலை ஏற்க முடியாது.

குழந்தையுடன் நெருக்கத்தை அதிகரிக்கவும்

பாலூட்டுவது இயற்கையான நிகழ்வாக இருந்தாலும் தொடக்கத்தில் சற்றுக் கடினமாக இருக்கும். தாயும் சேயும் பாலூட்டுதலின் போது தொடுதல், உரசல், அணைப்பு மூலம் அன்பை வெளிப்படுத்துவார்கள். ஒருவேளை தாயுடன் குழந்தைக்கு நெருக்கம் ஏற்படுவதில் பிரச்சனை இருக்குமானால் உடைகளைக் களைந்து குழந்தையுடன் நெருக்கமாக சிறிது நேரம் செலவிடவேண்டும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button