முகப் பராமரிப்பு

ஆண்களே நீங்க எப்பவுமே இளமையா இருக்கணுமா? இதப் படிங்க…

பெண்களுக்கு இணையாக ஆண்களும் தங்களை எப்போதுமே இளமையாகவும் ஹேண்ட்சம்மாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் எவ்வளவு பேர் அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறார்கள் என்பது கேள்விக்குரிய விஷயமாகும்.

நல்ல பழக்கவழக்கங்கள், நல்ல உணவுகள், நல்ல உடற்பயிற்சி என்று எத்தனையோ விஷயங்கள் ஆண்களை இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன. ஆனால், அவ்வாறு இருப்பதற்கு அப்பாலும் சில வழிகள் உள்ளன.

 

சரி, நேரடியாக விஷயத்திற்கு வருவோம். எப்போதும் இளமையாகவும், ஹேண்ட்ஸம்மாகவும் ஆண்கள் இருப்பதற்கான சில அருமையான டிப்ஸ்களை இங்கே வழங்குகிறோம்.

தினமும் ஷேவிங் வேணாம்…

தினமும் ஷேவிங் செய்வதால், அது உங்கள் முகத்தில் உள்ள தோலைப் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, தினமும் ஷேவிங் செய்வதைத் தவிருங்கள்.

கண்களுக்கான சிகிச்சை

உங்கள் இரு கண்களுக்குக் கீழே கருமை அண்டாமல் பளபளப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு 3 நாட்களுக்கு ஒரு முறை கண்களின் மேல் வெள்ளரித் துண்டுகளை சிறிது நேரம் வைத்து எடுங்கள். இது கண்களைப் பாதுகாப்பாகவும், குளுமையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

பளபளப்பான சருமம்…

வறட்சியான சருமம் உங்களை எப்போதும் வயோதிகராகத் தான் காட்டும். அத்தகைய வறட்சியயைப் போக்க உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான நல்ல மாய்ச்சுரைசர்களை உபயோகப்படுத்துங்கள்.

4 முறை முகம் கழுவவும்

நீங்கள் எப்போதும் வீட்டுக்குள்ளேயே அல்லது அலுவலகத்திலேயே இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத தூசிகளும் கிருமிகளும் உங்கள் முகத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும். இவற்றைக் களைய, ஒரு நாளைக்கு 4 முறை உங்கள் முகத்தைக் கழுவுங்கள். உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பதத்தையும், சுருக்கங்களையும் போக்குவதற்கு இது உதவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button