சைவம்

சுவையான உருளைக்கிழங்கு குடைமிளகாய் சப்ஜி

குடைமிளகாயில் அதிகப்படியான வைட்டமின் சி நிறைந்திருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்த வந்தால், சருமத்தின் அழகு அதிகரிப்பதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் அந்த குடைமிளகாயை உருளைக்கிழங்குடன் சேர்த்து சப்ஜி போன்று செய்து, மதிய வேளையில் சாம்பார் சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.

இங்கு அந்த உருளைக்கிழங்கு குடைமிளகாய் சப்ஜி ரெசிபியை எப்படி சமைக்க வேண்டும் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் – 6

உருளைக்கிழங்கு – 2

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

உடைத்த முந்திரி – 2 டீஸ்பூன்

வேர்க்கடலை – 2 டீஸ்பூன்

புளி சாறு – 1/2 டீஸ்பூன்

வெல்லம் – 1/2 கப் (பொடி செய்தது)

கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு…

கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

எள் – 2 டேபிள் ஸ்பூன்

மல்லி – 1 டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் – 5

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கடலைப் பருப்பு, எள், மல்லி மற்றும் வர மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொர வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வறுத்து, பின் அதில் பெருங்காயத் தூள், முந்திரி, வேர்க்கடலை சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அரைத்து வைத்துள்ள பேஸ்ட், புளி சாறு மற்றும் வெல்லம் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, காய்கறிகள் வெந்ததும், அதனை இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான உருளைக்கிழங்கு குடைமிளகாய் சப்ஜி ரெடி!!! இது சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.

Related posts

பிர்னி

nathan

பனீர் வெஜ் மின்ட் கறி

nathan

காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு

nathan