அலங்காரம்நக அலங்காரம்

சரும நிறத்திற்கேற்ற நெயில் பாலிஷை தேர்ந்தெடுப்பது எப்படி?

nail-polishஉடலை அழகாகக் காட்டுவதில் குறிப்பாக கைகளை சுத்தமாகவும் அழகாகவும் காட்டுவதில் நகப்பூச்சு அல்லது நெயில் பாலிஷின் பங்கு முக்கியமானது. எனினும் சில சமயங்களில் மற்றவர்களை எடுப்பாகக் காட்டும் வண்ணம், நாம் உபயோகப்படுத்தும் போது சற்றும் பொருத்தமின்றி காணப்படும். அது மிகவும் மங்கலாகவோ அல்லது மிகவும் பொலிவிழந்ததாகவோ தெரியலாம். இல்லாவிட்டால் மிகவும் பிரகாசமான, பொருத்தமற்ற முகத்திலடிக்கும் நிறம் போல காணப்படலாம். எனவே சரியான நிறத்தை உபயோக்கிப்பது உங்கள் ஒட்டுமொத்த நிற வெளிப்பாட்டை நன்றாகத் தெரியச்செய்யும்.

நல்ல திடமான மற்றும் ஆரோக்கியமான நகங்களை வளர்க்க சில சூப்பர் டிப்ஸ்…

நீங்கள் நெயில் பாலிஷை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், உங்களுடைய சரும நிறம். உங்களுடைய சரும நிறத்திற்கு ஏற்றவாறு நெயில் பாலிஷை தேர்தெடுப்பது உங்கள் நிற அழகை உறுதி செய்யும். உங்கள் நிறத்திற்கேற்றவாறு நெயில் பாலிஷை தேர்ந்தெடுக்க அனைவரும் அறிந்த சரியான வழி, உங்கள் சரும நிறத்தை பொருத்தி தேர்வு செய்வது. அப்படின்னா என்ன?

* வெள்ளையான சரும நிறம் உடைய பெண்கள் வெளிர் நிறப் பூச்சுக்களை பயன்படுத்த வேண்டும்.

* நடுத்தர சரும நிறமுடையவர்கள் ஒரளவுக்கு பிரகாசம் குறைவான நிறமுள்ள நெயில் பாலிஷை பயன்படுத்தலாம்

* சற்று கருமையான நிறம் உடைய பெண்கள் நல்ல அடர்த்தியான வண்ணங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நகம் உடைவதைத் தடுக்க உதவும் நம்பகமான 7 வழிகள்!!!

இது நிறத்தை பொருத்துத் தேவையான ஒரு சுலபமான வழியாக இருக்கலாம். ஆனால், இதில் வரையறைகள் உண்டு. இந்த முறையில் உங்களுடைய தோற்றத்தை சரிசெய்வதில் வாய்ப்புகள் குறைவு. ஆனால், உங்கள் சரும நிறத்திற்கேற்ற சரியான பொருத்தமான நெயில் பாலிஷை தேர்ந்தெடுக்க இன்னும் சில வழிகள் உள்ளன. தொடர்ந்து படியுங்கள்.

மிகவும் வெள்ளையான சருமம் தேர்வு செய்ய வேண்டிய நிறங்கள்:

* பாஸ்டல் நிறங்கள் எனப்படும் உயர் ரக வெளிறிய தன்மையுடைய நிறங்கலைப் பயன்படுத்திப் பாருங்கள்.

* நீங்கள் மிகவும் அடர்த்தியான நிறங்களை பூச விரும்பினால் கருநீலம், நேவி ப்ளு ஆகியவை மிக அழகாகப் பொருந்தும். * அடர்த்தியான நிறங்களில் கருஞ்சிவப்பையும், அடர்த்தியான ரோஸ் நிறத்தையும் முயன்று பார்க்கலாம். நீங்கள் தவிர்க்க வேண்டிய நிறங்கள்:

* கருப்பு நிற நெயில் பாலிஷை அறவே தவிர்த்திடுங்கள் * இளம்சிவப்பை அதிகம் கொண்ட நிறங்களை தவிர்த்திடுங்கள்

* மிகவும் லேசான அல்லது கண்ணுக்குப் புலப்படாத நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அது உங்கள் சரும நிறத்திற்குள் மறைந்து காணாமல் போய்விட வாய்ப்புண்டு.

ஓரளவுக்கு வெள்ளையான சருமம் நீங்கள் முயன்று பார்க்க வேண்டிய நிறங்கள்:

* அனைத்து விதமான பாஸ்டல் நிறங்கள். * கருஞ்சிவப்பு மற்றும் நீல நிறங்கள்.

* ப்ளம், ஒயின் சிவப்பு நிறம், வாடாமல்லி, சில்வர் நிறம், வெள்ளை, வெளிறிய இளஞ்சிவப்பு, நீலம், ஆரஞ்சு மற்றும் ஆரஞ்சு கலந்த ரோஸ் (பீச்) நிறங்கள்.

தவிர்க்க வேண்டியவை:

சிவப்பைத் தவிர மிகவும் அடர்த்தியான அனைத்து நிறங்களையும் தவிர்ப்பது நல்லது.

நடுத்தர சருமம்

நடுத்தர அல்லது கோதுமை நிறம் உடையவர்கள் பல நிறங்களை உபயோகிக்கலாம். முயன்று பார்க்க வேண்டிய நிறங்கள்:

* லைட் பிங்க், வாடாமல்லி, நீலம் மற்றும் சிவப்பு நிறங்கள்.

* சில்வர் மற்றும் ஒயின் சிவப்பு நிறம்

* பீச் மற்றும் வெளிறிய ப்ரௌன் நிறம்

தவிர்க்க வேண்டியவை:

துரு அல்லது தங்க நிறங்களை தவிர்க்க வேண்டும்.

சராசரி கருமை நிறம் உடையவர்கள்

உங்களுக்கு அடர்த்தியான நிறங்கள் பொருந்தும்.

தேர்வு செய்ய வேண்டிய நிறங்கள்:

சிவப்பு, வாடாமல்லி, பிரகாசமான ஆரஞ்சு நிறம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது சிறப்பான தோற்றத்தைத் தரும்.

தவிர்க்க வேண்டிய நிறங்கள்:

மிகவும் வெளிறிய நிறங்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை மிகவும் பொலிவற்ற தோற்றத்தைத் தரும்.

குறிப்பு

* வெண்மை உங்கள் நகத்தின் நிறத்தையும், சரும நிறத்தையும் இணைக்கக்கூடிய ஒரு முக்கியமான நிறம். நீங்கள் எந்த தருணங்களுக்காக இந்த நிறங்களை அணியப்போகிறீர்கள் என்பதும் முக்கியமாக கவனிக்கப் படவேண்டிய விஷயம்.

* இதற்கு மேல் உங்கள் நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதும், அவ்வப்போது நகங்களை வெட்டுவதும் நகங்களை அழகாகக் காட்டும்.

* மேலே சொல்லப்பட்ட வழிகள் உங்களுக்குச் சிறந்த நிறங்களை உங்கள் சருமத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க உதவும். இருப்பினும் நீங்கள் பல முறை உங்களுக்கு பிடித்தமான வண்ணங்களை முயன்று பார்த்து தேர்ந்தெடுக்கவும் செய்யலாம்.

பொருத்தமான கலரா பூசுங்க.. கலக்குங்க..

Related posts

கண்களை அலங்கரியுங்கள்

nathan

வீட்டில் இலகுவாக நீங்களே ‘நெய்ல் ஆர்ட்’ செய்யலாம்

nathan

பட்டுச்சேலைகளை துவைக்கும் முறை

nathan

இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்!…

sangika

நீங்கள் உயரமாக பாதணிகளையா விரும்பி அணிகிறீர்கள்!

sangika

கண் ஒப்பனை

nathan

ஹாட் குயினாக போஸ் கொடுக்க மினி ஸ்கர்ட்டு…..

sangika

கலாக்காய்யின் நன்மைகள் பற்றித் தெரியுமா உங்களுக்கு இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்…..

sangika

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்……

sangika