முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பளிச்சென்ற முகத்தைப் பெற வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?

அனைவருக்குமே பிரச்சனை இல்லாத அழகான சருமம் வேண்டுமென்ற ஆசை நிச்சயம் இருக்கும். இதற்காக பலர் தங்களது சருமத்திற்கு பல்வேறு பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள். அப்படி மேற்கொள்ளும் பராமரிப்புக்களில் ஒன்று தான் ப்ளீச்சிங். சரி, ப்ளீச்சிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும். பொதுவாக அழகு நிலையங்களில் செய்யப்படும் ப்ளீச்சிங் முறையில் கெமிக்கல் கலந்த பொருட்கள் இருப்பதால், அவற்றை பயன்படுத்தும் போது, அவை சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை வெளியேற்றிவிடும். ஆகவே இந்த ப்ளீச்சிங்கை அடிக்கடி செய்தால் சருமமானது அதிக அளவில் பாதிக்கப்படும்.

எனவே ப்ளீச்சிங்கை அதிக பணம் செலவழித்து அழகு நிலையங்களில் செய்வதை விட, வீட்டிலேயே இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யலாம். சரி, இப்போது பளிச் முகத்தைப் பெற வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

1 சிட்டிகை மஞ்சள் தூளில், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.

இன்னும் சிம்பிளான ப்ளீச்சிங் முறை வேண்டுமானால், 2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து, முகத்தில் தடவி காய வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

இல்லாவிட்டால், ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

மேற்கூறியவற்றில் எது எளிமையாக உள்ளதோ, அவற்றை வாரம் இரண்டு முறை வீட்டிலேயே செய்து வாருங்கள். இதனால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பளிச்சென்ற முகத்தைப் பெறலாம்.

Related posts

ஜொலிக்கும் அழகு தரும் பலாப்பழ ஃபேஸ் பேக்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி முகம் கழுவினால் என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

nathan

உங்களுக்கு அழகான கண்கள் வேண்டுமா??

nathan