ஆரோக்கிய உணவு

ஆரோக்கியத்தைத் தரும் கொத்தமல்லி தோசை

கொத்தமல்லியில் எண்ணற்ற அளவில் கால்சியம், மக்னீசியம் இருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், செரிமான பிரச்சனை, அலர்ஜி, ஜலதோஷம் போன்றவற்றை குணமாக்கும் சக்தி உள்ளது. அதற்காக இதனை சட்னி மட்டும் தான் செய்து சாப்பிட வேண்டும் என்பதில்லை.

கொத்தமல்லியை தோசையாகவும் சுட்டு சாப்பிடலாம். இங்கு கொத்தமல்லியைக் கொண்டு எப்படி தோசை சுடலாம் என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

புளுங்கல் அரிசி – 1 கப்

பச்சரிசி – 1 கப்

உளுத்தம் பருப்பு – 1/2 கப்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – 3/4 கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3

துருவிய தேங்காய் – 1/2 கப்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் புளுங்கல் அரிசி மற்றும் பச்சரிசியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தையும் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஊற வைத்துள்ள அரிசிகளை கிரைண்டரில் போட்டு, அத்துடன் ஊளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தையும் கழுவிப் போட்டு மென்மையாக அரைக்க வேண்டும்.

அப்படி அரைக்கும் போது பாதியில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக சுட்டு, நல்லெண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத ்து எடுத்தால், சுவையான கொத்தமல்லி தோசை ரெடி!!!

Related posts

யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்? 10 பழச்சாறுகள்…

nathan

பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு என்னதாங்க சாப்பிட கொடுக்கணும்…..

nathan

ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால் பாலியல் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்: ஆய்வில் தகவல்

nathan